மூன்றாம் யாத்திரை
THE THIRD EXODUS 
63-06-30M
பிரன்ஹாம் கூடாரம்,
ஜெபர்ஸன்வில்,இந்தியானா,அமெரிக்கா.

 
1.  ஜெபத்திற்காக சற்று நேரம் தலைவணங்குவோம். நாம் தலை வணங்கி இருக்கும் போது, தேவனிடம் விசேஷித்த விண்ணப்பங்களை ஏறெடுக்க விரும்புவோர், உங்கள் கரங்களை உயர்த்தி, கரங்களின் கீழுள்ள உங்கள் மனதில், உங்கள் விண்ணப்பங்களை நினைத்துக் கொள்ளுங்கள். 
2. பரம பிதாவே, நித்தியத்திற்கு இந்தப் பக்கத்தில், மற்றுமொரு முறை நாங்கள் ஒன்று கூடியிருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்று காலை, நீர் எங்கள் பெலனைப் புதுப்பிக்கவும், எங்களுக்கு முன்வைக்கப்பட்டு உள்ள பயணத்தை மேற்கொள்ள எங்களுக்கு தைரியத்தையளிக்கவும், உம்மை எதிர் நோக்கியிருக்கிறோம். 
3. மன்னாவிற்காக அதிகாலையில் இஸ்ரவேல் ஜனங்கள் ஒன்று கூடினது போன்று, நாங்கள் இப்பொழுது ஒன்று கூடி வந்திருக்கிறோம். அந்த மன்னா அவர்களுக்கு முந்தைய இரவில் அளிக்கப்பட்டு, அடுத்த நாள் முழுவதிலும் அவர்களுக்குப் போஷாக்கை அளித்தது. எங்கள் பயணத்திற்கு அவசியமான பெலனைப் பெற்றுக் கொள்ள, ஆவிக்குரிய மன்னாவிற்காக நாங்கள் ஒன்று கூடி உள்ளோம். 
4. ஆண்டவரே, உயர்த்தப்பட்ட கரங்கள் ஒவ்வொன்றின் கீழுள்ள தேவைகளை நீர் அறிந்திருக்கிறீர். அவர்கள் தேவைகள் அனைத்தையும் நீர் சந்திக்க வேண்டுமாய், அவர்களுடைய விண்ணப்பங்களுடன் என்னுடைய விண்ணப்-பங்களையும் சேர்த்து ஏறெடுக்கிறேன். ஆண்டவரே, வியாதியஸ்தரையும் அவதியுறுகிறவர்களையும் சுகப்படுத்தும். நீரே தேவனென்றும், நீர் வாக்களித்து உள்ள எல்லாவற்றையும் நிறைவேற்ற உம்மால் கூடும் என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் அதற்கென, “நீ விசுவாசத்தை மாத்திரம் கடைபிடி'' (Only Believe) என்னும் பாடல் எங்களுக்கு அறிவுறுத்துவதை நாங்கள் கடைபிடிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். ''ராஜாவுடன் நடந்து அவருடன் உரையாடு' (Walk and Talk with the king) என்னும் பாடலில் அடங்கியுள்ள மகத்தான சொற்களையும் நாங்கள் கேட்டோம். 
5. இப்பொழுதும், பிதாவாகிய தேவனே, இன்று காலை புறப்பட்டுச் செல்ல இருக்கும் உமது வார்த்தையை ஆசீர்வதிப்பீராக-! எங்கள் இருதயங்களில் அது இளைப்பாறும் ஸ்தலத்தை கண்டடைந்து, நாங்கள் கேட்பவைகளை அருள-ட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இவைகளைக் கேட்கிறோம். ஆமென்.
''கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவோம் வாருங்கள் என்று அவர்கள் சொன்னபோது நான் மனமகிழ்ச்சியாயிருந்தேன்'' என்று உரைக்கப்பட்டு உள்ளது.
6. ஹாட் ஸ்பிரிங்ஸ் (Hot Springs) என்னுமிடத்தை நான் நேற்றுவிட்ட போது, சகோ.மூர் என்னிடம், ''டெக்சாஸில் நடக்கும் கன்வென்ஷனில் என்னுடன் நீங்கள் கலந்து கொண்டு இரண்டு நாட்கள் அங்கு இளைப்பாறலாமே'' என்று கேட்டுக் கொண்டார்.
“நாளை எனக்கு இரண்டு ஆராதனைகள் இருக்கின்றன,'' என்றேன்.
“இரண்டு ஆராதனைகளா-?" என்று அவர் அதிசயத்துடன் வினாவினர். நான், “ஆம்,'' என்றேன். 
7. “இங்கு கடினப்பட்டு நீங்கள் பிரசங்கம் செய்தீர்கள். அப்படிப்பட்ட ஒருவர் அத்தகைய கடின உழைப்பிற்குப் பின்பு ஒரு வாரமாவது ஓய்வு பெற வேண்டும். சபை போதகரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஞாயிறு காலை பிரசங்கம் நிகழ்த்தி விட்டு, அந்த வாரம் பூராவும் ஓய்வெடுத்துக் கொள்கிறார். சுமார் முப்பது நிமிடங்கள் மாத்திரமே அவர் பிரசங்கம் செய்வார். நீங்களோ அன்றாடம் ஒவ்வொரு முறையும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பிரசங்கம் செய்து விட்டு அதை தொடர்ந்து ஜெப வரிசையில் உள்ளவர்க்கு ஜெபம் செய்கின்றீர்கள். பகுத்தறிவின் வரம் வேறு உங்கள் மூலம் அப்பொழுது கிரியை செய்கின்றது. அப்படியிருக்க, இப்பொழுது நீங்கள் வீடு திரும்பி, ஞாயிறன்று 2 ஆராதனைகள் நடத்தப் போவதாகக் கூறுகின்றீர்களே-!'' என்றார்.
நான், “ஆம், ஐயா,” என்று பதிலளித்தேன்.
''உங்களால் எப்படி முடிகின்றது-?'' என்று அவர் கேட்க, நான் ''கர்த்தரிடத்தில் இருந்து எனக்கு ஒத்தாசை வருகின்றது'' என்று விடையளித்தேன்.
8. 'காலதாமதமாகி விட்டது'' என்று ஒருவர், நான் உள்ளே நுழையும் போது, ஜெபம் செய்தார். ஆம், காலதாமதமாகி விட்டது. ஊழியத்தின் அவசியமும் அதிகமாகிக் கொண்டு வருகின்றது. நாம் வாழும் இம்மகத்தான நேரத்தில், நமக்களிக்கப்பட்டுள்ள பாகத்தை நாம் வகித்து, உதவி செய்ய வேண்டியவர்- களாய் இருக்கிறோம். 
9. கர்த்தருக்குச் சித்தமானால் இன்றிரவு, “உங்கள் வாழ்க்கை சுவிசேஷத்தி-ற்குத் தகுதியாய் அமைந்துள்ளதா-?'' என்னும் பொருளின் பேரில் பேச எத்தனித்துள்ளேன். நான் அதை ஒலிநாடாவில் பதிவு செய்ய விரும்புகின்-றேன். காலை செய்தியை அவர்கள் பதிவு செய்யப் போகின்றார்களா இல்லையா-? என்று எனக்குத் தெரியாது. ஒலிப்பதிவு அறையில் சிலரை நான் காண்கிறேன். 
10. சகோ. நெவில் இதை செய்வார் என்று கருதுகின்றேன். சென்ற ஞாயிறன்று நான் அவரிடம், அவருடைய செய்திக்குப் பிறகு என்னுடைய செய்தியை அளிப்பேன் என்று கூறினேன். இந்த ஞாயிறு பள்ளி பாடத்தை அவர்கள் ஒலிப்பதிவு செய்தால் நலமாயிருக்கும். 
11. கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த ஞாயிறன்று, கர்த்தர் அனுமதித்தால், அனேக நாட்களாக நான் பேசவேண்டுமென்று விரும்பி உள்ள பொருளின் பேரில் பிரசங்கம் செய்வேன். நான் ஏற்கனவே உங்களுக்கு வாக்களித்தபடி, அத்தகைய செய்திகளை முதலில் இந்த கூடாரத்தில் பிரசங்கம் செய்து அவைகளைப் பதிவு செய்வேன். அடுத்த ஞாயிறு காலை, இயேசுகிறிஸ்துவை இச்சந்ததியார் சிலுவையில் அறைந்தார்கள் என்னும் குற்றச்சாட்டை அவர்கள் மேல் சுமத்தப்போகின்றேன். இன்றிரவு 7 அல்லது 7.30 மணிக்கு, “உங்கள் வாழ்க்கை சுவிசேஷத்திற்குத் தகுதியாய் அமைந்துள்ளதா-?” என்னும் செய்தியை அளிப்பேன். 
12. இப்படிப்பட்ட செய்திகளை நான் அளிக்கும் போது, சில சமயங்களில் நான் கடிந்து கொள்ளும் சொற்களை உபயோகிக்கிறேன். அது இச்சபையோருக்கு அல்ல. என் செய்தி உலகெங்கும் செல்கின்றது என்பதை நினைவில் கொள்ளவும், அந்த ஒலி நாடாக்களை உலகிலுள்ள மக்கள் அனைவரும் கேட்பதற்காக, அதற்கென்று ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்செய்தி-களை அவர்கள் காடுகளில் வாழ்வோரிடத்திலும்கூட கொண்டு செல்கின்றனர். சில நேரங்களில், ஆஸ்திரேலியா அல்லது மற்ற பாகங்களில் உள்ளவர் கேட்க வேண்டுமென்று பரிசுத்தாவியானவர் விரும்புவதை, நான் இச்செய்தி-களில் கூறவேண்டுமென அவர் என்னை ஏவுவதுண்டு.
13. ''அவர் குறிப்பிடும் சூழ்நிலை இங்கில்லையே-! பின்னை ஏன் அவர் அவ்விதம் கூறுகின்றார்-?'' என்று நீங்கள் வியக்கலாம். அது வேறெங்காவது உள்ளவர்களுக்காக கூறப்படலாம். இதை நீங்கள் புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்.
இச்செய்திகள் தனிப்பட்ட எந்த ஒருவருக்கும் விரோதமாக அளிக்கப்படுவது இல்லை. பொதுவாக சபைக்காக இது அளிக்கப்படுகின்றது. நான் எதைக் கூற வேண்டுமென்று கர்த்தர் விரும்புகின்றாரோ, அதையே நான் கூறுகின்றேன். 
14. ஹாட் ஸ்பிரிங்ஸில், பழமையான பெந்தெகொஸ்தே கூட்டம் ஒன்றில், எங்களுக்கு மகத்தான நேரம் உண்டாயிருந்தது. அதில் பங்கு கொண்ட உங்களில் சிலர், பெந்தெகொஸ்தேயினர் அநேகர் அக்கூட்டதிற்கு வந்து இருந்ததைக் குறித்து மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த குழுவைக் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. நான் ஒரு வாரம் அதில் பங்கு கொண்டு, 2 அல்லது 3 நாட்கள் செய்தியளிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்-பட்டு இருந்தது. ஒன்று மாத்திரம் என்னால் கூற முடியும். அக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் போதிய விசுவாசம் உண்டாயிருந்தது. இந்த மூலையில் அமர்ந்திருக்கும் அம்மையார் அங்கு வந்திருந்தார்கள். அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது. அந்த கூட்டத்தில் அவர்கள் பங்கு கொண்டார்கள் என்று எனக்குத் தெரியும். சகோ.ஜாக்சனும் சகோ. பாமரும் (Bro.Palmer) அங்கு வந்து இருந்தனர்.
15. விசுவாசம் உள்ளவர்கள் நன்மையைப் பெறுகின்றனர். சுகம் பெறுவதற்காக வரிசையில் அங்கு நின்றவர்களைக் கவனித்தீர்களா-? ஒருவராவது தேவன் இடம் சுகம் பெறாமல் அவ்விடம் விட்டுச் செல்லவில்லை. 
16. நீங்கள் விசுவாசம் கொள்ளும் போது.... அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, கூச்சலிட்டு, நடனமாடினதை உங்களில் சிலருக்குப் புரியாமல் இருந்திருக்கும். அவர்கள் எந்த மனிதனையும் நோக்கிப் பார்க்கவில்லை. அவர்கள் தேவனுக்கு முன்பாக கூச்சலிட்டனர். அவ்வளவு தான். 
17. அங்கிருந்த பெண்கள் கூந்தலை நீளமாக வளர்த்து, தேவனுடைய சமூகத்தில் சுத்தமாகக் காணப்பட்டனர். அவர்கள் காடுகளிலிருந்தும் புதர்களில் இருந்தும் வந்து அங்கு குழுமியிருந்தனர். நவீன நாகரீகம் கொண்ட எவரையும் நான் அங்கு காணவில்லை. (நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்) வர்ணம் தீட்டினவர் போன்றவர்கள். அவர்களுடைய போதனைகள் அனைத்தும் நான் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் காண்பதற்கு அவர்கள் கிறிஸ்தவர்களைப் போல் இருந்தனர். 
18. நேற்று, அல்லது, அதற்கு முந்தின நாள், “இன்னும் ஒரு முறை, ஆண்டவரே'' என்னும் செய்தியையளிக்க கர்த்தர் என்னை ஏவினார். ஒரு நோக்கத்திற்காக அப்படிச் செய்தேன் என்பதை அச்சபையோரில் சிலர் அறிந்து கொள்ளவில்லை. அச்சிறு குழு எங்கோ வழிதவறி சென்றுக் கொண்டு இருக்கின்றது. அதற்காகவே அச்செய்தியையளிக்க கர்த்தர் என்னை ஏவினார்.
அங்கு மிகவும் அற்புதமாயிருந்தது. உங்களுக்கு ஆவிக்குரிய கண்கள் இல்லா-விடில், உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. இவைகளை நீங்கள் எதிர் பார்க்க வேண்டும். 
19. நான் உள்ளே நுழையும்போது, சகோ. =உன்கிரன், “நான் ராஜாவுடன் நடந்து உரையாடிக் கொண்டிருக்கிறேன்'' என்னும் பாடலைப் பாடிக் கொண்டு இருந்தார். அவர் பாடுவதை நான் கேட்பது இது 2-ம் முறையாகும். எவ்வளவு அருமையாயுள்ளது-! என்று நான் நினைத்துக் கொண்டேன். ராஜாவுடன் நடந்து உரையாடுவது என்பது எந்நேரமும் அவருடன் கொண்டு உள்ள ஐக்கியத்தைக் குறிக்கின்றது. சபையில் மாத்திரமல்ல, எல்லா இடங்க-ளிலும் அவருடன் நடந்து உரையாடுவதாகும். 
20. அந்த சுவரைப் பாருங்கள். ஜார்ஜ் டாட் (George Todd) என்பவர் எனக்காக வர்ணம் தீட்டிய ஓவியம் ஒன்று அங்கு மாட்டப்பட்டிருக்கிறது. ஏன் அவர் அந்த ஓவியத்தை வரைந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அங்கு காட்டினுள் ஒரு மலை காணப்படுகின்றது. அதனின்று ஒரு அருவி சலசலத்து கீழே பாய்ந்து வருகின்றது. அருவியின் மறுபக்கத்தில் ஒரு பெண் மானும் அதன் குட்டியும் காதுகளை மேல் தூக்கிய வண்ணம் அருவியை நோக்கிக் கொண்டிருக்கின்றன. திரு.டாட் இங்கு இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரை எனக்குத் தெரியாது. ஆனால் இதை நான் கூறவிரும்புகிறேன். அந்த ஓவியத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, கர்த்தர் என்னுடன் பேசினார். அவ்விதம் சம்பவிக்குமென்று, அந்த ஓவியத்தை தீட்டிய போது அவர் நினைத்து இருக்கமாட்டார். 
21. ஒரு மனிதன் அந்த மானைச் சுடப்போகிறான் என்று நான் கூறின சிறு கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா-? நல்லது, அந்த பெண்மான் குட்டியுடன் ஜீவத் தண்ணீர்களண்டையில் இருக்கின்றது. அப்பொழுது நான் "ஆம், மறு கரையில் அங்கே என்றென்றும் பசுமையிருக்கும் மரங்களின் அருகியில் அங்கே காத்துக்கொண்டிருக்கின்ற ஒரு தாயையும் மகளையும் உடையவனாக உன்ளேனே,'' என்று நினைத்தேன்.
சகோ. ஜார்ஜ்-டாட் இங்கு இருப்பாரெனில், சகோதரனே, மிக்க நன்றி. 
22. இப்பொழுது ஞாயிறு பள்ளி போதனையை ஆரம்பிக்கலாம். வழக்கமாக அது நீண்ட ஓன்றாக இருக்கும். நேற்று முதல் என் இருதயத்தில் ஒரு செய்தி அசைவாடிக் கொண்டே இருக்கின்றது. இப்பொழுது, நாம், கர்த்தர், நமக்கு பேச வேண்டியபொருளாய் இருக்குமானால். எனக்கும் வயதாகின்றது, இன்னும் எவ்வளவு காலம் நான் இவ்வுலகில் இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது.
23. ஆனால் சில விஷயங்களின் பேரில் சபையில் அநேக கருத்து வேற்றுமை-கள் காணப்படுகின்றன. உதாரணமாக ஏவாள் பழத்தையா புசித்தாள் என்பதில். அதைக்குறித்து நான் செய்தியளித்தேன். அவள் பழங்களை புசிக்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். வேத வாக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு அதை என்னால் நிரூபிக்க முடியும். அநேக குழப்பங்கள் ஏற்பட்டன. 
24. நாங்கள் இவ்விடம் விட்டுச் செல்லும் முன்பு இன்னும் 30-நாட்களில் நாங்கள் அரிசோனாவுக்குச் செல்லவேண்டும். எனவே கர்த்தருக்கு சித்தம் ஆனால் நான் போவதற்கு முன்பு ஒரு பொருளின் பேரில் பேச வேண்டும் என்று எனக்கு விருப்பமுண்டு. அதை நீங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்ய வேண்டாம். அப்படி செய்தால், அந்த ஒலிநாடாக்களை நீங்கள் விற்க வேண்டாம். அந்த செய்தி வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம். 'விவாகமும் விவாகரத்தும்' என்பதன் உண்மையான சத்தியத்தை நான் உங்களுக்கு விவரிக்க விரும்புகிறேன். அதைக் குறித்து சபையில் ஓர் கேள்வி எழுந்துள்ளது. இது கடைசி மணி நேரங்களாக இருப்பதால், தேவ ரகசியங்கள் அனைத்தும் நிறைவேறி முடிய வேண்டும். 
25. நேற்று பகலில் நான், மலைகளின் வழியாக வந்து கொண்டிருக்கும் போது, ''அந்த செய்தியை ஒலிப்பதிவு செய்து வைத்து விடு'', என்று பரிசுத்தாவி ஆனவர் என்னிடம் கூறினது போல தோன்றிற்று. 
26. எதற்கென்று எனக்குத் தெரியாது. ஆனால் விவாகமும் விவாகரத்தும், என்பதைக் குறித்த உண்மை என்னவெனில், சிலர், ''ஜனங்கள் விபச்சாரம் செய்ததாக அறிக்கை செய்தால், அவர்கள் விவாகம் செய்து கொள்ளலாம்,'' என்கின்றனர். வேறு சிலர் 'ஒருவருக்கொருவர் கொடூரமாக நடந்து கொண்டு, அவர்களிருவரும் ஒன்றாக வாழ்க்கை நடத்த முடியவில்லை என்றால், அவர்கள் பூமியில் நரகத்தை அனுபவிப்பதைக் காட்டிலும், சமாதானத்துடன் வாழ்வது (அதாவது பிரிந்து விடுவது) நல்லது'' என்கின்றனர். இவ்விதம் வித்தியாசமான கருத்துக்கள் எழுகின்றன. சிலர் அவர்களை சரியான முறையில் விவாகம் செய்து வைக்கின்றனர். மற்றும் சிலர் பரிசுத்த ஜலத்தை அவர்கள் மீது தெளித்து, அவர்கள் விவாகம் செய்தவர்களாகக் கருதப்படக் கூடாது என்று கூறி, அவர்களுக்கு ஆசீர்வாதம் மாத்திரம் கொடுத்து, சபையில் மறுபடியும் சேர்த்துக் கொள்கின்றனர். எல்லாவித குழப்பங்களும் காணப்படு- கின்றன. இவ்வளவு குழப்பம் இருக்குமென்றால், எங்காவது அதைக் குறித்த உண்மையும் இருக்கவேண்டும். 
27. இதை நான் பயபக்தியுடன் கூறுகின்றேன். ஆண்டவர் இதைக் குறித்த உண்மையை எனக்கு வெளிப்படுத்தித் தந்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இது சபைகளை அடைந்தால், அது அவர்களைக் கிழித்து விடும். அது அப்படித் தான் நடக்கும். சபை போதகர்கள் இச்செய்தியை ஒலிநாடாவில் முதலில் கேட்டுவிட்டு, பின்பு வேண்டுமானால் சபையோரை வழிநடத்தலாம்; இதையே நான் விரும்புகிறேன். இதைக்குறித்த உண்மையான சத்தியத்தை அறிவிக்கவே இதை ஒலிப்பதிவு செய்ய எத்தனிக்கிறேன். 
28. இந்த ரகசியங்கள் நிறைவு பெற, முழுமை பெறப் போகிற மணி நேரம் இதுவே என்பதை நான் நம்புகிறேன். ஏழு சபை காலங்களின் பேரிலும், ஏழு முத்திரைகளின் பேரிலும் நாம் செய்தியளித்த முதற்கு, அவை வெளியாகத் தொடங்கி விட்டன. இப்பொழுது நாம் ஏழு எக்காளங்கள், ஏழு கலசங்கள் இவைகளில் அடங்கியுள்ள இரகசியங்களை அறிந்துகொள்ள காத்து இருக்கி றோம். வேண்டுமானால் 2-வாரக் கூட்டம் ஒன்றை நாம் ஒழுங்கு செய்து, இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து செய்தியளிக்கலாம். 
29. அது ஒலிப்பதிவு செய்யப்பட வேண்டுமென்று விரும்புகிறேன். அது மாத்திரமல்ல, ஏழு சபை காலங்களின் செய்தியை புஸ்தக வடிவில் கொண்டு வரமுயன்று வருகின்றோம். இச்செய்தியை 7-புஸ்தகங்களாக, 7- ஒலிநாடாக் களாக மலிவான விலையில் தயாரித்தால், எல்லோரும் அவைகளை வாங்கிக் கொள்ள வாய்ப்புண்டாகும்.
30. கர்த்தருடைய வருகை தாமதித்து, நான் ஒருக்கால் இவ்வுலகை விட்டுக் கடந்து போக நேர்ந்தால், நான் கர்த்தரின் நாமத்தில் கூறின அனைத்தும் அவ்வாறே நிறைவேறுவதை நீங்கள் காண்பீர்கள். நான் கூறினவை இதுவரை தவறானதில்லை. சில சம்பவங்கள் பிற்காலத்தில் நிகழவேண்டியவைகளாக இருக்கின்றன. 
31. அதை இப்பொழுதே பிரசங்கிக்க கர்த்தர் அனுமதிப்பாரென்று நம்புகிறேன். அது பிரசங்கிக்கப்படவிருக்கும் நாளை நாங்கள் ஜனங்களுக்கு அறிவிப்போம். ஏனெனில் அநேகர் அதைக் கேட்க ஆவலுள்ளவராயிருக்கின்றனர். அதை நான் பாராட்டுகிறேன்.
32. இதை யாருமே நம்பாமல், அல்லது கேட்க விரும்பாதவர்களாய் இருப்பார்-களானால், அதைக்குறித்து நான் பிரசங்கிப்பதனால் என்ன பயன்-? அப்படி ஆனால் அது தண்ணீர்கள் மேல், அப்பத்தை போடுவது போல் இருக்கும் (பாருங்கள்-?) அது... பன்றிகளுக்கு முன்பு முத்தைப் போடுவதற்கு சமானமாய் இருக்குமே-! ஆனால் ஆயிரக்கணக்கானவர் அதை விசுவாசிக்கின்றனர். கூறப்-படும் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்கள் இறுகப்பற்றிக் கொள்கின்றனர். எனவே தேவனுடைய மகிமைக்காக இவ்வாராதனைகள் ஒழுங்கு செய்யப் பட்டால், கூடுமானவரை அநேகர் கலந்து கொள்ளவதையே நாங்கள் விரும்பு-கின்றோம். அக்கூட்டங்களை ஒழுங்கு செய்ய கர்த்தர் அனுமதிப்பாரென்று நம்புகிறேன். 
33. அவருடைய ஏவுதல் இல்லாமல் இவைகளை ஒழுங்கு செய்ய எனக்குப் பிரியமில்லை.
34. எல்லாவற்றிற்கும் தேவன் ஒரு நேரத்தைக் குறித்திருக்கிறார். (பாருங்கள்) அதற்கு முன்பாக நாம் எதையும் செய்துவிடக் கூடாது. கோதுமை முதிர்வு அடையும் முன்பே அறுவடை செய்தால், கோதுமையில் பெரும்பாலானதை நாம் இழந்து விடுவோம். அறுவடைக்கு அது ஆயத்தமாகும் போது தேவன் அரிவாளை நீட்டுவார். அப்பொழுது நாம் அறுவடை செய்ய செல்வோம். 
35. சில சமயங்களில் இது போன்ற உணர்ச்சி எனக்குத் தோன்றும் போது, அதை உதறி விடவேண்டுமென்று நான் நினைப்பதுண்டு. நேற்று முழுவதும், நேற்று இரவும்கூட, என் சிந்தனையை விட்டு அது அகலவில்லை. சுமார் 12-மணிக்கு நான் படுக்கைக்குச் சென்றேன். அதற்கு முந்தைய இரவும்கூட, மூன்று மணி நேரம் மாத்திரமே நான் உறங்கினேன். நேற்றிரவு எனக்கு உறக்கமே வரவில்லை. ஏதோ ஒன்று, ''விவாகமும் விவாகரத்தும் என்பதை ஒலிநாடாவில் பதிவு செய்,'' என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. 
36. கர்த்தருக்கு சித்தமானால், அது என் இருதயத்திலேயே குடி கொண்டு இருந்ததால், அதைக்குறித்து ஆண்டவர் அதிகம் வெளிப்படுத்தித் தருவார் ஆனால், அதை நான் ஒலிநாடாவில் பதிவு செய்வேன். பாருங்கள்-?
37. அது சபை போதகர்களுக்கு மாத்திரமே என்பது நினைவிருக்கட்டும். வேண்டுமானால் நீங்கள் வந்து செய்தியைக் கேளுங்கள். ஆனால் அந்த ஒலி நாடா.... ஏனெனில் அது சபையோரை அடைந்தால், ஒருவர் இந்த விதமாக-வும், ஒருவர் அந்த விதமாகவும் அதை வியாக்கியானம் செய்து தங்கள் சொந்த கருத்துக்களை உண்டாக்கிக் கொள்வார்கள். என் சகோதரராகிய போதகர்கள் அதை தனியாகக் கேட்டு ஆராய்ந்து பின்பு அதை சபையோருக்கு அறிவிக்கட்டும். ஏனெனில் அவர்கள் தாம் சபைக்குப் பொறுப்பாளிகள்; அவர்கள் தான். 
38. இந்த ஒலிநாடாவை நீதிபதிகளுக்கும் பட்டினத்திலுள்ள பெரியோர்களுக்கும் போட்டு, விவாகமும் விவாகரத்தும் என்பதைக் குறித்து ஆண்டவர் என்ன சொல்கின்றார் என்பதை அறிவிக்கலாம். ஆனால் ஜனங்கள் நினைப்பதைக் காட்டிலும் இது பரிசுத்தமானது. அது சர்ப்பத்தின் வித்து' என்னும் சத்தியத்து-டன் மிக நன்றாக இணையும். இவை இரண்டும் ஒன்றாகவே இயங்கி வருகின்றன; அது தான் அந்த பரமரகசியங்கள்.
ஏழாம் தூதனுடைய நாட்களில் எல்லா தேவரகசியங்களும் நிறைவேற வேண்டும்.- இதுவரை அந்த அறியாதிருக்கின்ற காரியங்களை கர்த்தர் வெளிப்படுத்தி முடிப்பார்.
39. நினைவில் கொள்ளுங்கள் ஏழரை மணிக்கு நாம் ஆரம்பிக்கிறோம். அல்லவா-? சகோ.நெவில், இன்றிரவு உங்களுக்குச் செய்தியிருக்குமானால் அதை பிரசங்கியுங்கள். எனக்கு ஒரு மணி நேரம் அல்லது நாற்பத்தைந்து நிமிடங்கள் தான் ஆகும். சகோ.நெவில் பிரசங்கிப்பதைக் கேட்க எனக்கு மிகவும் ஆவல். அவரை நான் நேசிக்கிறேன். அவர் என் சகோதரன். அவர் மிக அருமையான சொற்பொழிவாளர். அற்புதமான போதகர். சகோ.நெவிலைக் குறித்து ஒரு காரியம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஏதாவதொன்றைக் கூறினால், அதையே வாழ்ந்துகாட்டுவார். அதுதான் மிகவும் முக்கியமானது. ஒருவனுக்கு நீங்கள் வாயினால் பிரசங்கம் செய்வதைக் காட்டிலும், உங்கள் வாழ்க்கையின் மூலம் அதைக் காட்டிலும் மேலான பிரசங்கம் ஒன்றைச் செய்யலாம். ''சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிரூபம் நீங்கள் தானே.'' 
40. நாம் வேதாகமத்தின் பக்கங்களை புரட்டலாம். ஆனால் இந்த ஞாயிறு பள்ளி போதனையை தேவன் தாம் திறந்து கொடுக்க வேண்டும். அதை செய்ய அவரிடம் கோருவோம்.
41. பரம பிதாவே, விசுவாசத்தின் மூலம் நாங்கள் எதிர்காலத்தை நோக்குகி-றோம். ஆண்டவரே, உம்முடைய மக்களை ஒன்று சேர்க்கும் ஏதோ ஒன்று பூமியின் மீது வருவதை நான் விசுவாசத்தால் காண்கிறேன். ஸ்தாபன சபைகளில் ஒன்றுக்கொன்று வித்தியாச பேதங்கள் அதிகம் காணும் போது, அது ஜனங்களை புறம்பாக்குவதாய் அமைந்துள்ளது. 
42. எகிப்தில் யோசேப்பை அறியாத பார்வோன் தோன்றினான். அவ்வாறே ஜெர்மனியில் ஹிட்லரும், ருஷியாவில் ஸ்டாலினும், இத்தாலி நாட்டில் முசோலினியும் தோன்றினர். இவர்கள் எல்லோரும் யூதர்களை வெறுத்தனர். அவர்கள் தங்களுடைய சொந்த தேசத்திற்கு திரும்ப வேண்டும் என்பதற்-காகவே இவர்கள் எழுப்பப்பட்டனர்.
43. தேவனே, நீர் கையாளும் முறைகள் எங்களுக்குப் புரிவது கிடையாது. நீர் தான் யூதர்களின் மேல் அழுத்தத்தைக் கொண்டு வந்தீர். யூதர்களுக்கு ஜெர்மனியில் தங்குவதற்கு வீடுகள் இல்லாமற்போயின. அவர்களிடமிருந்து எல்லாம் பறிக்கப்பட்டது. அவ்வாறே இத்தாலியிலும் ருஷியாவிலும் அவர்கள் போவதற்கு இடமில்லை. வார்த்தை நிறைவேற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் தங்கள் சொந்த தேசத்திற்கு விரட்டியடிக்கப்பட்டனர். 
44. ஓ, ஜனங்கள் துன்புறுவதைக் காணும் போது, தேவனுடைய அன்புள்ள கரங்கள் கொடூரமாகத் தென்படுகின்றன. ஆயினும், தமது சிறு பிள்ளைகளை வழிநடத்தும் யேகோவாவின் மிருதுவான கரங்களாகவே அவை இப்பொழுதும் அமைந்துள்ளன. ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். 
45. ஆண்டவரே, ஸ்தாபனங்கள் இப்பொழுது விசுவாசிகளை வற்புறுத்தி, அவர்களை சபை பிரதஷ்டம் செய்து, அவர்களுடைய பெயர்கள் தங்கள் புஸ்தகங்களில் எழுதப்பட வேண்டும் என்றும், இல்லையேல் அவர்கள் இரட்சிப்பு அடைய முடியாதென்றும் கூறி மற்ற குழுவுடன் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது என்று கட்டாயப்படுத்தும் நாட்களை நான் காணும் போது, யேகோவாவின் மென்மையான கரங்கள், அவர்களை ஜீவ விருட்சத்திற்கு வழி நடத்துவதை நான் உணருகிறேன். 
46. தேவனே, அவர்கள் ஒவ்வொருவரும்... அவர்கள் நிச்சயமாக ஜீவ விருட்சத் திற்கு வழிநடத்தப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் அது உமது வார்த்தை. அது ஒருபோதும் தவறுவதில்லை. நாங்களும் ஜீவவிருட்சத்திற்கு வழி நடத்தப்பட்டு, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளவும், தேவனுடைய கரத்தை நாங்கள் கண்டு கொண்டு, இப்பொழுது நாங்கள் நடந்து கொண்டு இருக்கும் நிழல்களுக்கு அப்பாலுள்ள வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை எங்கள் விசுவாசக் கண்களால் காண கிருபையருளும்.
47. நான் எழுதி வைத்துள்ள வேதவாக்கியங்களையும், குறிப்புகளையும் இக்காலையில் ஆசீர்வதியும். நானும் சபையோரும் எங்களை இப்பொழுது அர்ப்பணிக்கும் இந்நேரத்தில் பரிசுத்தாவியானவர் தாமே இறங்கி வந்து, என் வார்த்தைகளையும், சிந்தனையையும், சபையோரின் புரிந்து கொள்ளும் செவிகளையும் இருதயங்களையும் விருத்தசேதனம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். உமது வசனத்தின் மூலம் எங்களுடன் பேசும். உமது வசனமே சத்தியம். வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவைகளைக் கேட்கிறோம். ஆமென். 
48. யாத்திராகமத்துக்கு உங்கள் வேதாகமங்களைத் திருப்புங்கள். யாத்தி- 3-ம் அதிகாரம் 1--12 வசனங்களைப்படிக்க விரும்புகிறேன். கூர்ந்து கவனியுங்கள். 
“மோசே மீதியான் தேசத்து ஆசாரினாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவ பர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான். 
அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவில் இருந்து உண்டான அக்கினி ஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார்.
அப்பொழுது அவன் உற்றுப் பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்து போகாமல் இருந்தது. 
அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப் போய் இந்த அற்புத காட்சியைப் பார்ப்பேன் என்றான். அவன் 
பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். (இதை சற்று முக்கியமாக குறிப்பிட விரும்புகிறேன்)  அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன் இதோ, அடியேன் என்றான். 
அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். 
பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாய் இருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக் கொண்டான். 
அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவ-த்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிறகூக்குரலைக் கேட்டேன். அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். 
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரி-யரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டு போய்ச் சேர்க்கவும் இறங்கினேன். 
இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். 
நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோன் இடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்து வரவும், நான் எம்மாத்திரம், என்றான். 
அதற்கு அவர் நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்தில் இருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்: நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.”
 49. இதை கவனித்தீர்களா-? "நான் இறங்கினேன், ஆனால் உன்னை அனுப்புவேன்” தேவன் மனித ரூபத்தில் செல்லுதல். 10-ம் வசனத்தை மறுபடியும் படிக்கிறேன். 
"நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார். 
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோன் இடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்து வரவும், நான் எம்மாத்திரம், என்றான். 
அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்தில் இருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.” 
50. இதற்கு முன்பு எத்தனையோ முறை இந்த வசனத்தை நான் படித்து இருக்கிறேன். இன்று காலை பரிசுத்த ஆவியானவர் அதன் அர்த்தத்தை உணர்த்திக் காண்பித்த போது, அதை நன்கு புரிந்து கொண்டேன். கர்த்தர் அவருடைய தாசனை, அவன் எங்கிருந்து ஓடி வந்தானோ, அதே இடத்திற்கு அவனை மறுபடியும் அனுப்புகிறார். அவனுக்கு மலையை ஒரு அடையாள-மாகக் கொடுக்கிறார். இதுவரை இதை நான் சரிவர கவனிக்கவில்லை. அந்த மலை ஒரு நித்திய அடையாளமாயிருக்கும் என்று கர்த்தர் கூறுகிறார். பாருங்கள்-?
51. இன்று காலை நான், "தேவனுடைய ஜனங்களின் இரண்டாம் யாத்திரை'' (Exodus) அல்லது, ''தேவனுடைய ஜனங்கள் வெளியே அழைக்கப்படுதல்' என்னும் பொருளின் பேரில் பேசப் போகின்றேன். 'யாத்திரை' என்னும் பதத்திற்கு 'வெளியே கொண்டுவரப்படுதல்', 'வெளியே அழைக்கப்படுதல்', 'வெளியே-எடுக்கப்படுதல்' என்னும் அர்த்தமுண்டு. இக்காலை, “தேவனுடைய ஜனங்களின் இரண்டாம் யாத்திரை' என்பதைக்குறித்து பேச விரும்புகிறேன். 
52. அவர்களுக்கு அநேகமுறை யாத்திரை உண்டாயிருந்தது. ஆனால் கர்த்தர், அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அவர்களைப் பிரித்தெடுத்து, அவர்களை வெளி நடத்த உத்தரவிட்டதைக்குறித்து நான் பேசவிருக்கிறேன். 
53. கர்த்தர், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களுக்கு அளித்த வாக்குத் தத்தத்தை நிறைவேற்ற இங்கே ஆயத்தமாகின்றார். அவர் வாக்குத்தத்தம் அளித்த பின்பு எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்தன. ஆயினும் கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தை ஒரு போதும் மறப்பதில்லை. ஏற்ற நேரத்தில் அவர் தமது வாக்கை நிறைவேற்றுகிறார். எனவே தேவன் வேதத்தில் அளித்துள்ள வாக்குத்தத்தம் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்று நீங்கள் நிச்சயம் நம்பலாம். "தீர்க்கதரிசி ஒருக்கால் தவறாக கூறியிருக்கலாம்,'' என்றோ அல்லது, 'இது இந்த நாளில் நிறைவேறாது," என்றோ நீங்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை. 
54. இஸ்ரவேல் ஜனங்களை வெளியே கொணர்வது என்பது கூடாத ஒரு காரியமாக, இப்போதைக் காட்டிலும் அப்பொழுது அதிகமாகத் தென்பட்டது. எனினும்; தேவன் அதை செய்தார். ஏனெனில் அவர் அவ்வாறு வாக்கு அளித்திருந்தார். எவ்வளவு எளிதாக அதைச் செய்கிறார் என்பதைக் கவனியுங்கள். 'நான் இறங்கி வந்தேன்; ஜனங்களின் கூக்குரலை நான் கேட்டேன்; எனது வாக்கை நான் நினைவு கூர்ந்தேன். அதை நிறை-வேற்றவே நான் இறங்கி வந்திருக்கிறேன். நான் உன்னை அனுப்புகிறேன். நீ அதை செய்வாய். நான் உன்னோடு கூட இருப்பேன். நிச்சயமாக நான் உன்னுடன்கூட இருப்பேன். என்றும் நீங்காத என் பிரசன்னம் நீ எங்கு சென்றாலும் உன்னுடன்கூட இருக்கும். பயப்படாதே, அவர்களை விடுவிக்கவே நான் இறங்கி வந்தேன்." ஆவிக்குரிய சிந்தையுள்ளவர்கள், "என் ஜனங்களை வெளியே கொண்டுவர நான் உன்னை அனுப்புகிறேன்; நான் உன்னோடே கூட இருப்பேன்'' என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்.
55. விசுவாசம் என்பது, ''கர்த்தர் அதை வாக்களித்துள்ளார்; எனவே அதை கண்டிப்பாக செய்வார். சூழ்நிலை என்னவாயிருந்த போதிலும், மற்றவர் என்ன கூறினாலும், தேவன் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவார்; ஏனெனில் அவர் அவ்விதம் வாக்களித்துள்ளார்,'' என்னும் நம்பிக்கையில் இளைப்பாறிக் கொண்டு இருக்கும். அவர், அதை எளிய முறையில் நிறைவேற்றுவதனால், கல்வியறிவு கொண்டவர்களின் சிந்தைக்கு அது புரிந்து கொள்ள இயலாத ஒரு செயலாக அமைந்துள்ளது. ஏனெனில் அத்தகையோர், 'அது எப்படி முடியும்-?' என்று தங்கள் மாம்ச சிந்தையில் யோசிக்கும் இயல்பு கொண்டவர்கள். கல்வி அறிவு பெற்றவர் அனைவருமே இதை புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று நான் கூற முற்படவில்லை. அவர்கள் தாங்கள் பெற்றுள்ள ஞானத்தால் இதை யோசிக்காமல், தேவன் பேரில் விசுவாசம் வைக்கவேண்டும். 
56. தேவன் கூறியவைகளைக் கேட்டு அதை விசுவாசிக்கும் அளவிற்கு அவர்கள் தன்மை மாறுமென்றால், அப்பொழுது அவர்கள் கல்வியறிவு அவர்களுக்குப் பயனளிக்கும்.
57. கவனியுங்கள், 'இது முடியவே முடியாது' என்று ஒருவன் தன் கல்வி ஞானத்தை உபயோகித்து யோசித்தால், அது அவனை தேவனிடத்தினின்று துரத்தி விடுகின்றது. வேதம் ஒன்றைக் குறித்து கூறியுள்ளதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமற் போனாலும், நீங்கள், ஆமென், அது அப்படியே நடக்கும்' என்று கூறிவிட்டு, விட்டு விடுங்கள். 
58. இப்பொழுது, இந்த வேதவசனங்களை திருப்பி பார்த்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக, இந்த ஞாயிறு பள்ளி பாடத்தில் நீங்கள் குறித்துக் கொள்ளலாம், நான்... நீங்கள் அதை பார்க்கக் கூடுமென்றால்... இங்கே அநேக குறிப்புகளை நான் வைத்திருக்கிறேன். இந்த யாத்திரை'யின் அர்த்தம் என்னவென்று நாம் அறிந்து கொள்ளும் முன்பு, அன்று நிகழ்ந்த யாத்திரையுடன் இன்றைய யாத்திரையை நான் ஒப்பிட விரும்புகிறேன் இவ்விரண்டும் இணையாகச் செல்வதைக் கவனியுங்கள். ஒன்று உலகப் பிரகாரமான யாத்திரை; மற்றொன்று ஆவிக்குரிய யாத்திரை. அவர் உலகப்பிரகாரமான யாத்திரை-யின் போது செய்தவைகளை முன்னடையாளமாக வைத்து, அதையே ஆவிக்குரிய யாத்திரையிலும் செய்கிறார்.
59. தேவனுடைய வார்த்தை நிறைவேறுதலைக் காணும்போது, அது எவ்வளவு அற்புதமாயுள்ளது-! அது தேவ ஆவியால் அருளப்படவில்லையென்று யார் கூற முடியும்-? இது ஏறக்குறைய 2800 ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவமாகும். அவர் வாக்குத்தத்தம் செய்து, அதை நிறைவேற்றி, அதை நமக்கு திருஷ்டாந்தமாக வேதத்தில் வைத்திருக்கிறார்-! உண்மையான சம்பவ-ங்கள் நிகழுமென்பதற்கு அத்தாட்சியாக, அவர் நிழல்களை எவ்வளவு அழகாக சாட்சிகளாக வைத்திருக்கிறார்-! (கர்த்தருக்குச் சித்தமானால் சந்திரனும் சூரியனும் எவ்வாறு அடையாளங்களாயுள்ளன என்பதைக் குறித்து இன்றிரவு கூறப்போகின்றேன்).
60. முதலாவதாக, இஸ்ரவேல் புத்திரர் எதற்காக எகிப்திலிருந்தனர் என்று ஆதியாகமத்தைப் படித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய ஜனங்கள் அவர்களுடைய சொந்த நாட்டினின்று ஏன் வெளியே இருக்க வேண்டும்-? ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கர்த்தர் பாலஸ்தீ-னாவை ஆணையிட்டுக் கொடுத்து, “இது தான் அது” என்று கூறினாரல்லவா-? 
61. அப்படியிருக்க, தேவன் அளித்திருந்த ஸ்தலத்தில் அவர்கள் ஏன் இருக்கவில்லை-? அதே கேள்வி இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தும். தேவன் நமக்கு ஒரு பெந்தெகொஸ்தேவை அருளினார். அப்போஸ்தல-ருடைய நடபடிகளின் புஸ்தகத்தை அவர் நமக்குத் தந்தார். நம்மை வழி நடத்தவும் வழிகாட்டவும் பரிசுத்த ஆவியையும் அவர் நமக்குத் தந்து அருளினார். அவர் நமக்கு ஒரு ஸ்தலத்தையும் தந்தார். அப்படியிருக்க அதை விட்டு நாம் ஏன் வெளியே இருக்கிறோம்-? சபை ஏன் அதை விட்டு வெளியே இருக்கிறது-? இன்றுள்ள மகத்தான கிறிஸ்தவ சபை ஏன் அப்போஸ் தலருடைய நடபடிகளில் கூறியுள்ளது போல் வாழ்ந்து, அதே கிரியைகளை இன்று செய்ய முடியவில்லை-? அதற்கு ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டும். 
62. நாம் இப்பொழுது பிளவுப்பட்டு, பயங்கரமான நிலையில் உள்ளோம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கிறிஸ்தவ மார்க்கம் இன்று உள்ள பயங்கரமான நிலையில் வேறு எப்பொழுதும் இருந்தது கிடையாது. சபையின் மீது பயங்கரமான நியாயத்தீர்ப்பு விழப் போகும் தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நிகழும் முன்பு, அன்று செய்தது போலவே இன்றும் தேவன் ஜனங்களை வெளியே அழைக்கிறார்.
63. எமோரியருடைய அக்கிரமங்கள் இப்பொழுது குவிந்துள்ளன. எனவே அவர் ஆவிக்குரிய யாத்திரையை இப்பொழுது கட்டளையிடுகிறார். மறுபடியும் நாம் இஸ்ரவேலரின் யாத்திரைக்குச் சென்று, அதை இதோடு ஒப்பிட்டு பார்ப்போம்.
சகோதரருடைய பொறாமையின் விளைவால் தான் அவர்கள் எகிப்துக்குச் செல்ல நேர்ந்தது. அதன் காரணமாகவே இஸ்ரவேலர் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் தங்கியிருந்தனர். தேவனுடைய வாக்குத்தத்தங்கள், அவர்கள் தங்கள் தேசத்தில் இருக்கும் பொழுது மாத்திரமே உரியதாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
64. சற்று முன்பு நாம் செய்த ஜெபத்தில் கூறினது என்னவென்று உங்களுக்குப் புரிகின்றதா-? கர்த்தர் ஏன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்த வேண்டும்-? தம்முடைய ஜனங்களை ஆசீர்வதிப்பதற்கென, அவர்களை மறுபடியுமாக வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குக் கொண்டு சென்று, அவர்-களுக்கு மேசியாவை அளிக்கவே அவர், இவ்வாறு செய்தார்.
ஹிட்லர் அரை யூதனாயிருக்க, அவனுடைய இருதயத்தை அவர் ஏன் யூதர்களுக்கு விரோதமாக கடினப்படுத்த வேண்டும்-? அவ்வாறே, ஸ்டாலின், முசோலினி போன்றவர்களின் இருதயத்தை அவர் கடினப்படுத்த வேண்டிய அவசியமென்ன-? 
65. ஜனங்கள் ஒரு தேசமாக ஆகவேண்டுமென்னும் ஊக்கம் பெற்றிராமல் இருப்பார்களாயின், அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டின் சட்ட திட்டங்களை அவர், அனேக சமயங்களில் கடுமையாக்கி, அதன் மூலம் தேவன் அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றியுள்ளார்.
எனவே, யூதர்கள் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த சர்வாதிகாரிகளின் இருதயங்களைக் கடினப்படுத்தினார். 
66. ஆதியாகமத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ள யோசேப்பின் சம்பவம் நம் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் அதை பின்னர் படித்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த நீண்ட ஞாயிறு பள்ளி போதனையை சற்று தாமதித்து தொடங்கினதால், அதிக சமயமில்லை. நான் துரிதமாக முடிக்க வேண்டும். 
67. கவனியுங்கள், சமயமுள்ளபோது யோசேப்பின் வரலாற்றைப் படியுங்கள். அவன் கடைசி சகோதரனுக்கு முந்தினவனாகப் பிறந்தான். ஆவிக்குரிய சிந்தையுள்ளோர் இதை உடனே புரிந்து கொள்வார்கள். அவன் கடைசி மகன் அல்ல. பென்யமீன் தான் எல்லாரிலும் இளையவன். யோசேப்பு புறம்பாக்கப்-பட்ட பின்பு என்ன நேர்ந்ததென்று கவனியுங்கள். யோசேப்பும் பென்யமீனும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள்; எனவே அவர்களிருவரும் தான் உண்மையில் சகோதரர்கள்.
68. யோசேப்பை சந்திக்கும் வரை பென்யமீனுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படவில்லை. அதன் பின்பு , யோசேப்பு மற்றெல்லா சகோதரரை விட இரட்டிப்பான பங்கை பென்யமீனுக்கு அளித்தான். 
69. யோசேப்பு ஆவிக்குரியவன் என்னும் காரணத்தால், தன் சகோதரர் இடமிருந்து புறம்பாக்கப்பட்டான் என்பதை நாம் காண்கிறோம். சகோதரர் அனைவரிலும் அவன் மிகுந்த எளிமையானவனாயிருந்த போதிலும், அவனே அவர்கள் எல்லோரைக் காட்டிலும் பெரியவன். அவனுடைய சகோதரர் அவனை முகாந்தரமின்றி பகைத்தனர். அவர்கள் அவனைப் பகைத்து இஇருக்கக்கூடாது. மாறாக அவர்கள் அவனுக்கு மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். அவர்கள் ஏன் அவனைப் பகைத்தனர்-? அவன் சகோதரனாக இருந்த காரணத்தினாலா-? அல்ல. தேவன் மற்றவர்களைக் காட்டிலும் அவனுடன் அதிகமாக ஈடுபட்டிருந்த காரணத்தால் தான் அவர்கள் அவனைப் பகைத்தனர். பாருங்கள்-?
70. ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்து கொள்ளும் தன்மையை கர்த்தர் அவனுக்கு அருளினார். அவன் சொப்பனங்களுக்கு பிழையின்றி அர்த்தம் உரைத்தான். அவ்வாறே வரப் போகும் காரியங்களையும் அவன் எவ்வித பிழையுமின்றி முன்னதாகவே அறிவித்தான்.
71. அவனுடைய கதிருக்கு முன்பாக மற்ற கதிர்கள் வணங்குவதாக அவன் சொப்பனம் கண்டான். இதனால் அவன் சகோதரருக்கு அவன் மேல் கோபம் மூண்டது. “பரிசுத்த உருளையே" என்று ஒருக்கால் அவனை அவர்கள் அழைத்து இருக்கலாம். ''ஒரு நாளில் நாங்கள் உன்னை வணங்க வேண்டுமா என்ன-?'' என்று அவர்கள் கோபத்துடன் கேட்டனர். 
72.. ஆனால் அது போன்றே சம்பவித்தது. ஒன்றுமில்லாத ஒரு சிறுவனை மகத்துவம் வாய்ந்த அவர்கள் எங்ஙனம் வணங்க முடியும்-? அவர்களோ அவனை அவ்வாறே வணங்கி, இரக்கத்துக்காக மன்றாடினர். 
73. அவன் சொப்பனம் கண்ட சமயத்தில் அதிகாரத்துக்கு வர வில்லை. அப்பொழுது அவன் சிறுவனாக இருந்தான். இப்படிப்பட்ட ஒரு சொப்பனம் கண்ட காரணத்தால், ஸ்தாபன சகோதரரிடமிருந்து அவன் அகற்றப்பட்டு, வெளியே செல்ல நேர்ந்தது. அவனுடைய சகோதரரோ தங்கள் நாட்டிலேயே வாழ்ந்தனர்.
74. அதன் பின்பு ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. இஸ்ரவேலர் தங்கள் சொந்த நாட்டில் தங்கும் வரைக்கும், தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு உரியவர்கள் என்பதை நாமறிவோம். அவ்விதம் அவர்களுடைய நாட்டிலேயே தங்குவது நல்லது தான். ஆனால் அவர்கள் ஆவியானவரைப் புறம்பே தள்ளி விட்டனர். 
75. இன்றைய ஸ்தாபனங்களும்கூட, தங்களிடமுள்ள கல்வியறிவினால், வேதத்தில் உள்ளவைகளை அறியவிழைந்து, அவர்களுடைய நிலையை அறிந்து உள்ளனர். ஆயினும் அவர்கள் மத்தியில் ஆவியானவர் இல்லை. அவர்கள் யோசேப்பைப் புறம்பாக்கினர். இந்த 'பரிசுத்த உருளுபவரின்' குழுவுடன் எவ்வித தொடர்பும் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் அவனை சபை பிரஷ்டம் செய்து, உலகிற்கு விற்று போட்டனர். அவனுடைய ஐக்கியத்தை விட்டு அவர்கள் பிரிந்தனர். 
76. அவர்கள் அவ்வாறு செய்த காரணத்தால், பின்னொரு காலத்தில், தங்கள் இடத்தைவிட்டு அவர்கள் எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பொறாமை கொண்ட இச்சகோதரரின் வரலாறு, ஆவிக்குரிய விதத்தில் இன்றைய காலத்திற்கு ஒப்புவமையாய் உள்ளது.
சுத்த பொறாமையின் விளைவாக அல்ல, அருவருப்பான அசுத்த பொறாமை-யின் விளைவாக - இது சம்பவித்தது. பொறாமைக்கு சுத்தம் ஏது-? அது அருவருப்பான, அசுத்தமான, பொறாமையன்றி வேறல்ல.
77. அவர்கள் வேதத்தையும், வேதத்தை எழுதிய தேவனின் தன்மையையும் அறிந்த பின்பும், அதே தேவன் தம்மை இன்று அடையாளங்களினாலும் அற்புதங்களாலும் நிரூபிக்கிறார் என்பதை அவர்கள் காரணம் இன்றி நிராகரித்தால், அது வெறும் பொறாமையே. தேவன் பிணியாளிகளை சுகப்படுத்தி, மரித்தோரை உயிரோடெழுப்புவதை அவர்கள் காண்கின்றனர். அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்த அதே தேவன் தாமே இவைகளை-யும் இப்பொழுது செய்கிறார். நமது ஆவிக்குரிய பயணத்திற்கென அவர்கள் எழுதிய சுவிசேஷம் இன்று நம்மிடையே உள்ளது. அதே தேவன் அன்று புரிந்த அதேசெயல்களை இன்றும் செய்வதைக் கண்டபின்பும் சபை பிரதஷ்டம் செய்து, "எங்கள் ஜனங்கள் மத்தியில் இவைகளை அனுமதிக்கமாட்டோம்'' என அவர்கள் கூறினால், அது பொறாமையே அன்றி வேறல்ல.
78. யோசேப்பின் சகோதரர், அவனால் எந்த உபயோகமுமில்லை எனக்கருதி அவனைப் புறம்பாக்கினர். இன்றும் அதுவே சம்பவிக்கின்றது. “நமது ஸ்தாபனங்கள் கல்வியறிவு பெற்ற, சிறந்த உடையணிந்தவர்களைக் கொண்ட மகத்தான ஸ்தாபனங்களாக விளங்கி, புத்தி கூர்மை கொண்ட போதகர்கள் நமக்கு உள்ளனர்.''
79. அறிஞர்களின் கருத்தரங்குகள் நமது ஸ்தாபனங்களில் நடைபெறுகின்றன. அப்படியே ஆலோசித்து, தங்கள் சொந்த அறிவுபூர்வமான மூளையைக் கொண்டு சபையை பரிசுத்த ஆவியானவர் ஒழுங்கு செய்வதை விட அதை விட மேலாக நாம் ஒழுங்கில் வைத்து விடலாம் எனவே அக்காலத்து போன்று இக்காலத்தில் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அவசியமில்லை'' என்று அவர்கள் கருதுகின்றனர்.
''அது கடந்த காலம்'' என்று அவர்கள் எண்ணுகின்றனர். நான் கூறுவது உண்மை அல்லவா-? "நம்மிடையே மருத்துவர் உள்ளதால், வியாதியஸ்தரை சுகப்படுத்த பரிசுத்தாவியானவர் நமக்கு அவசியமில்லை. அன்னிய பாஷை பேச பரிசுத்தாவியானவர் நமக்குத் தேவையில்லை. நாங்கள் புத்திமான்கள்'' என்று அவர்கள் நினைக்கின்றனர். அவ்விதம் செய்யும் போது, உங்கள் ஜீவ நாடியை நீங்கள் உங்கள் அமைப்பிலிருந்து எடுத்துப் போடுகின்றீர்கள். 
80. இயேசு, அவர் காலத்தில் வாழ்ந்த யூதர்களிடம், “நீங்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, அதன் மேல் கட்டிடம் கட்டுவதற்கென, மூலைக்குத் தலைக் கல்லாயிற்று'' என்று கூறினார். 
81. நான் என்ன கூறுகிறேனென்று புரிகின்றதா-? உங்களால் அதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும். இனி ஒரு போதும் அதற்கு அவசியமிராது என்று அவர்கள் எண்ணினர். “நாங்கள் அன்னியபாஷை பேச வேண்டிய அவசியம் இல்லை. அன்னிய பாஷையின் அர்த்தத்தை வியாக்கியானம் செய்தலும் எங்களுக்குத் தேவையில்லை. பரிசுத்தாவியானவரின் மூலம் எங்கள் சபை-களை சீர்படுத்த, பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் போன்ற தீர்க்கதரிசிகள் எங்களுக்கு அவசியமில்லை. எங்களுக்கு எல்லாம் புரிகின்றது'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
82. பாருங்கள், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு முறைமையை அவர்கள் பரிசுத்தாவிக்குப் பதிலாக நியமித்துக் கொண்டார்கள். ஆயினும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இருக்கின்றனர். அவர்களுடைய பெயர்கள் ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட முறைகளை அங்கீகரிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஆவிக்குரிய சிந்தை உள்ளவர்கள். அவர்களுடைய பெற்றோர் எத்தகைய ஸ்தாபனங்களைச் சேர்ந்திருந்த போதிலும் அவர்களுக்குக் கவலை இல்லை.
83. ஒருக்கால் ஸ்தாபனங்கள் வெளிப்படையாக பரிசுத்த ஆவியானவரை எதிர்த்துப்பேசாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய செயல்கள் அவர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமானவர்கள் என்பதை நிரூபிக்கின்றன. தேவனுடைய வார்த்தை இங்கு உள்ளது. பரிசுத்த ஆவியானவர் கூட்டின கூட்டங்களில், அவர் வார்த்தையை நிரூபித்து, அவர் பிணியாளிகளை சுகப்படுத்தி மரித்தோரை உயிர்ப்பித்து, அன்னியபாஷை பேசி, பிசாசுகளைத் துரத்துகின்றார் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றார். எனவே, ஒரு மனிதனுக்குள் என்ன இருக்கிறது என்பதை பொறுத்து தான் அது உள்ளது. 
84. திருமதி ஆர்கன்பிரைட், அங்கே உட்கார்ந்து புல்வெளியில், புற்களை வெட்டிக் கொண்டிருந்தார்கள், நான் அவர்கள் அருகாமையிலே கடந்து சென்றேன், நான் இருப்பதை அவர்கள் அறியவில்லை, நான் அமைதியாக இருந்து விட்டேன்; நான் கவனித்தக் கொண்டிருந்தேன். 
85. கவனியுங்கள், பரிசுத்தாவியானவரும், அவருடைய மகத்தான கிரியை-களும், பரிசுத்தாவியானவர் அவசியமில்லை என்று சபைகள் கருதுகின்றன. அப்படித்தான் அவர்கள் உங்களிடம் சொல்வார்கள். ஸ்தாபனங்களில் மனிதர் எழுந்து நின்று, தங்கள் நுண்ணறிவினால் சொற்பொழி ஆற்றுவார்கள். அவர்கள் கூறுவதே உண்மை என்று உங்களை ஏறக்குறைய நம்பச் செய்வார்கள். இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்வோம். 
86. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருப்பதால், அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்குமென்று இயேசு கூறினாரல்லவா-? நுண்ணறிவினால் ஆற்றும் சொற்பொழிவு மிகச் சிறந்ததாய் அமைந்திருந்து, ஜனங்களை வஞ்சிக்கும். அங்கு உள்ள மனிதர் திறம்பட தேவனுடைய வார்த்தையைக் கையாண்டு சொற்பொழிவாற்று-வதால், எந்த புத்திசாலியையும் அது கவர்ந்து விடும். அதாவது புத்திக் கூர்மையில் நாட்டம் கொண்டவர்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைத் தவிர்த்து விட்டு, மனிதனுடைய வழியைக் கடைபிடிக்கின்றனர். அதை நாம் கண் கூடாகக் காண்கிறோம். 
87. யோசேப்பைக் குறித்து அவனுடைய சகோதரர் அதே விதமாக நினைத்து இருந்தனர். எனவே அவர்கள் அவனைத் தொலைத்து விட்டனர். எகிப்திலே... அதன் பேரில் மணிக்கணக்காகப் பேசலாம். இதன் பேரில் இரவும் பகலுமாக 3-ஆண்டுகள் பேசினாலும், பரிசுத்தாவியானவரின் மகத்தான வெளிப்பாடுகள் இதைக் குறித்து இன்னமும் உண்டாயிருக்கும். 
88. ஆவிக்குரிய சிந்தை எகிப்தை உற்று நோக்கி, அங்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களை உணர்ந்து கொள்ளும். துன்புறுத்தல்கள் உண்டாகவேண்டும் என்பதற்காகவே யோசேப்பு மரணத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டான் என்பதை ஆவிக்குரிய சிந்தையால் உணரமுடியும். தேவன் சக்கரத்துக்குள் சக்கரத்துடன் இருப்பதை அதனால் காணமுடியும் - எல்லாமே பிழையின்றி பரிபூரணமாக நிகழ்ந்து வருகின்றன. போத்திபார் யோசேப்பைப் புறக்கணித்ததையும், அங்கு கூறப்பட்ட பொய்யின் விளைவால் யோசேப்பு சிறைவாசம் செய்து அங்கு அவன் தாடி வளர்ந்திருப்பதையும், அவனுடைய சகோதரர் அவனை சபை பிரதஷ்டம் செய்ததையும் காணலாம். ஆனால் திடீரென்று தேவன் நுழைந்தார். பாருங்கள்-?
89. அந்த சக்கரத்துக்குள் சக்கரம் நகர்ந்து செல்வதை நாம் எவ்வளவு அழகாக காணமுடிகின்றது-! தேவனுடைய மகத்தான திட்டம் எல்லாவற்றையும் இயங்கச் செய்து, யாத்திரை வரைக்கும் அவர்களை கொண்டு வந்து, அவருடைய ஜனங்களை தங்களுடைய தேசத்திற்கு செல்லும்படி அழைத்து, அவர்களுடைய ஸ்தானத்தை மீண்டும் அவர்களுக்களித்து, அவர்களை அவர் ஆசீர்வதித்து, அவர் வாக்குத்தத்தம் செய்த நபரை அவர்கள் மத்தியில் நிறுத்த விரும்புகிறார். அவர்கள் ஆசீர்வாதம் பெறவேண்டுமானால் அவர்களுடைய சொந்த தேசத்தில் அவர்கள் இருக்க வேண்டும். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா தோன்றும் முன்பு, முன்பிருந்த தேசத்தை விட்டு அவர்கள் வெளியே வந்து, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். சபையும் அதையே செய்ய வேண்டியுள்ளது. மேசியா அவர்களுக்கு முன்பாக பிரத்தியட்சமாவதற்கு முன்பாக, புறக்கணிக்கும் குழுவை விட்டு அவர்கள் வெளி வந்து, வாக்குத்தத்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். உங்களால் காண முடிகிறதா-? 
90. மேசியாவின் ஜீவன் பிரத்தியட்சமாகி ஒரு சபையை மணவாட்டியை - ஆயத்தப்படுத்துகின்றது. ஒரு மனிதனை மணந்த ஸ்திரீக்கு அவனிடம் வித்தியாச பேதம் இருக்குமானால், அவர்களிடையே தொடர்ந்து சச்சரவு உண்டாகிக் கொண்டேயிருக்கும். அதற்குப் பதிலாக ஒரு மனிதனுக்கும் அவனுக்கென்று நியமிக்கப்பட்ட பெண்ணுக்குமிடையே ஒருமனப்பான்மை இருக்குமானால் அவர்கள் ஒரே ஆத்துமாவும் ஒரே சிந்தையுள்ளவர்களாய் இருந்தால்... ஏனெனில் அவர்கள் ஒரே மாம்சமாகப் போகின்றனர். மணவாட்டிக்குள் மணவாளன் பிரத்தியட்சமாகும் வரை, அத்தகைய ஒருமனப்பான்மையை சபையானது தேவனிடம் கொண்டிருக்குமானால்- ஏனெனில் அவர்களிருவரும் ஒன்றாக ஆகப்போகின்றனர். ஓ, என்னே ஒரு மகத்தான பாடம்-! 
91. சரி, ஆவிக்குரிய சிந்தை கொண்டவர்கள், முன் அடையாளத்தையும், அது நிறைவேறுவதையும் காண்பார்கள். அதைக் குறித்து மணிக்கணக்காக பிரசங்கிக்கலாம். என்ன நிகழ்கின்றது என்பதைக்கவனிக்கவும். இந்த வளமான காலம் வருவதற்கு, நாம் ஏன் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம்-?
92. சபையானது வனாந்தரத்துக்கு ஓடிப்போய், அங்கே காலங்களும் காலமுமாக போஷிக்கப்பட்டாள் என்று வேதம் கூறுவது உங்களுக்குத் தெரியும். ஏன் இவ்வாறு நிகழவேண்டும்-? இன்னமும் அது தேவனுடைய சக்கரத்துக்குள் சக்கரமாயிருக்கிறது. மனிதன் அமர்ந்து கொண்டு, தன் பென்சிலை வைத்துக் கொண்டு, தேவனுடைய வருகையின் நேரத்தைக் கணித்துக் கொண்டு - நீதிபதி ருதர்ஃபோர்ட், மதர் ஷிப்டன் போன்றவர்கள். 1914-ஆம் ஆண்டில் இயேசு வருவார் அதற்கு முன்பும் கூட வருவார் என்று வேதத்தை விரித்துரைத்துக் கூறின அத்தனையும் ஏன் தேவன் நிறைவேறச் செய்யவில்லை-? அவர்கள் அதைக் குலைத்துப் போட்டனர்.
93. அது மனிதனுக்கு மறைந்திருக்கிறது. ''அந்த நாளையும் அந்த நாழிகை-யையும் எந்த மனிதனும் அறியான்'' என்று இயேசு கூறியிருக்க, அதற்கு முரணாக வேதம் எப்படி செயல்பட முடியும்-? அவர்கள் வேதத்தின் ஒரு துண்டை மாத்திரம் எடுத்துக் கொண்டு, அதை ஆதாரமாக்கிக் கொள்கின்றனர். நீங்களோ வேதத்தின் முழு காரியத்தையும் எடுத்துக் கொள்ளவேண்டும். தேவன் அதற்குள் இருந்தால், அது உண்மையென்பதை நிலைவரப்படுத்துவார். உதாரணமாக தெய்வீக சுகமளித்தல் என்பது. அது உண்மை அல்லவென்றால் உண்மையல்ல. தேவன் அதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ளமாட்டார். ஆனால் அது உண்மையென்று தேவன் பிரத்தியட்சமாக்கினால், அது உண்மை தான். 
94. “உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் அவனோடே பேசுவேன். அவன் சொல்வது நிறைவேறினால் அவனுக்குச் செவி கொடுங்கள்'' என்று இயேசு, தேவன் கூறியுள்ளார். அவன் உரைக்கும் தீர்க்கதரிசனம் தவறாயிருக்குமானால், தேவன் ஒருக்காலும் தவறாயிருக்க முடியாது. அவர் முடிவில்லாதவர், பிழையற்றவர், சர்வவல்லவர். அவர் ஒரு போதும் தவறு உரைக்க முடியாது. எனவே ஒரு மனிதன் தன் சொந்த வார்த்தைகளைப் பேசினால், அவை தவறாயிருக்க வகை உண்டு. ஆனால் அவன் தேவனுடைய வார்த்தைகளைப் பேசினால், அது ஒருக்காலும் தவற முடியாது. ஏனெனில் அது தேவன் பேசுவதாகும். அவன் தேவனுடைய ஆவியால் ஏவப்பட்டிருப்பானானால், அவன் கூறுவது சரியாகவே இருக்க வேண்டும். ஏனெனில் தேவன் அவனுடன் அவ்வாறு உரைக்கும்படி ஏவினார். 
95. பழைய ஏற்பாட்டில் தேவன், “நியாயப்பிரமாணத்தின்படியும் தீர்க்கதரிசிகள் உரைத்தவைகளின்படியும் அவர்கள் உரைக்காவிட்டால், அவர்களுக்குள் ஜீவன் இல்லை'' என்று கூறியுள்ளார். அவர்கள் நியாயப்பிரமாணத்தின்படியும் தீர்க்கதரிசிகள் உரைத்தவைகளின்படியும் பேச வேண்டும். அப்படியானால் தீர்க்கதரிசிகள் தேவனுடைய வார்த்தையின்படியே பேசவேண்டும். இல்லை- யேல் அது தவறாயிருக்கும். 
96. மெதோடிஸ்டுகளும், லூதரன்களும், பாப்டிஸ்டுகளும், காம்ப்பெல்லைட்டு-களும், மற்றோரும் மகத்தான எழுப்புதல்களைப் பெற்றனர். நசரீன்கள், யாத்திரீக பரிசுத்தர், பெந்தெகொஸ்தேயினர் இவர்களிடையே மகத்தான எழுப்புதல்கள் உண்டாயின. ஆயினும் அந்த மகத்தான யாத்திரை இன்னும் நிகழவில்லை. ஏன்-? 
97. எமோரியரின் அக்கிரமங்கள் நிறைவாகுமளவும் இஸ்ரவேலரை எகிப்தில் வைத்திருப்பாரென்று தேவன் ஆபிரகாமிடம் கூறியிருந்தார். தேவன் அது வரைக்கும் பொறுமையுடன் காத்திருந்தார். ஜனங்கள் ஏதோ ஊகிக்கின்றனர். வேத வாக்கியங்கள் ஏதோ ஒன்றை நிறைவேற்றக் காத்திருக்கின்றன என்பதை அவர்கள் உணருகின்றனர். எனவே அவர்கள், "இதுவே அந்த நாள், இதுவே அந்த சமயம்'' என்று கூறுகின்றனர். ஆனால் எமோரியரின் அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை.
98. எகிப்துக்குச் சென்ற பின்பு 400 ஆண்டுகள் கழித்து அவர்கள் வெளியே கொண்டு வரப்படவேண்டும். அவர்கள் தீர்க்கதரிசியைப் புறக்கணித்ததால், 440 ஆண்டுகள் அவர்கள் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வனாந்தரத்தில் அவர்கள் இன்னும் 40-ஆண்டுகள் கழித்த பின்பே, கர்த்தர் அவர்களை வெளியே கொணர்ந்தார். இஸ்ரவேலரை விடுவிக்க வருவதற்கு முன்பு, மோசேயும் வனாந்தரத்தில் 40-ஆண்டுகள் கழித்தான். நீங்கள் பாருங்கள்-? செய்தியைப் புறக்கணித்த காரணத்தால், இஸ்ரவேலர் 40-ஆண்டுகள் அதிகம் தங்க வேண்டியதாயிருந்தது.
99. தேவனுடைய கணக்கில் 40-ஆண்டுகள் என்பது சுமார் ஒன்றரை நிமிடங்களுக்குச் சமானம். ஏனெனில் தேவனுடைய பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் ஒரு நாளைப் போல் இருக்கின்றது. அந்த கணக்கின்படி, அது ஒரு நிமிட நேரம் கூட இருக்காது. 
100. இப்பொழுது காலதாமதமாகி விட்டது. ஏன்-? தேவன் நீடிய பொறுமை உள்ளவராய் காத்திருந்து, கவனித்துக் கொண்டே வருகிறார். லூத்தரன்கள் இடையே எழுப்புதல் உண்டாகி, அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளட்டும். மெதோடிஸ்டுகளிடையே எழுப்புதல் உண்டாகி, அவர்களும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளட்டும். பாப்டிஸ்டு சபையின் ஜான் ஸ்மித் என்பவரும் மகத்தான எழுப்புதலுடன் தோன்றி, பின்பு அவர்களும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளட்டும். அவ்வாறே பெந்தெகொஸ்தேயினரும் 'வரங்கள் புதுப்பிக்கப்படுதல்' என்பதுடன் எழும்பி, பின்பு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளட்டும்- அக்கிரமம் நிறைவாகுமளவும். பின்னர் தேவனுக்கே களைப்பு உண்டாகிவிடுகின்றது.
101. அப்பொழுது ஒரு யாத்திரை உண்டாகின்றது. அதை நாம் இப்பொழுது காண்கிறோம். ஒவ்வொரு காலத்திலும் ஜனங்கள் பின்னோக்கி அது சபிக்கப் பட்டது என்று அறிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அவர்கள் மறுபடியும் பாபிலோனிய சால்வையையும் பொன்பாளத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். அது தான் ஜனங்களிடையே சாபமாக அமைகின்றது - மனிதன் தனது சொந்த கருத்துக்களைப் புகுத்த முயலும் போது, அதுவே சாபமாக ஆகிவிடுகின்றது.
102. நாம் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும். சபிக்கப்-பட்ட அந்த பட்டினத்தில் உள்ளவைகள் யாதொன்றையும் தொடக் கூடாது என்பதே தேவனுடைய கட்டளையாகும். நீங்கள் தொட வேண்டாம். அவை-களை அப்படியே விட்டுவிடுங்கள்.
103. அந்த பொன் பாளத்தையும் அழகிய பாபிலோனிய சால்வையையும் எடுத்துக் கொண்டு, மற்றவர்களைப் போன்று நல்லவிதமாக வாழலாமென்று ஆகான் எண்ணினான். பாளையங்களிலுள்ள ஆகான்களே, அதைப் பாருங்கள். அது சபிக்கப்பட்டது. அது சபிக்கப்பட்டதாகவே இருக்கும். ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் நடந்த ஆலோசனை சங்கம் முதற்கே அது சபிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேவனோ எமோரியரின் அக்கிரமங்கள் நிறைவாகும் காலம் வரைக்கும் அதை அனுமதிக்கிறார். 
104. 'ஆவிக்குரிய அறிவு' பெற்றுள்ளவர் யாவரும் - நான் திரும்பத் திரும்ப ஆவிக்குரிய அறிவு' என்று கூறுவதைக்கவனிக்கவும். இத்தேசத்தின் அக்கிரமம் நிறைவாகி வருவதை நீங்கள் காணலாம். அவள் ஸ்தாபித்துக் கொண்டு, மறுபடியுமாக ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, ஸ்தாபித்துக் கொண்டு, மறுபடியுமாக ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டே வந்து, இப்பொழுது அவள் ஒரு குழுவின் அங்கத்தினராகி, மற்றோருடன் ஒன்று சேர்ந்து கொள்ளத் தலைப்படுகிறாள் - அக்கிரமம் நிறைவாகி விட்டது. 
105. யாத்திரையின் தருணம் இப்பொழுது வந்து விட்டது. வெளியே அழைக்கப் பட்ட, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு சமயமாகி விட்டது. மற்றோரு தேசத்திற்கு செல்வதற்காக வாக்குத்தத்தம் அல்ல - நமது வீட்டிற்கு, ஆயிரம் வருட அரசாட்சிக்கு (Millenium). வெளியே அழைக்க சமயம் வந்து விட்டது - இந்த நாட்டின் அக்கிரமம் - கர்த்தருக்கு சித்தமானால் இன்றிரவு மறுபடியும் அதைக் குறித்து பேசலாம்... அவளுடைய அக்கிரமம் நிறைவாகிவிட்டது-! அவள் அசுத்தமாயிருக்கிறாள்-! 
106. “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் வாழும் தேசத்தையா பழிக்கிறீர்கள்-?'' என்று கேட்கலாம். ஆம், ஐயா-! நிச்சயமாக-! ''அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடிமகனாயிருந்து கொண்டு, இப்படிச் சொல்லக்கூடாது'' என்று நீங்கள் கூறலாம். 
107. அப்படியானால் எலியா இஸ்ரவேலனாக இருந்து கொண்டு, இஸ்ரவேல் நாட்டைச் சபித்திருக்கக்கூடாது. மற்ற தீர்க்கதரிசிகளும்கூட அவர்கள் வாழ்ந்த நாடுகளை சபித்திருக்கக்கூடாது.
108. ஆனால் அவர்கள் கூறினது தங்கள் சொந்த கருத்துக்களை அல்ல; அவர்கள் தேவனுடைய வார்த்தையையே உரைத்தனர். பாருங்கள்-? உங்கள் ஊக்கத்தை எங்கிருந்து பெறுகின்றீர்கள் என்பதை அது பொறுத்தது. அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருந்தால், அதை தனியே விட்டு விடுங்கள். நான் கூறுவது தேவனுடைய வார்த்தைக்கு முரணானது என்று யாராவது நிரூபியுங்கள் பார்க்கலாம்-! 
109. வெளிப்படுத்தின விசேஷம் 13-ம் அதிகாரம் வேதம் இவ்வாறு கூறுகின்றது அல்லவா-? (அந்த அதிகாரத்தில் தான் நமது நாட்டைக்குறித்து எழுதப்பட்டு உள்ளது) இந்த தேசத்தின் எண் 13 ஆகும். - பெண்ணின் தேசம், வேதத்தில் அது பெண்ணாக எழுதப்பட்டுள்ளது. நமது நாணயத்தில் பெண்ணின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது பெண்ணின் தேசமாகும். 
110. இங்கு தான் பெண்ணின் அசுத்தம் தொடங்கி, இங்கே முடிவடைகிறது, முதன் முதலில் இந்த அசுத்தம் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசத்-தினால் ஏதேன் தோட்டத்தில் தான் தோன்றினது. இந்த தேசத்தில் அது பகிரங்கமாகி, பெண் பிரசங்கிகள் தோன்றி, மற்ற காரியங்களும் நிகழ்கின்றன. உலகத்தின் அசுத்தமே ஹாலிவுட்டில் இருந்து தான் புறப்பட்டு செல்கின்றது. உலகிலேயே மிகவும் மோசமான நாடு இது. உலகின் மற்றெல்லா பாகங்களைக் காட்டிலும், நமது தேசத்தில் தான் விவாகரத்து அதிகமாக நேரிடுகின்றது.
111. ஏன்-? கர்த்தருக்கு சித்தமானால் என்றாவது ஒரு நாளில் இதன் காரணத்தை அறிந்து கொள்வீர்கள். சாத்தான் ஜனங்களின் கண்களைக் குருடாக்கி, விவாகரத்தில் ஈடுபடும்படி செய்கிறான். நாம் பயங்கரமான ஒரு நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முடிவு மிகவும் அருகாமையில் உள்ளது என நான் நம்புகிறேன். அவர்கள் மிகவும் மோசமாயிருக்கின்றனர். 
112. அவள் வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரத்தில் தோன்றுகிறாள். 13-என்னும் எண்- அது ஆட்டுக் குட்டியாக எழும்பி வந்தது என்பதைக் கவனிக்கவும். மத-வழிபாட்டின் சுதந்தரம். ஆனால் பின்னர் அது மிருகத்தின் இடமிருந்து வல்லமையைப் பெறுகின்றது. மிருகத்திற்கு ஓப்பான ஒரு சொரூபத்தை உண்டாக்க வேண்டும் என்று கூறுகின்றது. அது சகல அதிகார-த்துடனும் பேசி, அதற்கு முன்பாக தோன்றின மிருகம் செய்த அதே அசுத்தமான கிரியைகளைச் செய்கிறது. அப்படியானால், இது இந்த தேசத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் அல்லவென்று என்னிடம் கூறுங்கள் பார்க்கலாம்.
எமோரியரின் நிலைமை முதிர்வடையும் சமயம் வந்து விட்டது. ஏனெனில் அவர்கள் அதற்கென்று கிரியை நடப்பித்து வருகின்றனர். இப்பொழுது புதிதாக நியமிக்கப்பட்ட போப்பாண்டவரும் கூட எல்லா சகோதரரையும் ஒருங்கே இணைக்க வேண்டுமெனும் நோக்கம் கொண்டவராய் இருக்கிறார். இயற்கை கண்களுக்கு அது ஒரு நல்ல செயலாகத் தென்படலாம். ஆனால் தேவன் உடைய பார்வையில் அது பரிசுத்த ஆவிக்கு முரணான ஒரு செயலாகும். அதனுடன் நாம் கலந்து விடக்கூடாது. ஒவ்வொரு சபையும் அந்த குழுவின் அங்கத்தினராக மாட்டிக் கொள்ளும். 
113. எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவு வேகமாக அதை விட்டு வெளியே வாருங்கள். இல்லையேல் உங்களை அறியாமலேயே மிருகத்தின் முத்திரையை நீங்கள் தரிக்க நேரிடும். அதை விட்டு வெளியே வாருங்கள். ஆவிக்குரிய சிந்தை இதை கிரகித்துக்கொள்ளுமென்று நம்புகிறேன். அதை புரிந்து கொண்டீர்கள் என்னும் நிச்சயம் எனக்குண்டு. ஆனால் ஏனைய நாடுகளில் உள்ளவர்கள் இதை புரிந்து கொண்டார்களோ என்று ஐயமுறுகி- றேன். ஒவ்வொரு நாட்டிற்கும் என்னால் போகமுடியாது. ஒலி நாடாக்களைத் தான் நாம் அனுப்ப முடியும். இந்த விதை, அது விதைக்கப்பட்ட சிந்தையைக் கவர்ந்து கொள்ள தேவன் ஏதாவதொரு வழியை ஏற்படுத்த வேண்டும். வெளிச்சம் அதன் மேல்பட்டவுடனே அது உயிர்பெறுகின்றது. கிணற்றடியில் இருந்த ஸ்திரீக்கும் அதுவே சம்பவித்தது. ''இதோ அது,'' அவள் உடனே அதை கிரகித்துக்கொண்டாள். 
114. அதை விட்டு வெளியே வாருங்கள். அது சபிக்கப்பட்டது விழுந்து போன ஏதாவதொரு ஸ்தாபனம் மீண்டும் எழும்பினதை எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறே எழும்பி விழாத ஒரு ஸ்தாபனத்தை எனக்குக் காண்பியுங்கள். அவையாவும் தவறென்பதை அதனாலேயே நீங்கள் கண்டுகொள்ளலாம்.
115. எமோரியரின் அக்கிரமங்கள் நிறைவாகாததன் காரணத்தால் இஸ்ரவேல் பயணத்திற்காக காத்திருக்க வேண்டியதாயிருந்தது. எமோரியர் அக்கிரமங்கள் நிறைவானவுடனே, இஸ்ரவேலருக்கு ஆவிக்குரிய யாத்திரை அல்லது இயற்கையான யாத்திரை ஒன்று உண்டாகி, உலகப்பிரகாரமான எமோரியர் தங்களுடைய தேசம் என்று அழைத்துக் கொண்ட அந்த இயற்கை நாட்டிற்கு இஸ்ரவேலர் நடத்திச் செல்லப்பட்டனர். 
116. அது போன்று, தங்களை சபையென்று அழைத்துக் கொள்ளும் எமோரிய ஸ்தாபனங்களில் அக்கிரமங்கள் நிறைவாகும் சமயம் வந்து விட்டது. எனவே ஒரு யாத்திரை இப்பொழுது நேரிடவிருக்கிறது. அப்பொழுது யார் யார் யாரென்பதை தேவன் வெளிப்படுத்துவார். சபை இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி - அப்பொழுது அதனின்று வெளி வந்து வாக்குத்தத்தம் செய்யப் பட்ட தேசத்திற்குப் யாத்திரையாக கொண்டு செல்லப்படுவாள்... என் பிதாவின் வீட்டில் அனேக வாசஸ்தலங்கள் உண்டு. 
117. இஸ்ரவேலர் யுத்தம் பண்ணினது போன்று, நீங்கள் அத்தேசத்திற்குச் சென்று யுத்தம் பண்ண அவசியமில்லை. ஏனெனில் அது ஏற்கனவே ஆயத்தமாகி விட்டது. பூமிக்குரிய கூடாரமாகிய இவ்வீடு அழிந்து போனாலும் நமக்காக ஒரு வீடு அங்கு காத்துக் கொண்டிருக்கிறது. ''நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி" அந்த மகத்தான யாத்திரை அருகாமையில் உள்ளது.
இஸ்ரவேலருடைய பிரயாணத்தை தேவன் எவ்விதம் வாய்க்கச் செய்தார்; அதற்கென்று அவர் என்னென்ன ஆயத்தங்கள் செய்தார் என்றெல்லாம் ஒரு நிமிடம் சிந்தனை செய்து விட்டு, இன்றுள்ள நிலையை நோக்குங்கள். 
118. சரி, இந்த யாத்திரை தொடங்கும் முன்பு, யோசேப்பை அறியாத ஒரு பார்வோன் தோன்றினான்.-(பாருங்கள்-?)-யோசேப்பை அறியாத ஒரு பார்வோன். யோசேப்பை அறியாத ஒருவன். யோசேப்பு எதை பிரதிநிதித்துவப்படுத்தினான், இந்த ஆவிக்குரிய யாத்திரையில் ஆவிக்குரிய பங்கு. அங்கே இப்பொழுது ஒரு எழுப்பு.... நாம் சுதந்தரமான....
119. முடிவில், மதவாழிபாட்டின் சுதந்தரம் (freedom of religion) என்பதை அறியாத ஒரு பார்வோன்--ஒரு சர்வாதிகாரி தோன்றினான். அவன் அவர்களை ஒன்றாக இணைக்கிறான். நீங்கள் புரிந்து கொள்ளாமலேயே, அது உங்கள் சிந்தனைகளைக் கடந்து செல்ல விட்டு விடவேண்டாம். பார்வோன் ஒருவன் முதலில் வரவேண்டும். ஸ்தாபனங்கள், உண்மையான கிறிஸ்தவ மார்க்கம் என்னும் திராட்சை செடியில் ஒட்டு போடப்பட்ட கிளைகளாக செழித்து வாழ்ந்து, தங்களுடைய சொந்த கனிகளை ஈந்து வந்துள்ளன. ஸ்திரீகள் அரை உடையணிந்து, மனிதர் தங்கள் நுண்ணறிவை உபயோகித்து ஆவியின் வல்லமையைப் புறக்கணித்து, அதே சமயத்தில் கிறிஸ்தவ சபை என்னும் பெயரைச் சூடியுள்ளன. அவை திராட்சைச் செடியில் ஒட்டு போடப்பட்ட கிளைகளாகும். ஆனால் திராட்சை தோட்டக்காரன், அவரே கூறியுள்ளபடி, திராட்சை செடியை சுத்தம் செய்ய (prune) வரப்போகிறார். கனி கொடுக்காத கிளைகள் எல்லாம் வெட்டுண்டு தீக்கிரையாக்கப்படும். அது கூறுவதற்கு பயங்கரமாயுள்ளது. ஆனால் உண்மை சில சமயங்களில் பயங்கரமாகக் காட்சி அளிக்கும். தேவன் தமது பிள்ளைகளை ஆழமான தண்ணீர்களின் வழி ஆகவும், உளையான சேற்றின் வழியாகவும் கொண்டு செல்லுகிறார். அவர் அம்முறையைக் கடைபிடிக்கிறார்.
120. ஒரு பானை மறுபடியும் வனையப்படுவதற்கு முன்பாக, அது சிறு சிறு துண்டுகளாக உடைக்கப்பட்டு, மறுபடியும் அரைக்கப்பட வேண்டும். அதை உடைப்பது கோரமான காட்சியாகத் தென்படலாம். ஆனால் அழகான பாண்ட-மாக அதை மறுபடியும் வனையவேண்டுமானால், அது அவ்வாறு நொறுக்கப் படவேண்டும்.
121. யோசேப்பை அறியாத ஒரு பார்வோன் எழும்பினான். அது தான் இஸ்ரவேல் ஜனங்களின் பிரயாணத்திற்கு (யாத்திரைக்கு) ஆரம்ப கட்டமாக இருந்தது. அரசியல் நோக்கத்துடன் உருவான போது, கர்த்தரும் அப்பொழுது ஆயத்தமானார். 
122. எமோரியரின் அக்கிரமம் அப்பொழுது நிறைவு பெற்றது. ஆபிரகாமுக்கு அவர் வாக்குத்தத்தம் செய்த அந்த சமயம் வந்து விட்டது. இஸ்ரவேலரை மீட்க வேண்டிய சமயம் அருகாமையில் வந்துவிட்டது. யோசேப்பை அறியாத ஒரு பார்வோன் தோன்ற தேவன் அனுமதித்தார். அதன் விளைவாக ராமசேஸ் (Rameses) பிறந்தான். சேட்டி (Seti)க்குப் பிறகு ராமசேஸ் தோன்றினான். இந்த ராம்சேஸ் யோசேப்பு பெற்றிருந்த ஆசீர்வாதங்களை அறியாதவன். ஆவிக்கு உரிய தன்மைகளை அவன் அறியாதவனாயிருந்தான். அவன் ஒரு அரசியல் மேதை. அவனுடைய இராணுவ வல்லமையைக் கொண்டு அவன் எத்தியோப்-பியாவையும் ஏனைய நாடுகளையும் கைப்பற்றினான். இராணுவ வல்லமை ஒன்று மாத்திரமே அவனுக்குத் தெரியும்.
123. ஆவிக்குரிய சிந்தை கொண்ட எந்த மனிதனும் இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வான் என்று கருதுகிறேன். மத வழிபாட்டின் சுதந்தரம் என்னவென்று அறியாத ஒரு பார்வோனை நாம் பெற்றிருக்கிறோம். நமது ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்த போது மத வழிபாட்டின் சுதந்தரத்தில் அவர் நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரமாணம் எடுத்தக் கொள்ள மறுத்து விட்டார். 
124. அன்றொரு நாள் கறுப்பு மனிதர்களை ஒதுக்கி வைத்தல் என்னும் (Segregation) பிரச்சினை தென்பாகத்தில் உண்டான போது என்ன நேர்ந்தது-? அலபாமாவின் ஆளுநர், நான் மார்டின் லூதர்கிங் என்னும் போதகருடன் பேச விரும்புகிறேன். தன் ஜனங்களை மரணக் கண்ணிக்குள் வழி நடத்தும் ஒருவர் எவ்விதம் தலைவராக இருக்க முடியும்-? 
125. அவர்கள் அடிமைகளாக இருப்பார்களானால் நானும் அங்கு சென்று அவர்கள் உடன் போராடுவேன். ஆனால் அவர்கள் அடிமைகள் அல்லவே; அவர்கள் இந்நாட்டின் குடிமக்கள். 
126. பள்ளிக் கூடத்திற்குச் செல்லும் விஷயத்தில் அவர்கள் ஒதுக்கி வைக்கப்-பட்டுள்ளனர். அவ்விதம் செய்பவர் கடின உள்ளம் கொண்டவராய், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமலிருக்கின்றனர். அரசியல் ஆதிக்கத்தை தங்கள் மனதில் கொண்டுள்ள அத்தகையோருக்கு ஆவிக்குரிய காரியங்களை நுழைக்க முடியாது ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். அப்பொழுது தான் இவைகளை அவர்கள் உணர்ந்து கொள்ள முடியும். 
127. இந்த மார்டின் லூதர் கிங் என்பவருடன் பேசத்தருணம் கிடைத்தால் நலமாயிருக்கும். மார்க்கத்தின் பெயரால் அவர் இந்த அருமையான மக்களை மரணக்கண்ணிக்குள் வழி நடத்துவதனால் ஆயிரக்கணக்கானவர் கொல்லப்-படுகின்றனர். அவர்கள் மாம்சப் பிரகாரமானவைகளையே நோக்குகின்றனர்.
128. இந்த கறுப்பு சகோதரன்... லூசியானாவில் கறுப்பு மனிதர்களின் பெரிய எழுச்சி உண்டான போது, நான் அப்பொழுது அங்கிருந்தேன். அங்கு வயோதிப கறுப்பு சகோதரன் ஒருவர்,.. ஒரு போதகர் எழுந்து நின்று இராணுவ சேவகர்களிடம், ''அவர்களிடம் நான் பேசலாமா-? அவர்கள் என் ஜனங்கள்,'' என்று உத்தரவு கேட்டார். அருமையான அந்த வயோதிபப் போதகர் எழுந்து நின்று அங்கு குழுமியிருந்த கறுப்பு சகோதரர்களிடம், “ஒன்றை நான் உங்கள் இடம் கூற விரும்புகிறேன். என் நிறத்தைக் குறித்து நான் இது வரைக்கும் வெட்கப்பட்டதில்லை. என் சிருஷ்டிகர் என்னை இவ்விதமாக சிருஷ்டித்தார்,'' என்றார். 
129. அவர் சிருஷ்டித்த விதமாகவே நீங்கள் இருக்கவேண்டுமென தேவன் விரும்புகிறார். அவர் வெள்ளை பூக்களையும், நீல நிறப்பூக்களையும் மற்றெல்லா வண்ணங்களிலும் பூக்களைப் படைத்திருக்கிறார். அவைகளை ஒன்றுக்கொன்று சேர்த்து, வேறு பல இனங்களை உண்டாக்க வேண்டாம். அப்படி செய்வதனால், நீங்கள் இயற்கைக்கு விரோதமான செயல்களைப் புரிகின்றீர்கள். 
130. அந்த வயோதிபப் போதகர், ''இன்று காலை வரை என் நிறத்தைக் குறித்து நான் வெட்கப்பட்டதில்லை. ஆனால் என்னுடைய ஜனங்கள் எழும்பி வன் முறைகளில் ஈடுபடும் போது, அது அவர்களைக் குறித்து என்னை வெட்கம் அடையச் செய்கின்றது,'' என்றார்.
நான், “தேவன் அந்த சத்தத்தை ஆசீர்வதிப்பாராக,'' என்று எண்ணிக் கொண்டேன். 
131. அவர் கறுப்பு மனிதர்களை நோக்கி, “நீங்கள் சச்சரவு தான் உண்டாக்கப் போகின்றீர்கள். நமக்கென்று இருக்கும் பள்ளிக்கூடங்களைப் பாருங்கள். நமக்குப் பள்ளிகள் இல்லையென்றால் சரி. ஆனால் லூசியானாவிலேயே மிகச்சிறந்த பள்ளிகள் நமக்குள்ளனவே,'' என்றார். 
132. அவர் மேலும், “ஷ்ரீவ்போர்ட் என்னும் பட்டினத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அங்கு வெள்ளையருக்கென ஒரு பள்ளிக் கூடம் இருக்கின்றது. அது ஒரு பழைய பள்ளிக் கூடம். அவர்கள் வேறொரு பள்ளிக் கூடத்தை அங்கு கட்டி உள்ளனர். பிள்ளைகள் விளையாட ஒரே ஒரு கருவியே அங்குண்டு. ஆனால் நமக்கோ முற்றம் நிறைய விளையாட்டுக் கருவிகள் உள்ளன. அது மாத்திரமல்ல, நம் பிள்ளைகளுக்கு அவர்கள் சலவைக் கற்களினால் நீச்சல்குளம் ஒன்றைக் கட்டிக் கொடுத்திருக்கின்றனர். நமக்கு மிகச் சிறந்த ஆசிரியர்கள் இருக்கின்றனர். மேன்மையானவைகள் நமக்கிருக்க, அங்கு செல்வதற்கு நீங்கள் ஏன் விரும்புகின்றீர்கள்-? உங்களுக்கு என்ன நேர்ந்தது-?'' என்று கேட்டார்.
133. ஆனால் ஜனங்களோ ஆர்ப்பாட்டம் செய்து அவர் குரலை அடக்கி விட்டனர். பாருங்கள், தவறான உணர்ச்சி, ஒரு காலத்தில் அவர்கள் அடிமைகளாய் இருந்தனர். ஆனால் அவர்கள் என் சகோதரரும் சகோதரிகளும் ஆவர். அவர்கள் அடிமைகளாயிருந்தால், நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, வீதிகளில் போராட்டம் நடத்தியிருப்பேன். 
134. ஆனால் அவர்கள் அடிமைகளல்லவே-! அவர்கள் இந் நாட்டின் குடிமக்கள். மற்றவரைப் போல் இவர்களுக்கும் சம உரிமை உண்டு. ஆனால் லட்சக் கணக்கானவர் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே பாதாளத்திலிருந்து புறப்பட்டுவரும் தவறான உணர்ச்சியாக இது அமைந்துள்ளது. அவர்கள் புரட்சி உண்டாக்குவார்கள் - நிச்சயமாக. அது தவறான செயலாகும்.
135. மனிதருக்கும் பெண்களுக்கும் அவரவர் உரிமையுண்டு. அவர்கள் எவ்வித நிறமுடையவர்களாயிருந்தாலும் சரி - கறுப்பு நிறமுள்ள நமது சகோதரர், மஞ்சள் நிறங்கொண்ட ஜப்பானியர், வெள்ளையர் - யாராயிருந்தாலும் சரி; தேவனுடைய பார்வையில் நிறத்தின் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் கிடையாது. நாம் அனைவரும் ஆதாமினின்று, ஒரே மனிதனில் இருந்து தோன்றினவர்கள். ஆனால் தேவன், நம்மை வேறு பிரித்து, வெவ்வேறு நிறங்களை அளித்துருப்பாரானால், நாம் அவ்வாறே நிலைகொள்வோம். நான் மஞ்சள் நிறம் கொண்டவனாயிருந்தால். நான் ஜப்பானியனாகவோ அல்லது சீனனாகவோ இருக்கவே விரும்புவேன். நான் கறுப்பனாக இருந்தால் அவ்வாறே நிலை கொள்ள விரும்புவேன். ஏனெனில் தேவன் என்னை அவ்வாறே படைத்திருக்கிறார்.
136. வெளிப்படையாகக் கூறப்போனால், கறுப்பு இனத்தவரின் அனேக பண்புகளை வெள்ளையர் பெற்றுக் கொள்ள வேண்டியவராயிருக்கின்றனர். அவர்களுக்கு எவ்வித கவலையும் கிடையாது. வெள்ளையரைக் காட்டிலும் அவர்கள் ஆவிக்குரியவராகத் திகழ்கின்றனர். வெள்ளையர் நெருங்கவும் கூட முடியாத ஆயிரக்கணக்கான காரியங்களை கறுப்பு நிறமுள்ளவர்கள் கொண்டு உள்ளனர். தேவன் அவர்களை அவ்விதம் படைத்திருக்கிறார். கறுப்பு நிறத்தவரின் பாட்டுக்குழுவுடன் யார் போட்டியிட்டு பாடல்களில் வெல்ல முடியும்-? அவர்களுக்குள்ள இனிய குரலை வேறு யார் பெற்றிருக்கின்றனர்-? 
137. தங்கள் நாட்டிலிருந்து அவர்கள் இங்கு குடியேறினபோது, வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத நிலையில் இருந்தனர். அவர்கள் இடையே 30 அல்லது 40 இனங்கள் உண்டு. அவர்கள் ஒன்று சேர்ந்து பாடும் போது, அவர்கள் எழுப்பும் உச்ச சாரீரத்தை பாடற்குழுவின் தலைவர்களும் கூட, “அவர்கள் எழுப்பும் உச்ச சாரீரத்தை எங்களால் எட்டி பிடிக்க முடியாது,'' என்கின்றனர்.
138. அனேக ஆண்டுகளாக நன்கு பயிற்சி பெற்ற பாடற்குழு அவர்களுக்குண்டு. ஒருவர் உச்ச தொனியில் பாடுவார். மற்றொருவர் தாழ்ந்த தொனியில் பாடுவார். அதைக் கேட்பவர்கள், ''கவனியுங்கள், எவ்வளவு அழகாக இக்குரல்கள் ஒன்றிணைகின்றன'' என்பார்கள். அவர்கள் வரம் பெற்றவர்கள்.
139. ஆனால் இத்தகைய எழுச்சிகள் அனைத்தும் சம்பவிக்க வேண்டிய-வைகளாயிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் ஜனங்களாகிய நீங்கள் நேர்மை அற்ற இயந்திரங்களின் மூலம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதியே. அன்றொரு நாள், ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவிப் பிரமாணம் செய்து, ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவர் எழுந்து நின்று, இந்த இனப் பிரச்சினைக்கு (ஒவ்வொரு-ஒவ்வொரு மாநிலமும்) அதனதன் அபிப்பிராயப்படி விடைகாணலாம் என்று அரசியல் சாசனம் (Constitution) கூறுகின்றது, என்றார். 
140. அவர் எதற்கும் கவலை கொள்ளவில்லை. அவர் அரசியல் சாசனத்தைப் படித்து விட்டு, “இப்பொழுதுள்ள பள்ளிக்கூடங்கள் கறுப்பு இனத்தவரை ஒதுக்கி வைத்தலுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளன,'' என்று கூறினார். அங்கு ஒரு பள்ளிக்கூடம் உண்டு - இரண்டு கறுப்பு சிறுவர்கள் மாத்திரம் கொண்டது, அவர்களுக்கென பிரத்தியேக பள்ளிகள் இருந்த போதிலும், மற்ற பள்ளிக் கூடங்களில் சேரவேண்டுமென அவர்கள் விரும்பினர். ஒதுக்கி வைத்தலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரசியல் சாசனம் அமைந்துள்ளது என்பதை நிரூபிக்க அந்த ஆளுநர் எழுந்து நின்று அரசியல் சாசனத்தைப் படித்தார். 
141. இங்கு யோசேப்பை அறியாத ஒருவன் தோன்றுகிறான். சுதந்தரம் - கறுப்பு இனத்தவரின் வாக்குகளை (Votes) பெற ஆசிக்கிறான். குடியரசு கட்சி தான் (Republican-party) அவர்களுக்கு விடுதலையையளித்தது என்பதை அறியாதவர்-களாய், அவர்கள் தங்கள் பிறப்புரிமையை, தங்களை மரணக் கண்ணிக்கு வழி நடத்தும் அத்தகைய காரியங்களுக்கு விற்றுப் போட்டனர். இதன் மூலம் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எந்த முறைமையும் விழுந்து போகும் என்பதற்கு அவர்கள் சான்றுகளாயிருக்கின்றனர். 
142. திரு.கென்னடி அவர்களும் அந்த கார்டு' (Guards)களை தேசிய மயமாக்கி, அவர்களைத் தங்கள் சொந்த தகப்பனார்களுக்கு விரோதமாக திருப்பி, அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல் புரிந்தார். அவர்களோ, "நாங்கள் சண்டையிட மாட்டோம்' எனக் கூறி, ''நாம் ஜனநாயகத்தின் கீழிராமல், இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் உள்ளோம் என்பதை நம் நாட்டவர் கண்டு கொள்ளட்டும்'' என்றனர்.
143. ''ஜனநாயகக் கட்சியிலுள்ள தென்னாட்டு மனிதன் எப்பொழுதுமே ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்திருப்பான்'' என்னும் பழமொழியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தற்பொழுது எப்படியோ எனக்குத் தெரியாது. நடப்பவை-களை கண்டு துயிலெழ ஒருவனுக்குப் போதிய ஞானமிருக்கும் என்று எண்ணுகிறேன். இந்த அருமையான கறுப்பு இனத்தவரை விட்டு விடுங்கள். அவர்களைக் கொன்று போட வேண்டாம். அன்று ஒருவன், கறுப்பு சகோதரன் ஒருவனை, துப்பாக்கியால் முதுகில் சுட்டு கொன்று விட்டான். கொல்லப்பட்ட- வனுடைய மனைவியும் பிள்ளைகளும் அப்பொழுது வீட்டில் இருந்தனர். அவன் யாராயினும் எனக்குக் கவலையில்லை. அது மிகவும் ஈனமான செயலாகும்.' ஆம் ஐயா.
அந்த வழக்கில் ஒரு தடவை நான் நீதிபதியாக இருக்க விரும்புகிறேன். தன் மனைவி பிள்ளைகளிடம், தன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்ற அந்த மனிதனை சுடுவது, அவன் நாட்டின் குடிமகன், சரி என்று அவன் நினைக்கிற ஒன்றிற்காக நிற்க அவனுக்கு உரிமை உண்டு, ஒரு அருமையான மனிதன்.
ஃலைப் பத்திரிகையில் அந்த புகைப்படத்தைப் பிரசுரித்திருந்தனர்- அந்த சிறு பையன் தன் தகப்பனார் வேண்டும் என்று அழும் காட்சி. ஏதோ ஒரு துரோகி பதுங்கியிருந்து அவனை முதுகில் சுட்டு விட்டான். நீங்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தால், இப்படித் தான் நடக்கும். அது உண்மை. தேசம் முழுவதும் அரசியலின் கீழ் செயல்புரிகின்றது. இது மிகவும் அவமானமான ஒரு செயல். ஆனால் அதைத் தான் நாம் விரும்பினோம். அதை நாம் இந்த தேர்தலில் நிரூபித்து காண்பித்து விட்டோம். 
144. என் சிறிய மகன் இன்று காலை என்னிடம், ''அப்பா, யாத்திரீக பிதாக்கள் இங்கு வந்த போது, அவர்கள் கட்டுப்பட்ட ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனரா-? அவர்கள் நீளமான மேலாடைகளை (Coats) அணிந்து இருக்கின்றனரே,'' என்று கேட்டான்.
நான், “இல்லை, மகனே. அவர்கள் மதவழிபாட்டின் சுதந்தரத்தை நாடி இங்கு வந்தனர். அந்த விதமான காரியத்தை விட்டு வெளியேற வேண்டுமென்று இங்கு வந்தனர்.'” என்றேன்.
ஆனால் இப்பொழுது அது எந்நிலையை அடைந்துள்ளது என்பதை உங்களால் காணமுடிகின்றதா-? இந்த ராஜ்யங்கள் அனைத்தும் விழுந்து போகவேண்டும் என்பதையே அது காண்பிக்கின்றது. (நான் துரிதமாக முடிக்கவேண்டும்).
145. சகோ.மார்டின்-லூதர்-கிங் விழித்துக்கொண்டு உண்மையைக் காணவேண்டு மென்பதே என் ஜெபம். அவர் தமது ஜனங்களை நேசிக்கிறார். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அவருடைய உணர்ச்சி....
பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குச் சென்று, அதே சமயத்தில் லட்சக்கணக்-கானோர் மடிவதனால் என்ன பயன்-? பசி, அடிமைத்தனம் என்னும் நோக்கங்களுக்காக ஜனங்கள் உயிர்த் தியாகம் செய்தால், அது ஒரு நல்ல குறிக்கோளுக்காக செய்யப்பட்டது எனலாம், ஆனால் வெள்ளையரின் பள்ளிக் கூடங்களுக்குப் போக வேண்டும் என்பதற்காக இத்தனை பேர் மடிந்தால்.... அது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 
146. இந்த விஷயத்தில் பரிசுத்த ஆவியானவர் ஆமோதம் தெரிவிக்கமாட்டார் என்று கருதுகிறேன். அது ஜனங்களை ஒரு வித உணர்ச்சி வசத்துக்குள் கொண்டு செல்கின்றது. ஜெர்மனியில் ஹிட்லரும் அவ்விதம் செய்து, அந்த அருமையான ஜெர்மானியரை மரணக் கண்ணிக்குள் வழி நடத்தினான். கோடிக்கணக்கானவர் கொல்லப்பட்டு அவர்களுடைய பிரேதங்கள் ஒன்றின் மேல் ஒன்று குவியலாக்கப்பட்டன. அதுவே தான் இங்கும் சம்பவிக்கின்றது. இது ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் கடந்து சென்ற பிறகு, ஒருக்கால் இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். 
147. அதுவே இங்கும் சம்பவிக்கப் போகின்றது. அந்த அருமையான ஜனங்கள் ஈக்களைப் போல் கொல்லப்படுவார்கள். புரட்சி எழும்பி, வெள்ளையரும் கறுப்பரும் ஒருவரோடொருவர் சண்டையிட்டு, ஈக்களைப் போல மடிவார்கள். முடிவில் என்ன இருக்கும்-? மரித்த ஜனங்களின் குவியல்கள் மாத்திரமே. 
148. யோசேப்பை அறியாத பார்வோன் தோன்றினான். இன்றும் அதுவே சம்பவித்துள்ளது. ஒரு மனிதன் எழும்பி 'வெள்ளை மாளிகையில்' (White House) பதவிப்பிரமாணம் செய்யும் போது, மதவழிபாட்டின் உரிமையை அவர் நம்புவதாக பிரமாணம் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்.
149. புதிதாக நியமிக்கப்பட்ட போப்பாண்டவர் என்ன சொல்கிறார்-?- அவர் மனதில் நான்கு காரியங்கள் உள்ளன. அவைகளில் ஒன்று கத்தோலிக்க-ரையும் பிராடெஸ்டெண்டுகளையும் ஒருங்கே இணைப்பதாகும். மனித அறிவு கொண்டு நோக்கும் யாருக்கும் இது சரியென்று தென்படும். ஆனால் வேதப் பிரகாரம் இது தவறு. ஆனால் அது சம்பவிக்குமென்று வேதம் கூறுகின்றது. இன்னும் சற்று பார்ப்போம்.
150. எகிப்தில், ராமசேஸ் வளர்ந்து வந்தான். அவனுடைய ஆதிக்கமும் வளர்ந்து வந்தது. மாம்சப்பிரகாரமான ராம்சேஸ் வளர்ந்து வந்தான், அது போன்று மாம்சப்பிரகாரமான மனிதன், அந்திக் கிறிஸ்து, அரசியலின் மூலம் வளர்ந்து வருகிறான். அவன் ஏற்கனவே 'வெள்ளை மாளிகையில்' நுழைந்து விட்டான்.
மார்க்க சம்பந்தமான விஷயங்களில் அவன் ஜனங்களை குழப்பியுள்ளதன் காரணத்தால், அவர்களனைவரும் அதை ஏற்றுக் கொள்வார்கள். தேசத்திலுள்ள ஒவ்வொரு ஸ்தாபனமும் சபைகளின் குழுவில் (Confederation of Churches) அங்கத்தினராகி விட்டது. ராமசேஸ் வளர்ந்து வருகிறான். அவர்களெல்லாரும் ஒன்று சேருகின்றனர். பின்பு அது என்ன செய்கிறது-? அது ஒரு ஆதிக்கத்தை பிறப்பிக்கின்றது - முதலாவது தோன்றின மிருகத்தைப்போல். 
151. இந்த ஐக்கியத்தில் சேராத அனைவரும் துன்புறுத்தப்படுவார்கள். அவர்களைப் பகிஷ்காரம் செய்வார்கள். அப்பொழுது தாமதமாகியிருக்கும். ஏனெனில் அதில் சேர்ந்தவர் அனைவரும் மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்கின்றனர் ''அப்பொழுது நான் வெளியே வருவேன்,'' என்று சொல்ல வேண்டாம். அதை இப்பொழுதே செய்யுங்கள். ராமசேஸ் வளர்ந்து கொண்டிருந்தான். 
152. ராமசேஸ் எகிப்தில் ஆதிக்கத்தில் வளர்ந்து கொண்டு வந்த அதே சமயத்தில், கர்த்தர் மோசேயை வனாந்தரத்தில் வைத்திருந்தார். அவனும் வளர்ந்து கொண்டு வந்தான். ராமசேஸுக்கு அரசியல் ஆதிக்கம் இருந்தது. ஆனால் தேவன், மோசேயை ஆவிக்குரிய முறையில் வளர்த்து, அங்கிருந்து புறப்பட்டு வந்து இஸ்ரவேல் ஜனங்களுடன் பேசுவதற்காக அவனை ஆயத்தப் படுத்தினார். அவர்களிருவரும் ஒரே நேரத்தில் வளர்ந்து வந்தனர். ஒருநாளில் இவ்விருவரிடையே பலப்பரீட்சை (Showdown) உண்டாகும். அது வெகுதூரத்தில் இல்லை. 
153. ''இயற்கை சம்பவங்கள், ஆவிக்குரிய சம்பவங்களுக்கு முன்னடையா-ளமாயுள்ளன'' என்று வேதம் கூறுகின்றது. அதிலிருந்து நீங்கள் தப்பமுடியாது. உங்கள் கண்களுக்கு முன்பாகவே அது நிறைவேறி வருகின்றது. அது உண்மை. உண்மையான சபை வெளியே அழைக்கப்பட்டு வல்லமையைப் பெறுவதைப்பாருங்கள். பரிசுத்தாவியானவர் இறங்கி வருகிறார். தேவனுடைய இரகசியங்கள் வெளியாக்கப்பட்டு ஒழுங்காகின்றன. உண்மையான சபை,.. ஸ்தாபனங்களல்ல. அவள் ஏற்கெனவே வெள்ளை மாளிகையில் இருக்கிறாள்; ஒன்றாக இணையத் தொடங்கி எமோரியரின் அக்கிரமங்களின் கட்டுகளினி-ன்று வெளியேறுகின்றது - ஜனங்கள் சுயாதீனம் பெறுகின்றனர். 
154. தீர்க்கதரிசியாகப் போகும் மோசேயைத் தேவன் கொண்டிருந்தார். அவன் ஏற்கனவே தீர்க்கதரிசனம் உரைத்து, அவன் கூறியது சரியென்று நிரூபிக்கப் பட்டிருந்த போதிலும், அவன் வனாந்தரம் என்னும் பள்ளியில் பயின்று, உலகத்தினின்று பிரிந்திருக்க வேண்டியதாயிருந்தது. அவன் அந்த வனாந்த-ரத்தில் பயிற்சி பெற்று, பழக்குவிக்கப்பட்டான். 
155. சத்துரு எப்பொழுதுமே அவனுடைய முறைமையைத் தெரிவிப்பான். அவிசுவாசம் என்பது அதை ஏற்றுக் கொள்ளும். சத்துரு உலகப்பிரகாரமான ஞானத்தின் அடையாளத்தைக் கொண்டிருக்கிறான். அதை மறந்து போக வேண்டாம். இரண்டு வல்லமைகளே உள்ளன. ஒன்று பரிசுத்தாவி ஆனவரின் ஆவிக்குரிய வல்லமை அல்லது; மற்றொன்று உலகப்பிரகாரமான ஞானம் என்னும் வல்லமையின் மூலம் பிசாசு கிரியை செய்தல் ஏதேன் தோட்டத்தில் அவன் அதைக் கொண்டே நுழைந்தான் - மாம்சீக ஞானத்தின் மூலம் அவன் நுழைந்து ஏவாளை, தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக, மாம்சீக ஞானத்தின் கருத்தை நம்பச் செய்தான். சிறுவரும் புரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு அது அவ்வளவு வெளிப்படையாய் அமைந்துள்ளது. தொன்று தொட்டு இதுவரைக்கும் அது போலவே இருந்து வந்துள்ளது. 
156. அங்கு ராமசேஸின் மூலம் மாம்ச ஞானத்தின் வல்லமை கிரியை செய்து அவனை ஆதிக்கத்திற்குக் கொண்டு வருகின்றது. அவன் யோசேப்பு - அந்தக் காலத்து சபை - செய்து வந்ததை செய்யக் கூடாதென்று அவர்களுடைய வழிபடும் உரிமையைப் பறிக்கிறான். 
157. இன்றும் நாம் அதையே காண்கிறோம் - மாம்சீக ஞானத்தின் வல்லமை சபைக்குள் நுழைந்து, வேதம் கூறுவது என்னவென்று கவலைகொள்ளாத ஒரு மதத் தலைவனை எழுப்பியுள்ளது. அவர்கள், தங்கள் சொந்த முறைமை-களைக் கொண்டுள்ளனர். வேதம் கூறுவதையல்ல, அவர்களுடைய சபை கூறுவதை.
158. பிராடெஸ்டெண்டுகளும் - சிறு சிறு குழுக்கள் உட்பட எல்லோரும் அதனுடன் இணைந்து விட்டனர். ''ஆம், வேதம் இதை கூறுகின்றது என்று அறிவோம். ஆனால் அந்த நாட்கள் கடந்துவிட்டன'' என்கின்றனர் - தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்கள். வேத வாக்கியம் ஒவ்வொன்றும் அதையே சுட்டிக் காண்பிக்கின்றது.
159. இதை ஒலிப்பதிவு செய்து ஜனங்களுக்கு அனுப்பவேண்டுமென்று நான் விரும்பிய காரணம் உங்களுக்குப் புரிகின்றதா-? அந்த மணி நேரம் வந்து விட்டது-! சத்தியம் அறிந்து கொள்ளப்பட வேண்டும். யாத்திரையின் தருணம் அருகாமையில் வந்து விட்டது. மாம்ச ஞானம் பரிபூரணமாகி விட்டது என்பது போல் காணப்படுகின்றது. ஆனால் அது சாத்தானால் ஊக்குவிக்கப்பட்டது. 
160. மாம்சீக ஞானம் கொண்ட ராம்சேஸ் வளர்ந்து சிம்மாசனத்திற்கு வரும் சமயத்தில்.. அவன் மோசேயின் சகோதரனாக வளர்ந்து வந்தான் என்பதை நினைவில் கொள்ளவும். மோசேக்கும் அவன் சகோதரருக்கும் இடையே உண்டாகி இருந்த அதே தொடர்பு போன்று, இவ்விருவரில் ஒருவர் மாம்சீக ஞானம் என்னும் ஸ்தானத்தை வகிக்க வேண்டியதாயிருந்தது. யோசேப்பின் சகோதரர் யோசேப்புக்கு என்ன செய்தனர்-? அவர்கள் அவனை பிரதஷ்டம் செய்தனர். வார்த்தையே தேவன். எனவே அவர்கள் வார்த்தையை பிரதஷ்டம் செய்து, அதற்குப் பதிலாக மனிதக் கோட்பாடு ஒன்றினை ஏற்றுக் கொண்டனர். அந்தக் கோட்பாடு வல்லமையுள்ளதாய் வளர்ந்துவிட்டது. ஓ, தேவனே, ஜனங்கள் இதைப் புரிந்து கொள்ளட்டும்.
இதைக் காட்டிலும் வெளிப்படையாய், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் வேத வாக்கியங்களின் மூலம் எப்படி விவரிக்க முடியும்-? “இது போப் ஜானிடமிருந்து அல்லது பேராயர் இன்னார் இன்னாரிடமிருந்து வந்தால் ஏற்றுக் கொள்வோம்'' என்று நீங்கள் கூறலாம். 
161. ஆனால் தேவன் ஒரு அற்பமான வனாந்தரவாசியைத் தெரிந்து கொண்டார் என்பதை உங்களால் காணமுடிகின்றதா-? அப்படியானால் இது எங்ஙனம் தவறாயிருக்க முடியும்-? தேவன் எப்பொழுதும் தனிப்பட்ட ஒரு நபருடன் ஈடுபடுகின்றாரேயன்றி, ஒரு குழுவினுடனல்ல, அவர் கிரியை செய்ய தனிப்பட்ட ஒரு மனிதனே அவருக்கு அவசியம் - ஒரு மனிதன் தான் அவருக்குத் தேவை.
162. ஒவ்வொரு காலத்திலும் தனிப்பட்ட ஒரு மனிதனைத் தெரிந்து கொள்ள அவர் முயன்று வந்திருக்கிறார். நோவாவின் காலத்தில் ஒரே ஒரு மனிதனை மாத்திரம் அவர் இதற்கென்று தெரிந்து கொண்டார். எலியாவின் காலத்திலும் யோவான் ஸ்நானனின் காலத்திலும் அவர் ஒரு மனிதனையே தெரிந்து கொண்டார். அவருக்கு தேவையானதெல்லாம் ஒரு மனிதன் தான். 
163. நியாயாதிபதிகளின் காலத்திலும் அவர் சிம்சோன் என்னும் ஒரு மனிதனையே தெரிந்து கொண்டு அவனுக்கு மிகுந்த பலத்தை அளித்தார். அவனோ அதை ஒரு ஸ்திரீக்கு விற்று போட்டு, அதன் விளைவால் குருடாக்கப்பட்டான். நியாயாதிபதிகள் நியாயாதிபதிகளல்ல, தேவனே நியாயாதிபதி. பாருங்கள்-?
164. இன்றைக்கும் அவர் ஒரு மனிதனையே தெரிந்து கொள்ள விரும்புகிறார்- சத்தியத்தை அஞ்சாமல் அறிவித்து ஸ்தாபன கோட்பாடுகளில் பங்கு கொள்ளாதவன்; தமது கரங்களில் அவனை ஏந்திக் கொண்டு தமது வார்த்தை ஜீவனுள்ளதென்றும் அவரும் ஜீவிக்கிறார் என்பதையும் காண்பிக்க.
அத்தகைய ஒருவனை அவரால் ஆயத்தம் செய்ய முடியும் என்பதை நான் நம்புகிறேன் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு சத்தியத்தை அறிவிக்கும் ஒரு மனிதனை அவரால் ஆயத்தம் செய்ய முடியுமென்று என்னால் உறுதியாக நம்ப முடியும். 
165. இப்பொழுது கவனியுங்கள் - சத்துரு ஏதோ ஒன்றை அறிவிக்கிறான். மாம்சீக ஞானம் கொண்டவர் அதை ஏற்றுக் கொள்கின்றனர். ஏனெனில் சத்துரு எப்பொழுதும் மனித ஞானத்தையே பிரயோகிக்கிறான், மனித சிந்தை உடனே அதை ஆராய்ந்து பார்க்கத் தலைப்படுகின்றது. அன்றொரு நாள் ஒரு மனிதனுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன், அவர் பொது நிர்வாகம் ஒன்றில் பணி புரிகிறார். அவர் சிறந்த மனிதர். அவர் என்னிடம், ''பில்லி, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் அயர்லாந்து நாட்டவர் தானே-?'' என்று கேட்டார்.
நான், ''ஆம், ஐயா. அதைக் குறித்து நான் வெட்கமடைகிறேன். ஆனால் அது உண்மை,'' என்று பதிலளித்தேன்.
அதற்கு அவர், “சரி, நீர் உண்மையாக ஒரு கத்தோலிக்கனாக இருக்க வேண்டுமென்பது உமக்குத் தெரியாதா-?'' என்றார்.
நான், "ஆம், நான் மூல கத்தோலிக்கன்'' என்று விடையளித்தேன்.
166. முதலாம் சபை கத்தோலிக்க சபை என்று உங்களுக்குத் தெரியும். அது தற்பொழுது எந்நிலையடைந்துள்ளது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அது பெந்தெகொஸ்தே நாளன்று தொடங்கினது. ஆனால் ஸ்தாபனங்கள் அதை இந்நிலைக்குக் கொண்டு வந்து விட்டன. பெந்தெகொஸ்தேவைப் பாருங்கள். அதுவும் திரும்ப வந்து ஸ்தாபனமாக்கிக் கொண்டு, முதலாம் கத்தோலிக்க சபை செய்தது போல செய்தது, கத்தோலிக்கர் அடைவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் எடுத்தக் கொண்டனர், ஆனால் பெந்தெகொஸ்தேவிற்கு ஐம்பது வருடங்கள் மாத்திரமே பிடித்தது. 
167. அவர் பின்னும், “மத சம்பந்தமான தலைவர்கள் கொண்ட குழு ஒன்று தங்கள் ஞானத்தினால் (பாருங்கள்-!) ஆலோசனை செய்து பொதுவான ஒரு முடிவுக்கு ஆமோதம் தெரிவித்தால், அது மிகவும் நன்றாயிருக்குமல்லவா-? உங்கள் பிரசங்கத்தைக் கேட்க நான் இங்கு வருகிறேன். ஆயினும் உங்களிடம் இவ்விஷயத்தில் எனக்கு வித்தியாச பேதம் உண்டு,'' என்றார்.
''அவ்வித வித்தியாச பேதம் நியாயமென்று நீங்கள் கருதினால் அதை வேதத்தைக் கொண்டு மாத்திரம் நீங்கள் நிரூபிக்க வேண்டும்,” என்றேன்.
அவரோ, "வேதத்திற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை,'' என்றார்.
அதற்கு நான், ''ஒருக்கால் நீங்கள் அத்தகைய கருத்து கொண்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அதற்கு சம்பந்தமுண்டு. ஏனெனில் அது தேவனுடைய வார்த்தை,'' என்றேன்.
பாருங்கள், அவர், ''கல்வியறிவு கொண்ட மதத் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்து முடிவுக்கு வருவது, படிப்பில்லாத உம்முடைய கருத்தைக் காட்டிலும் சரியாக அமைந்திருக்கும்,'' என்றார்.
நான், "இருக்கலாம்....,'' என்று இழுத்தேன். 
168. அவரோ, "எங்கள் சபைக்கு விரோதமாக பேசுவதற்கு உமக்கு என்ன வேலை-? நீர் அன்று ஏழு சபைக் காலங்களைக் குறித்து பிரசங்கம் செய்தது போன்று, அநேக ஆண்டுகளுக்கு முன்னர் ரோமாபுரியிலிருந்த நிசாயாவில் ஒரு ஆலோசனை சங்கம் கூடி, ரோமன் கத்தோலிக்க சபையை ஸ்தாபித்தது. தேவனால் அனுப்பப்பட்ட, ஆவியைப் பெற்ற ஆயிரக்கணக்கானவர் அந்த ஆலோசனை சங்கத்தில் அமரவில்லையா-? அவர்களுடைய சிந்தை, உம்மைக் காட்டிலும் மேலான விதத்தில், தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ள ஏதுவுண்டாயிருக்கும் என்று நீர் எண்ணுவது கிடையாதா-? சபை கூறுவது சரியானதே என்று தேவன் இந்த 2000 ஆண்டு காலமாக நிரூபித்து வந்திருக்கிறாரே-!'' என்று கேட்டார்.
169. நான், ''நீர் கூறுவதுபோல், அவர் நிரூபிக்கவில்லை. அது உண்மையான சபையாயிருக்குமானால், ஆதி சபை செய்த கிரியைகளை அது செய்யட்டும் பார்க்கலாம்,'' என்று பதிலுரைத்தேன். "வேதத்திலுள்ள ஒரு எழுத்தின் உறுப்பு கூட அவமாய்ப் போகாது'' என்று வேதம் உரைக்கின்றது. ''அதனுடன் ஒரு வார்த்தை கூட்டினால் அல்லது குறைத்தால் அவனுடைய பாகம் எடுத்துப் போடப்படும்,'' என்று தேவன் கூறியுள்ளார். அது உலக சபை ஆலோசனை சங்கம் அல்லது யாராயிருந்தாலும் சரி, அதனுடன் அவனுடைய பாகம் முடிவு பெறுகின்றது.
அவரோ, ''பில்லி , நீர் தவறாகக் கூறுகின்றீர்,'' என்றார்.
170. நான் அவரிடம், "ஒரு காலத்தில் இஸ்ரவேலர், பிராடெஸ்டெண்டுகள், கத்தோலிக்கர் என்னும் சாராரைப் போன்று இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்தனர்- இஸ்ரவேல் கோத்திரத்தார் அவ்வாறே பிரிந்து இருக்க விரும்பினர். அங்கு யோசபாத் என்னும் நீதிமான் ராஜாவாக இருந்தான் என்று பார்க்கிறோம். அவன் தேவனுடைய கட்டளைகளைக் கைக் கொண்டு இருந்தவன். அதே சமயத்தில் ஆகாப் என்னும் வேறொரு அரசனும் இருந்தான். அவன் அரசியல் காரணமாக மற்றொரு நாட்டுடன் நட்பு கொள்ள வேண்டும் என்பதற்காக வேறொரு நாட்டின் பெண்ணை - யேசபேல் என்பவளை - மணந்து கொண்டு, அவளை தேவனுடைய ஜனங்களின் மத்தியில் கொண்டு வந்தான். அதை தாம் நாம் இக்காலத்தில் செய்துள்ளோம். அவள் நாட்டை ஆளத் தொடங்கினாள். இதைச் சொல்ல, அதைச் சொல்ல அவள் ஆகாபைத் தூண்டினாள். இன்று நாம் செய்வது போன்று அப்பொழுது இவ்விரு சபைகளையும் இணைக்க வேண்டுமெனும் கட்டம் ஒன்று தோன்றினது. இன்று அவர்கள் முயன்று வருவது போன்று. ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஆகாப் யோசபாத்தினிடம், ''அது மிகவும் நல்லது, உம் ஜனங்கள் என் ஜனங்கள். நாமெல்லாரும் கிறிஸ்த-வர்கள். நாம் அனைவருமே விசுவாசிகள். நாம் ஒன்று சேருவோம்'' என்றான். 
171. ஆனால் சோதனை கட்டம் வந்தபோது, யோசபாத் “இதைக் குறித்து நாம் ஜெபம் செய்யவேண்டியது அவசியமல்லவா-? கர்த்தருடைய ஆலோசனையை நாம் பெறவேண்டும்,'' என்றான். ஆகாபும், “ஆம்” என்று ஆமோதித்தான். 
172. யோசபாத், “தேவனுடைய தீர்க்கதரிசி ஒருவனை நாம் கண்டு பிடிப்போம்” என்றான். ஆனால் ஆகாபோ, தேவனால் உண்டானதென்று அவன் கருதி இருந்த ஒரு முறைமையைக் கையாண்டிருந்தான். அவன் யோசபாத்திடம், “நன்கு பயிற்சி பெற்ற 400 தீர்க்கதரிசிகளை நான் கொண்டு வருகிறேன். அவர்கள் எபிரெய தீர்க்கதரிசிகளென்று தங்களை அழைத்துக் கொள்கின்றனர்'' என்றான். (இன்றுள்ள போதகக்குழுக்கள் தங்களை அழைத்துக் கொள்ளும் விதமாக). 
173. அந்த தீர்க்கதரிசிகள் கொண்டு வரப்பட்டனர். யுத்தத்தில் என்ன நேரிடுமென்று அவர்களைக் கேட்ட போது அவர்களனைவரும் - உலகசபை ஆலோசனை சங்கம் இன்று செய்வது போல் - ஒன்று கூடி, "நீங்கள் போங்கள், கர்த்தர் உங்களுடனேகூட இருக்கிறார். அந்த தேசம் உங்களுக்கே சொந்தமா னது. சீரியரை, இல்லை, பெலிஸ்தியரை வெளியே தள்ளுங்கள். ஏனெனில் தேசம் நமக்கு சொந்தமானது,' என்றனர். அது மிகவும் நியாயமாகத் தென்பட்டது.
174. ஆயினும் யோசபாத்தின் இருதயத்தில் அது சரியென்றுபடவில்லை. அவன் ஆகாபிடம், "உம்மிடம் நன்கு பயிற்சி பெற்ற 400 பேர் கொண்ட ஆலோசனை சங்கம் உண்டு என்பது எனக்குத் தெரியும். அவர்கள் அனைவரும் ஒரே சிந்தை உடையவர்களாய் இருக்கின்றனர் (அவர்கள் ஒரு ஜோடி இருப்புக் கொம்புகளை உண்டாக்கி," கார்த்தர் உரைக்கிறதாவது'', என்றும் கூறினார்கள்.) ஆனால் இவைகளைத் தவிர கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறு யாராகிலும் இல்லையா-? என்று கேட்டான். 
175. ஆனால் அரசியல்வாதியான ஆகாப், "ராஜாவே, அப்படி சொல்ல வேண்டாம். இவர்கள் அனைவரும் நன்கு பயின்றவர்கள். நானே அவர்களுக்குப் பயற்சி அளித்தேன்,'' என்றான். அது தான், அது தான். "நானே அவர்களுக்குப் பயிற்சியளித்தேன். இன்னும் ஒருவன் இருக்கின்றான். அவனை நான் வெறுக்கிறேன்'' என்றான்.
பாருங்கள், ''அவன் பெயர் மிகாயா. அவன் இம்லாவின் குமாரன். அவனை நான் வெறுக்கிறேன். அவன் துரோகியல்லாமல் வேறல்ல. அவன் எப்பொழுதும் கூச்சலிட்டு, நான் செய்கிறது தவறென்று கூறுகின்றான். என்னுடைய ராஜ்யத்தைப் பாருங்கள்.'' என்றான்.
ஆம், அந்த ராஜ்யத்தைப் பார்த்தால் எல்லாமே குழப்பமாக அமைந்துள்ளது. 
176. இன்றுள்ள உங்கள் ஸ்தாபனங்களைப் பாருங்கள். அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாய் இருக்கின்றனர். நீங்கள் இலட்சக்கணக்கான பேர்களைக் கொண்டவர்களாய் இருந்து சிறந்த பயிற்சி பெற்றவர்கள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் ஆவிக்குரிய விஷயத்தில் உங்கள் நிலையென்ன-? சிம்சோன் பெற்றிருந்த வல்லமை உங்களிடம் எங்கே-? அன்று நான் கூறினது போன்று, சிம்சோன் அங்கு நின்று கொண்டிருந்த போது அவனுடைய பெரிய தேக அமைப்பு மாத்திரமே அங்கு இருந்தது. ஆனால் அதற்குள் ஜீவன் இல்லை. ஆவியானவர் அவனை விட்டுப் போய் விட்டார். அவன் ஒன்றுக்கும் உதவாதவனாய், கண்கள் குருடாக்கப் பட்டு, சிறு பிள்ளைகள் அவனுக்குக் கைலாகு கொடுத்து நடத்திச் சென்றனர். இது அனைத்திற்கும் ஒரு ஸ்திரீயே காரணமாய் இருந்தாள். இன்றைய ஸ்தாபனங்களும் அதே நிலையில் உள்ளன. அவர்கள் அரசியல் பேராயர்கள், மூப்பர்கள் போன்றவர்களால் வழி நடத்தப்படுகின்றனர். நாம் எந்நிலையில் உள்ளோம்-!
177. ஆகவே அவர்கள் இம்லாவின் குமாரனாகிய மிகாயாவுக்கு ஆள் அனுப்பி அழைத்து வந்தனர். ஆகாப் யுத்தத்திற்குச் சென்றால் அவன் கொல்லப் படுவான் என்று மிகாயா தீர்க்கதரிசனம் உரைத்தான். இதைக் கேட்ட பிரதம பேராயர் அவனைக் கன்னத்தில் அடித்தான். அவன் அதை உத்தமமாகவே செய்தான். அவன், ''கர்த்தருடைய ஆவி என்னை விட்ட பின்பு எங்கு சென்றது-?" என்று கேட்டான்.
அதற்கு மிகாயா, “நீ அதைக் காண்பாய்," என்றான். 
178. ஆகாப், “இவனை சிறையிலடைத்து இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் இவனுக்குச் சாப்பிடக் கொடுங்கள். நான் சமாதானத்துடன் திரும்பி வரும் போது இவனைக் கவனித்துக் கொள்வேன்,'' என்றான். 
179. மிகாயா தேவனுடன் சரியாக பொருந்தியிருப்பதை நன்கு உணர்ந்து இருந்தான். ஏன்-? ஏனெனில் அவன் கண்ட தரிசனம் தேவனுடைய வார்த்தையுடன் ஒன்றாக இணைந்தது. அவன் ஒரு தீர்க்கதரிசி. அவனுடைய ஆவியும் தரிசனமும் எலியாவுக்கு இருந்ததைப் போலவே இருந்தன. எனவே அவன், ''நீர் சமாதானத்தோடே திரும்பி வந்தால், கர்த்தர் என்னைக் கொண்டு பேசினதில்லை'' என்றான். 
180. நான் அந்த ஆளிடம், “யார் சரி-? மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேர் கொண்ட ஆலோசனை சங்கமோ, அல்லது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, துரோகியெனக் கருதப்பட்ட ஒரு மனிதனா-?'' என்று கேட்டான்.
அவரோ, “எப்படி உங்களுக்கு வித்தியாசம் தெரியும்'' என்றார்.
நான், ''வரைப்படத்துக்கு செல்லுங்க,ள்'' என்றேன். வரைபடம் இல்லாமல் கட்டிடத்தை எப்படி கட்ட முடியும்-? 
181. அவர்கள் மாத்திரம் ஆகாபை எலியா சபித்தான் என்று சிந்தனை செய்து இருந்தால்-! அவன் இரத்தத்தை நாய்கள் நக்கும் என்று எலியா தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான். அவன் உரைத்தவாறு, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கின. தேவன் சபித்ததை அவன் எப்படி ஆசீர்வதிக்க முடியும்-?
அந்த காரியத்திலிருந்து வெளியே வாருங்கள்; அதிலிருந்து புறம்பே செல்லுங்கள். கிறிஸ்தவுக்குள்ளாக வாருங்கள்.
(ஒலி நாடாவின் இரண்டாம் பாகம் முழுமையாக இல்லை.... ஆசிரியர்). 
182. ''......ஆயத்தம் செய்கின்றனர். மாம்சப்பிரகாரமான சிந்தையோ அது சரியென்கிறது. இந்த அருமையான சகோதரனும் கூட அப்படித் தான். அவர், ''பாருங்கள், நாமெல்லோரும் ஒரே சபையாக இணைந்து விட்டால், நாம் சிதறப்பட்டுள்ளதைக் காட்டிலும் அது சிறந்ததாக இருக்குமல்லவா-?" என்றார். 
183. கத்தோலிக்கர்களும் பிராடெஸ்டெண்டுகளும், அவர்கள் ஒருவருக்-கொருவர் ஆமோதம் தெரிவிக்கும் ஆதாரத்தின் பேரில் ஒன்றாக இணைவது என்பது நியாயமாகத்தான் தோன்றுகிறது அல்லவா-? ஆனால் இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ-?'' ஒரு சாரார் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிருக்க, மற்றொரு சாரார் அது வேறொரு காலத்துக்குரியது என்று கூறும்போது (அதிலுள்ள வேறு சிலர் வேதத்தையே நம்புவது கிடையாது) இவ்விருவரையும் ஒருங்கே இணைத்தால் என்ன நேரிடும்-? கர்த்தர் குழப்பம் உண்டாக்குபவர் அல்லவே-! 
184. தேவன் தமது சபையை சீர்படுத்துவதற்கு முன்பாக, அவர்கள் எல்லோரும் இரண்டு நாட்கள் இரவும் பகலும் ஓரிடத்தில் ஏக சிந்தையுடன் காத்திருந்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய வழி நடத்தும் தன்மையாக அப்பொழுது இறங்கி வந்தார் - சபைகளின் ஆலோசனை சங்கம் அல்ல. உங்களுக்குப் புரிகின்றது என்று நம்புகிறேன்.
185. பாருங்கள், இந்த அவிசுவாசி தேவனுடைய வார்த்தை கூறுவது என்ன என்பதைக் கவனியாமல், அது கூறுவதை விசுவாசிக்காமல், மாம்ச சிந்தை கூறுவதை ஏற்றுக் கொள்கிறார். ஏவாளும் முதலாவதாக அதைத் தான் செய்தாள். அவளும்கூட தன் மாம்ச சிந்தை கூறுவதன் பேரிலேயே சார்ந்து இருந்தாள்.
சாத்தான் அவளிடம், “நான் கூறுவது நியாயமாகத் தென்படவில்லையா-? தேவனுடைய வார்த்தை அப்படி கூறுகின்றது என்று எனக்கும் தெரியும். ஆனால் ஒரு நிமிடம் கேள். நன்மை தீமை என்னவென்பதை நீ அறிந்தாயானால் நலமாயிருக்குமல்லவா-?'' என்று கேட்டான்.
ஏவாளும்,...... ஆம்'' என்று பதிலுரைத்து அவனுடைய யோசனையை ஏற்றுக் கொண்டாள்.
186. அப்படியே தான் அவர்களும் மாம்ச சிந்தை கொண்டு யோசனை செய்கின்றனர். அவிசுவாசம் என்பது அத்தகைய யோசனைக்கு வழிநடத்தும், ஆனால் விசுவாசமோ அதை தொடவும்கூட செய்யாது. நமது விசுவாசத் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு அது சரியென்றே தோன்றியிருக்காது. நாம் கிறிஸ்துவுக்குள் அவனுடைய சந்ததியாராய் இருக்கிறோம். 65- வயது சென்ற கிழவிக்கு குழந்தை பிறக்கும் என்பது,.. முக்கியமாக அவன் அவளுடைய வாலிப்பருவம் முதற்கு அவளுடன் வாழ்ந்து வந்திருக்கும் போது நியாய-மாகவே தென்படாது, அவனுக்கு 100=வயதாகி,'' அவளுக்குத் 90-வயதான போது, அப்பொழுதும் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை. டாக்டர் வல்லுநர்களும், விஞ்ஞானிகளும் சாராளைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, "அவள் கர்ப்பம் உலர்ந்து விட்டது. 40-ஆண்டுகளுக்கு முன்னமே அவளது பால் சுரப்பிகள் காய்ந்து விட்டன'' என்று கூறியிருப்பார்கள். அவளுடைய இருதயம் பிரசவிக்க கூடாதபடிக்கு பலவீனமாயிருந்தது. இவையனைத்தும் மாம்ச சிந்தையின் யோசனை தான். ஆனால் ஆபிரகாமோ அதை எல்லாம் நம்ப மறுத்து விட்டான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பினான். 
187. அப்படியானால் இன்று காலை ஆபிரகாமின் சந்ததியார் எங்கே-? போதகர்களே, அந்த பாபிலோனை விட்டு வெளி வந்தால், உங்களுக்கு உண்ண உணவும் குடிக்கத் தண்ணீரும் கிடைக்காமல் வீதிகளில் இருக்க நேரிடும் என்று ஐயமுறுகின்றவர்களே, உங்கள் விசுவாசம் எங்கே-? ''நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை'' என்று தாவீது கூறினான் அல்லவா-? ஆகவே பயப் படாதிருங்கள். கிறிஸ்துவுக்கு உண்மையாக இருங்கள். 
188. ஆனால் அவிசுவாசம் என்பது மாம்ச சிந்தையின் யோசனையை பிடித்துக் கொள்ளும். உங்களுக்குப் புரிகின்றதா-? அவிசுவாசம் நிகழ்கால காரியங்களில் யோசனையின் பேரில் சார்ந்திருக்கும். ஆனால் விசுவாசமோ அவ்விதம் செய்யாது. அது தேவனுடைய வார்த்தையையே நோக்கிப் பார்க்கின்றது. அது அசைக்க முடியாத கன்மலையாகிய தேவனுடைய நித்திய வசனத்தின் பேரில் இளைப்பாறுகின்றது. அதைக் காட்டிலும் இதுவே மேலானது,' என்று நீங்கள் எவ்வளவு தான் கூறினாலும், எனக்குக் கவலையில்லை. அது தவறு,' என்று வேதம் உரைத்தால், விசுவாசம் அதைத்தான் நம்பும். விசுவாசத்தின் இளைப்பாறுதலின் ஸ்தலம் அதுவே.
189. லூத்தரன்களே, பாப்டிஸ்டுகளே, கத்தோலிக்கர்களே, இவ்வுலகிலுள்ள ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களே, உங்களை இன்று காலை ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்கள் ஸ்தாபனங்கள் தேவனுடைய வார்த்தைக்கு முரணாக செயல்படும்போது, உங்கள் விசுவாசத்தை நீங்கள் எப்படி அவைகளின் பேரில் வைக்க முடியும்-? உங்களுக்கு எத்தகைய விசுவாசம் உள்ளது-? உங்களுக்கு மாம்ச சிந்தை கொண்டு யோசிக்கும் திறன் உள்ளதேயன்றி, விசுவாசம் கிடையாது, 'விசுவாசம் கேள்வியினால் (கேட்பதனால்) வரும்,'' எதைக் கேட்பதனால்-? மதபோதகர்களின் ஆலோசனைச் சங்கம் கூறுவதைக் கேட்பதனாலா-? ஒருக்கால் அவ்விதம் வயோதிப ஸ்திரீகளின் பிறந்த நாள் பஞ்சாங்கத்தில் (Old Ladie's Birthday Almanac) எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் தேவனுடைய வார்த்தையில் அடிப்படையொன்றை நீங்கள் காண முடியாது. ''விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தை கேட்கிறதனாலே வரும்'' ஆமென்.
190. யாராவது ஒருவர் அதற்கு முரணாகப் பேசி, அது தேவனுடைய வார்த்தை என்று கூறட்டும் பார்க்கலாம். வானமும் பூமியும் ஒழிந்து போம், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை. விசுவாசம் என்பதற்கு தேவனுடைய வார்த்தையே இளைப்பாறும் ஸ்தலமாகும். அது வார்த்தையாகிய கிறிஸ்து இயேசு என்னும் நித்திய கன்மலையின் மேல் ஏறிச் சென்று உச்சியையடைந்து, அங்கு இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. 
191. பலத்த காற்று பயங்கர சத்தமிட்டு அடித்தாலும், புயல் மோதினாலும், விசுவாசம் எப்பொழுதும் பாதுகாப்பாக அங்கு இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. தேவனுடைய வார்த்தையின் பேரிலே மாத்திரம் அது இளைப்பாறுகின்றது. உண்மையான கிறிஸ்தவ விசுவாசத்தின் உறைவிடம் தேவனுடைய வார்த்தை ஆகும். ஏனெனில் தேவன், அவருடைய எல்லா சத்துருக்களைக் காட்டிலும் மேன்மையானவர் என்று நிரூபிப்பாரென்று அதற்குத் தெரியும். நிலைமை எவ்வளவு மோசமாயிருப்பினும், சத்துருக்கள் எவ்வளவாக சூழ்ந்து கொண்டாலும், நீங்கள் தோல்வியடைந்தது போல் தோன்றினாலும் விசுவாசம் என்பதற்கு, அது வெற்றியடையும் என்று தெரியும். 
192. வியாதியஸ்தரே, இதை எவ்வளவாக உங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன்-! நீங்கள் நிச்சயம் சுகமடைவீர்கள் என்று விசுவாசித்து, அதை இறுகப் பிடித்துக் கொள்ளும் போது, எல்லா சூழ்நிலைகளும், வியாதிகளும் மற்ற அனைத்தும் நீங்கள் மரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று சுட்டிக் காட்டினாலும், நீங்கள் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை.
193. உண்மையான விசுவாசத்தின் புகலிடம்; இளைப்பாறும் ஸ்தலம்; தேவனுடைய வார்த்தையே; விசுவாசிப்பது போன்று காண்பிக்கும் பாவனை விசுவாசம் (Make-believe) உண்மையான விசுவாசம், நம்பிக்கை அல்ல; விசுவாசம். நம்பிக்கை அகன்று விடும்- ஒருக்கால் இருக்கலாமே என நம்பிக்கை எண்ணி, சில சமயங்களில் வெளியே சென்று விடும். ஆனால் விசுவாசமோ உள்ளே நுழைந்து, "அது ஏற்கனவே நிறைவேறிவிட்டது" என்று கூறும். அது தான் விசுவாசம்-! அங்கு தான் விசுவாசம் இளைப்பாறிக் கொண்டு இருக்கிறது. ஏனெனில் சத்துரு மேற்கொள்ள தேவன் ஒருக்காலும் அனுமதிக்கமாட்டார் என்று அதற்குத் தெரியும். அவர் ஒரு போதும் அப்படி செய்ததில்லை. சூழ்நிலை எவ்வாறு காணப்பட்டாலும், விசுவாசம் என்பதற்கு அது உறுதியாகத் தெரியும். 
194. பேழை மிதக்கும் என்று நோவா நன்கு அறிந்திருந்தான். கர்த்தர் சிங்கங்களின் வாயைக் கட்டிப் போடுவாரென்று தானியேலுக்குத் தெரியும். அக்கினியின் உக்கிரத்தைக் கர்த்தர் எடுத்துப் போடுவாரென்று எபிரெயப் பிள்ளைகள் அறிந்திருந்தனர். தம்மை தேவன் மறுபடியும் உயிரோடு எழுப்புவாரென்று இயேசுவுக்குத் தெரியும். ஏனெனில் ''என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்'' என்று தேவனுடைய வார்த்தை கூறியுள்ளது. அழிவு 72 மணி நேரம் கழித்தே தொடங்கும் என்று அவருக்குத் தெரியும், எனவே ''மூன்று நாட்களுக்குள் நான் உயிரோடெழுவேன்'' என்று அவர் கூறினார்.
பாருங்கள், தேவனுடைய வார்த்தை என்னும் புகலிடத்தில் அது நித்திய இளைப்பாறுதலை எடுத்துக் கொண்டது. அது அங்கே உறுதியாய் நின்றது. 
195. ஆனால் மாம்சசிந்தனையின் யோசனையோ, "இந்த முறைமை மேலான-தாகக் காணப்படுகின்றது. இதுதான் சரி" என்று கூறும். உன் மாம்ச சிந்தை கொண்டு யோசிப்பதினால் அது மேலானதாகத் தோற்றம் அளிக்கின்றது. விவேகத்தை, நீங்கள் நிரூபிக்க முடியும். ஆனால் விசுவாசத்தையோ உங்களால் நிரூபிக்க முடியாது. அப்படி செய்ய முடிந்தால், அது விசுவாசமாய் இராது. விசுவாசம் என்பது தேவனுடைய வார்த்தையையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் மாத்திரமே அறிந்திருக்கும். நீங்கள் காண முடியாததை அது காண்கிறது. ''விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.''
நீங்கள் உங்கள் மனித சிந்தை கொண்டு அதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாது. அது எப்படி நிறைவேறும் என்பதை என்னால் நிரூபிக்க முடியாது. அது எப்படி நிறைவேறும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது கண்டிப்பாக நிறைவேறுமென்று நான் விசுவாசிக்கிறேன். அப்படி நான் விசுவாசிக்கும் காரணம், தேவன் அது நிறைவேறும் என்று கூறியுள்ளதால் மாத்திரமே அத்துடன் அது முடிவு பெறுகின்றது. ஆகவே தான் அது சரி என்று எனக்குத் தெரியும். தேவனுடைய வார்த்தை சத்தியம் என்று எனக்குத் தெரியும்-! செய்தி உண்மையென்று எனக்குத் தெரியும்-! ஏனெனில் அது வார்த்தையில் இருக்கின்றது, மேலும் ஜீவிக்கின்ற தேவன் அதை நிரூபிக்கத் தக்கதாக மத்தியில் அசைவாடுவதை நான் காண்கிறேன். 
196. நாம் ஒரு யாத்திரையில் பிரவேசிக்கப் போகின்றோம். அது உண்மை. மரணம் கூட விசுவாசம் என்பதை அசைக்க முடியாது. ஒரு மனிதன் மரண வாசலில் நின்று கொண்டு, உயிர்த்தெழுதலின் வெற்றியை ஆர்ப்பரிக்க முடியும். பவுல், ''மரணமே, உன் கூர் எங்கே-? பாதாளமே, உன் ஜெயம் எங்கே-?'' என்று கரகோஷம் செய்தான். ஏனெனில் கிறிஸ்து உயிரோடு எழுந்தார். எனவே கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும் அவருடனே கூட அவர் கொண்டு வருவார். பாருங்கள். அது ஒருக்காலும் மாறாது. ஆம், விசுவாசம் தேவனுடைய வார்த்தையை தனது நித்திய இளைப்பாறுதலின் புகலிடமாகக் கொண்டுள்ளது. அது தேவனுடைய வார்த்தையிலேயே நிலை கொள்கிறது.
197. மறுபடியும் கவனியுங்கள்.... நமக்கு 25 நிமிடங்கள் உள்ளன. நீங்கள் பொருட்படுத்தாமலிருந்தால், இந்த ஒலி நாடாவை இன்னும் சில நிமிடங்கள் பதிவு செய்யலாம்.
கவனியுங்கள், யோசேப்பை அறியாத ஒரு ராஜா எழும்பினான். இஸ்ரவேலின் வல்லமையை அழிக்க அவன் கையாண்ட முதலாவது திட்டம் எது-? அவர்களுடைய குழந்தைகளை அவன் அழிக்கத் திட்டமிட்டான். அது சரியா-? கூர்ந்து கவனியுங்கள். 
198. அதே பிசாசு வேறொரு ராஜாவின் உருவத்தில் தேவனுடைய ஒரே பேறான குமாரனை அழிக்கத் திட்டம் இட்டான். அவர்கள் ஏற்படுத்திய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு, முதலாவதாக குழந்தைகளை அழித்தல். பிசாசு மிகவும் சாமார்த்தியமுள்ளவன். ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பு, முதலில் என்ன செய்யவேண்டுமென்று அவனுக்குத் தெரியும். அவனை மேற்கொள்ள வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, கிறிஸ்துவின் மேல் சார்ந்து, உங்களைத் தாழ்த்தி, அவர் உங்களை வழிநடத்த அனுமதிப்பதேயாகும். வேறு எந்த வகையிலும் நீங்கள் அவனை மேற்கொள்ள முடியாது.
199. உங்கள் புத்தி சாதுரியம் அதைச் செய்யமுடியாது. நீங்கள் விசுவாசித்து, அவர் மேல் சார்ந்திருக்க வேண்டும். அவரே மேய்ப்பன். ஓநாய்களை விலக்குவது ஆடுகளின் வேலையல்ல.
பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், ஆடுகள் மேய்ப்பனுடன் கூடவே இருக்க வேண்டும். கிறுஸ்துவுக்குள் மாத்திரமே பாதுகாப்புண்டு, வார்த்தை தான் கிறிஸ்து, அதுவே பாதுகாப்பான ஸ்தலம்.
200. கவனியுங்கள். ராமசேஸ் என்னும் அரசனின் உருவில் பிசாசு கிரியை செய்கின்றான். முதலாவதாக அவன் பிள்ளைகளைக் கொன்று போட்டான். தேவனுடைய குமாரன் பிறந்தவுடனே அவர் எகிப்தை விட்டு மாற்றப்பட்டார். ஏனெனில் தேவன், எகிப்தை சபித்துப் போட்டார். அதற்குப் பின்பு அது பழைய நிலைக்குத் திரும்பவே இல்லை. 
201. பின்பு சாத்தான் தன் இருப்பிடத்தை ரோமாபுரிக்கு மாற்றிக் கொண்டான். ரோமாபுரி முதலாவதாக எல்லாவற்றையும் அழிக்க முற்பட்டது. ரோமாபுரி முறைமையில் குடி கொண்டிருந்த சாத்தான் எதை அழிக்க முற்பட்டான்-? முதலாவதாக தேவனுடைய குமாரனை - அதே பிசாசு.
202. இன்றைக்கும் அவன், தன் ஆவியைக் கொண்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவினவர்களின் மூலம் அதையே செய்து வருகிறான். அவன் நமது பெண்களை கத்தோலிக்க வாலிபர்களுக்கு மணம் முடித்து கொடுத்து, கிறிஸ்துவத்தின் வல்லமையை முறியடிக்க எண்ணி, அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளை கத்தோலிக்க விசுவாசத்தில் கொண்டு சேர்க்கிறான். அது தான் உங்கள் பிசாசு. அவன் தான் மூன்று கிரீடங்களைச் சூடிக்கொண்டு ஏழு குன்றுகளின் மேல் வீற்றிருக்கும் பிசாசு. சர்ப்பத்தைப் போலவே அவன் அழகாகவும், தந்திரமுள்ளவனாகவும், சாமார்த்தியமுள்ளவனாகவும், புத்தி சாதுர்யம் உள்ளவனாகவும் இருக்கிறான் - அவன் பிள்ளைகள் சர்ப்பத்தின் வித்து. அவன் அதே புத்தி சாதுர்யமுள்ள முறைகளை இப்பொழுதும் கையாண்டு வருகிறான். 
203. பாருங்கள், இரு முறை பிள்ளைகள் கொல்லப்பட்டனர். இந்த 2, 3, என்று வரும் எண்களைக்கவனியுங்கள் இரு முறையும் அவன் பிள்ளைகளை உலகப் பிரகாரமான இயற்கை மரணத்தால் கொன்று போட்டான். ஆனால் கடைசி முறையில் அவன் பிள்ளைகளை ஆவிக்குரிய மரணத்தால் கொன்று போடுகி-றான். அவர்கள் ஒருவருக்கொருவர் விவாகம் செய்து கொள்வதன் மூலம். 
204. இந்த இரும்பும் களிமண்ணுமான இந்த ராஜ்யத்தில், அவர்கள் அந்த விதைகளை ஒன்றிணைத்து மற்ற மக்களின் வல்லமையை உடைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள் என்ற அதே காரியத்தை தானியேல் கூறினானே, அதைத்தான் அவர்கள் செய்கிறார்களா-? அந்த காரியத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளும் வரை; இப்பொழுது ஒரு ஜனாதிபதியைக் கொண்டிருக்கிறார்கள்; அடுத்ததாக செய்ய வேண்டியது ஒரு கார்டினலை உள்ளே கொண்டு வருவது, முழு மந்திரி சபையும் வைப்பது, பிறகு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்-?
205. அடுத்தப்படியாக அவர்கள் தங்கள் பணத்தை எடுத்து, அமெரிக்கா பட்ட கடன்களை செலுத்தி தீர்த்துவிட்டு, சபையிலிருந்து கடன் வாங்குவார்கள். அப்பொழுது நீங்கள் விற்கப்படுவீர்கள். இன்று நாம் நமது வரிப்பணத்தில் இருந்து அன்னிய நாடுகளுடன் பட்ட கடன்களைச் செலுத்தி வருகின்றோம். அதை செலுத்தித் தீர்க்க இன்னும் 40-ஆண்டுகள் செல்லும். நம்மிடம் பணம் இல்லை. ஆனால் ரோம சபை அதிக செல்வத்தைப் பெற்றுள்ளது. அவள் பொன்னினால் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக வேதம் கூறவில்லையா-? ஓ.... அப்படித் தான் அது உள்ளது. 
206. உங்கள் பெண்களை கத்தோலிக்க பையன்களுக்கு மணம் முடித்து, அவர்களுக்குப்பிறக்கும் குழந்தைகள் கத்தோலிக்க முறைமைகளில் வளர்க்கப்-படுகின்றனர் - அவர்கள் ஆவிக்குரிய மரணத்தால் கொல்லப்படுகின்றனர். அவர்களை உலகமென்னும் கட்டில் கிடையாக்கி, ஆவிக்குரிய மரணத்தால் கொன்று போடுவதாக வேதம் நமக்கு எடுத்துரைக்கின்றது அல்லவா-? வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரம் - பாருங்கள்.
வேத வசனம் எப்பொழுதும் நிறைவேறும். நீங்கள் எதைப் பின்பற்றினாலும் மறுபடியும் வார்த்தைக்குத் தான் வரவேண்டும். அந்த படத்தில் அது சரிவர பொருந்தவேண்டும். அப்படி பொருந்தாவிட்டால். அது தேவனுடைய வார்த்தை அல்ல. ஏதாகிலும் ஒன்றை நீங்கள் தேவனுடைய வார்த்தையுடன் பொருத்த முடியாவிட்டால். அது தவறு என்று அர்த்தம்.
207. கவனியுங்கள், அந்த சமயத்தில் தேவன் தமது ஊழியக்காரனாகிய மோசேக்கு, தமது பணியை நிறைவேற்றுவதற்கென பயிற்சி அளித்து வந்தார். அவர்களுடைய கண்களுக்கு மறைவாகவும், அவர்களுடைய திட்டங்களுக்கு அப்பாற்பட்ட விதத்திலும் (நீங்கள் புரிந்து கொண்டீர்களா-?) அவர்களுடைய ஸ்தாபனங்களுக்கு புறம்பே தேவன் தமது மனிதனுக்கு ஒரு நோக்கத்திற்காக பயிற்சியளிக்கிறார். அவன் விருப்பப்படி செய்ய முதலில் அவனை விட்டுக் கொடுக்கிறார்.
208. மோசே விவாகம் செய்து, கெர்சோம் என்னும் குமாரனைப் பெற அவர் அனுமதித்தார். அவன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தான். கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்தார். ஆனாலும் ஆதிமுதற்கொண்டே கர்த்தர் அவனுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டே வந்தார். அன்று கர்த்தரும், அவருடைய சத்துருவும், உலகப்பிரகாரமான விதத்தில் கிரியை செய்து வந்தனர். ஆனால் இன்றோ அவர்களிருவரும் ஆவிக்குரிய வித்தில் கிரியை செய்கின்றனர்.
209. அன்று உலகப் பிரகாரமான மரணத்தால் அவர்கள் கொல்லப்பட்டனர். இன்று அவர்கள் ஆவிக்குரிய மரணம் எய்துகின்றனர். கர்த்தர் மாம்சத்திலுள்ள ஒரு மனிதனை - தமது தீர்க்கதரிசியை எகிப்துக்கு அனுப்ப எண்ணி, அவனை ஆயத்தப்படுத்துகிறார். அதே சமயத்தில் சாத்தானும் தன்னைச் சார்ந்த மாம்சத்திலுள்ள ஒருவனை - ராமசேஸ் என்னும் ராஜாவை ஆயத்தப்படுத்து-கின்றான். எதற்காக-? அவர்களைக் கொன்று போடுவதற்காக: இல்லையேல், எகிப்தியரையும் எபிரெயரையும் ஒன்றாக இணைத்து, அவர்களைப் பார்வோனின் வேலைக்காரராக மாற்ற.
210. எனவே தான் மாம்ச சிந்தை இன்றைய கல்வி முறைகளுக்கு விரோதமாக யோசிக்க முடியவில்லை. ஏனெனில் இக்கல்வி முறை, அது சரி என்று, மற்றவர்களை நம்பச் செய்கின்றது. மாம்ச சிந்தை எப்பொழுதும் கல்வியையே நாடும், புத்தி சாதுர்யமுள்ளவர்களும் அவர்கள் பெற்றுள்ள சிந்தையும், தேவனுடைய காரியங்களைப் புரிந்து கொள்ள முடிகிறதில்லை.
211. சிசில் டிமில் (Cecil Demille) என்பவரின் “பத்து கட்டளைகள்'' (Ten Commandments) திரைப்படத்தைப் பார்த்தீர்களா-? நான் திரைப்படத்திற்குப் போவது கிடையாது. ஆனால் இந்த படத்தை சபை காணவேண்டுமென்று நான் சிபாரிசு செய்கின்றேன். உங்களுக்கு வேறெந்த வேலையும் இல்லாமல் இருந்தால், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால். சில சகோதரர் அதைப் பார்த்து விட்டு வந்து, என்னிடம் கூறினார்கள். அநேக ஆண்டுகளாக நான் திரைப்படத்திற்குச் செல்வதில்லை. முடிவில் நான் சென்று அதைப் பார்த்தேன். அதில் உள்ளது என்ன என்பதைக் கண்ட பிறகே சபையோரிடம், ''நீங்கள் வேண்டுமானால் சென்று பாருங்கள்'' என்று கூறினேன். 
212. பிசாசின் தந்திரம் அதில் மிகவும் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளைக் கொன்று போட அவன் புறப்பட்டது போன்ற காட்சிகள். மாம்ச சிந்தை, அந்த படத்தைக் கண்டு அதை எளிதில் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஓ, தேவன் அவருடைய தீர்க்கதரிசிக்கு அப்பொழுதெல்லாம் பயிற்சி அளித்து வந்தார். அதே சமயத்தில் ராமசேஸுக்கு, அவனை ராஜாவாக்க, அரசியலில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. ஒரு நாள் மாம்சசிந்தையின் வல்லமை-க்கும் ஆவிக்குரிய வல்லமைக்குமிடையே ஒரு பெரிய போட்டி உண்டாகிறது. ராமசேஸ் தன் தெய்வங்களை வழிபட்டு, அங்கு நின்றுகொண்டு, நீல நதியின் தெய்வத்திற்குத் தண்ணீர் வார்க்கிறான். கர்த்தர் அவனை அடிக்கிறார். அவனிடமிருந்து இரத்தம் வெளி வருகின்றது. அந்த திரைப்படத்தில் காணும் போது, அது மிகவும் அற்புதமாய் உள்ளது.
213. மாம்ச சிந்தை கொண்டவர்கள் எப்பொழுதும் அவர்கள் அறிவின் பேரிலேயே சார்ந்து இருப்பார்கள். அவர்களால் ஆவிக்குரிய காரியங்களை அறிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே இருந்து வருகின்றது. இப்பொழுதும் கூட அவர்களால் அதைக் காண முடிகிறதில்லை. 
214. எலியாவின் காலத்தில் அவர்களால் அதை அறிந்து கொள்ள முடியவில்லை. எப்படி இந்த அவலட்சணமான முகம் கொண்ட வயோதிப தீர்க்கதரிசி - இப்படி கூறினதற்காக கர்த்தர் என்னை மன்னிப்பாராக. நீங்கள் தேவனுடைய ஆவியானவரைக் காண வேண்டுமென்று கருதியே நான் எலியாவின் தோற்றத்தை ஏளனமாகக் கூறினேன் என்பதை தேவனறிவார். பவுல் கூறினது போன்று, ''நான் உங்களிடம் மனுஷ ஞானத்திற்குரிய நய வசனத்துடன் வரவில்லை. அப்படி செய்திருந்தால், உங்கள் சிந்தை மனுஷ ஞானத்திற்கு திசை திரும்பியிருக்கும். உங்கள் விசுவாசம் மனுஷ ஞானத்தில் அல்ல, இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையில் நிற்கும்படிக்கு, நான் இப்பொழுது காணப்படும் பரிசுத்தாவியின் வல்லமையுடன் வந்திருக் கிறேன்.''
215. எனவே தான் தேவனுடைய மகத்தான தீர்க்கதரிசியை அவலட்சணமான முகங்கொண்டவன் எனக்கூறி, இதை ஏளனப்படுத்துகின்றேன் சிறந்த ஆடை அணிந்த ஒரு ஆசாரியனின் பக்கத்தில் அவன் அவலட்சணமாகத் தான் காட்சி அளித்திருப்பான். அப்படியிருந்தும் அவன் தன்னை தேவனுடைய மனிதன் என்று அழைத்துக் கொண்டான். மாம்ச சிந்தையுள்ளவனுக்கு சிறந்த ஆடை அணிந்தவனிடம் பரிசுத்தம் உள்ளதாகக் காணப்படும். 
216. அவன் தலைப்பாகை அணிந்தவனாய் மார்பில் ஏபோத்தைத் தரித்துக் கொண்டுள்ளதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். அந்த அபிஷேகத் தைலம் தாடியின் வழியாய் ஓடி, அங்கியின் ஓரத்தை அடைவதை நீங்கள் கற்பனை செய்யலாம். அவ்வாறே பலியின் அக்கினி எரிந்து கொண்டு இருப்பதையும், எல்லா ஆசாரங்களும் சரியான முறையில் அமைந்து இருப்பதையும் நீங்கள் ஊகிக்கலாம்.
217. மாம்சசிந்தையுள்ளவனுக்கு இவைகள் தாம் தேவைப்படுகின்றன. இன்று அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். ஆத்துமாவிற்கு கண் வாசலாக அமைந்துள்ளது என்பது என்னமோ உண்மை, ஆனால் இந்தக் கண், இயற்கைக் கண்ணுக்குப் பின்னால் உள்ள ஆவிக்குரிய கண்ணாகும். அவலட்சணமான ஒருவன், மார்பில் அடர்த்தியான மயிரை வளர்த்துக் கொண்டு, ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு, அரையில் கச்சைக்கட்டிக் கொண்டு, வெறுங்காலில் நடந்து, மெலிந்த கைகளை உடையவனாய், முதிர் வயது காரணத்தால் தசைகளெல்லாம் தொங்கி, நரைத்த தாடி அவன் முகத்தில் வளர்ந்து, கோணலான கொம்பு ஒன்றைக்கையில் பிடித்துக்கொண்டு அங்கு நின்று கொண்டுடிருப்பதைக் அவர்கள் கண்டனர். ஆனால் ஆவிக்குரிய கண், அந்த சரீரத்திற்குள் தேவனுடைய வல்லமை அசைவாடுவதைக் கண்டிருக்கும். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையுடன் பிழை இன்றி இணைந்திருந்தது.
218. மாம்ச சிந்தையும் ஆவிக்குரிய கண்களும் வெவ்வேறு கோணங்களில் காண்கின்றன. இன்றைக்கு மாம்ச கண் பகட்டான ஸ்தாபனங்களையும், நகராண்மைக் கழகத் தலைவருடன் ஐக்கியங் கொள்ளுதலையும் கண்டு, அவைகளை விரும்புகின்றதே அன்றி, மரித்தோரை உயிரோடெழுப்புதல், வியாதியஸ்தரை சுகப்படுத்துதல் போன்ற பரிசுத்த ஆவியின் வல்லமையை அது காணத் தவறுகின்றது. அவர்கள் ஹாலிவுட்டின் நடத்தைகளையும், தெருக்களில் செல்பவரின் அலங்காரத்தையும் மாத்திரமே கவனிக்கின்றனர்.
219. இன்றுள்ள பெண்கள், 'சுசி என்னும் பெயர் கொண்ட இந்த பெண்ணும் கூட சபையை சேர்ந்தவள் தான். அவள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு இருக்கிறாள், முகத்தில் வர்ணம் தீட்டிக் கொண்டிருக்கிறாள். பட்டினத்திலுள்ள அனைவரும் அவளை விரும்புகின்றனர்'' என்றெல்லாம் எண்ணுகின்றனர். ஆனால் பரலோகத்தில் இத்தகைய காட்சி உண்டாயிருக்கமோ என நான் வியக்கிறேன். தேவனுடைய வார்த்தைக்கு அது முரணாக அமைந்திருந்தால், தேவன் அதை ஒரு போதும் ஆமோதிக்க முடியாது. ஏனெனில் அப்படியானால் அவர் தமக்கு விரோதமாகவே அதை ஆமோதிக்க நேரிடும். அப்படியானால் அவர் தமது சொந்த வார்த்தையை மறுதலிக்கும் நிலைக்கு ஆகிவிடும். தேவன் அவ்விதம் ஒருக்காலும் செய்யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், தலைமயிரைக் கத்தரித்துள்ள, அல்லது ஆண்களின் உடையை அணிந்துள்ள எந்தப் பெண்ணும் தேவனுடைய பார்வையில் சபிக்கப்பட்டவளே. 
220. பாருங்கள், ஆவிக்குரிய கண் அதை பிடித்துக் கொள்கின்றது. அவர்கள் இனி வரப்போகும் காலத்திற்காக வாழ்கின்றனர். ஆனால் மாம்ச சிந்தையோ, அதன் சிந்தனையின்படி, இன்றுள்ள மாம்சப் பிரகாரமான காரியங்களுக்காக வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.
கவனியுங்கள், தேவன் கிரியை செய்துகொண்டு வருகின்றார். ஆனால் ஜனங்களோ அதை அறிந்து கொள்வதில்லை, மாம்சசிந்தை தனது யோசனை-யின்படி செயல்புரிகின்றது. இப்பொழுது தேவன் ஜனங்களை ஆவிக்குரிய யாத்திரைக்காக அழைக்கிறார். உலகப் பிரகாரமான யாத்திரை ஒன்றுக்காக அவர் அன்று தமது ஜனங்களை அழைத்தார். ஆனால் இன்றோ ஆவிக்குரிய யாத்திரைக்காக அவர் அழைக்கிறார். யாரை-? தெரிந்து கொள்ளப்பட்டவர்களை தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மாத்திரமே இது உரியது. 
221. இஸ்ரவேல் ஜனங்கள் செய்வது சரியென்று எகிப்தியரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஆட்டுக்குட்டியின் இரத்தம் வாசல்களிலும் நிலைக் கால்களிலும் பூசப்பட்டதையும், கர்த்தர் தமது தீர்க்கதரிசிக்குள் அசைவாடி, ஒரு மனிதன் கட்டளையிட்டதை அவர் நிறைவேற்றி, அநேக அற்புதங்களை அவர் செய்ததை அவர்கள் கண்ட போதிலும், இஸ்ரவேலர் சரியான வழியில் செல்கின்றனர் என்பதை அவர்களால் உணர்ந்து கொள்ள முடிவில்லை.
மோசே தன் கோலை எடுத்து கிழக்கு திசைக்கு நேராக நீட்டி, ''வண்டுகள் எகிப்தியரின் மேல் சூழந்துகொள்ளக்கடவது'' என்று கட்டளையிட்டு சென்று விடுவான். 
222. அதைக் கேட்டவர், "ஒன்றும் நேராது'' என்று கூறுவார்கள். உடனடியாக ஒன்றும் சம்பவிக்கவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பச்சை வண்டு பறந்து வந்து வட்டமிட்டிருக்கும். சிறிது நேரத்தில் ஒரு சதுர கெஜத்திற்கு இரண்டு பவுண்டு எடையுள்ள வண்டுகள் என்ற அளவில் வண்டுகள் அங்கு நிரம்பின. ஒரு மனிதன் பேசி வண்டுகளை சிருஷ்டித்து, அவைகளை வரவழைத்தான். 
223. அறிவு நிறைந்த ராமசேஸ் அங்கு நின்று கொண்டிருந்தான். அவன் பக்தியுள்ளவன். அவனுக்கும் ஜீவனுள்ள தேவனுடைய ஆவிக்கும் அங்கு போராட்டம் நடக்கின்றது. மாம்ச சிந்தை ராமசேஸை மாத்திரம் காணமுடியும். ஆனால் ஆவிக்குரிய சிந்தையோ வாக்குத்தத்தம் அங்கு நிறைவேறுவதைக் காண்கின்றது.
224. யோசுவாவும் காலேபும், அமலேக்கியர், ஏவியர், எபூசியர் போன்றவர் அங்கு இல்லாதவர் போலவே கருதினர். இவர்கள் இஸ்ரவேலரைவிட உருவத்தில் 3 அல்லது 4 பங்கு பெரிதாகக் காணப்பட்டனர். காதேஸ்பர்னேயா-வுக்குச் சென்ற ஒற்றர்கள் அவர்களுடைய தோற்றத்தைக் கண்டு, மனித சிந்தை கொண்டு, “ஐயோ, நம்மால் முடியாது. நாம் அவர்களுக்கு முன்பாக வெட்டுக்கிளிகளைப் போல் இருக்கிறோம். அவர்கள் அதிக பெலசாலிகள்,'' என்றெல்லாம் கூறினர். ஆனால் யோசுவாவும் காலேபும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை மாத்திரம் நோக்கிப் பார்த்து, ''நாம் அவர்களை எளிதில் வென்று விடலாம்,'' என்றனர். ''உங்களுக்கு அந்த தேசத்தை திரும்ப அளிப்பேன்,'' என்று தேவன் வாக்களித்திருந்ததை மாத்திரமே அவர்கள் கண்டனர். 
225. மாம்ச சிந்தைக்கு இது புரியாது. ஆனால் ஆவிக்குரிய சிந்தையோ இதை கிரகித்துக்கொள்ளும்... உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். எகிப்தியர்கள் ஏன் இதை புரிந்து கொள்ளவில்லை-? ஏனெனில் அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்படவில்லை 
226. காரியம் நிகழும் முன்பே கர்த்தர் ஆபிரகாமுடன்.. (உறங்கிக் கொண்டு இருக்கும் சபையே, இதைக் கேள்-!). 'உன் சந்ததியார் எகிப்தில் 400 வருஷம் பரதேசிகளாயிருப்பார்கள். நான் அவர்களை வெளியே கொண்டு வருவேன்,'' என்று கூறியிருந்தார். அவனுடைய சந்ததியார் தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களாதலால் தேவனுடைய செயல்களை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது - தெரிந்து கொள்ளப்படுதல்.
227. தேவனுடைய அடையாளத்தைக் காண இஸ்ரவேல் ஜனங்கள் தெரிந்து கொள்ளப்பட்டனர். அவர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்தனர். ஆனால் அவிசுவாசிகளோ எகிப்திலே மாண்டு போயினர். இன்றைக்கு தேவன், ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையின் பேரில் வைத்திருந்த விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டு, அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாமின் சந்ததி- யாரை வெளியே அழைக்கிறார்.
228. இன்றுள்ள ஆவிக்குரிய சந்ததியாரை உங்களால் காண முடிகின்றதா-? அவர்கள் மனித ஞானம் கொண்ட ஸ்தாபனங்களைப் பார்க்காமல் தேவனுடைய வார்த்தையையே நோக்கிப் பார்க்கின்றனர், அவர்கள் இந்த மகத்தான ஸ்தாபனங்களிலிருந்து வெளியே அழைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் சமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு  உள்ளனர். உங்களுக்குத் தெளிவாயுள்ளதா-? நீங்கள் புரிந்து கொண்டீர்களா-? சரி, நாம் தொடருவோம்.
229. தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே-! வேத பாண்டித்தியம் பெற்ற டாக்டர்களால் இதைக் காணமுடியாது. அவர்கள் தெரிந்து கொள்ளப்பட வில்லை. இப்பொழுது நிகழவிருக்கும் இந்த தெரிந்து கொள்ளுதல், வேறொரு தேசத்திற்கு கொண்டு செல்லாது: அது மகிமைக்குக் கொண்டு செல்லும். அங்கே அவர்களுடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன - இஸ்ரவேல் ஜனங்களை வெளியே கொண்டு வந்த இயற்கை ஆட்டுக்குட்டியின் கீழல்ல; அவர்கள் பின்வாங்கிப் போக நேர்ந்தது. ஆனால் இதில் அப்படியொன்றும் நிகழாது. ஏனெனில் இது உலகத் தோற்றத்துக்கு முன்னால் அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் கீழுள்ளது. உலகத்தோற்றத்துக்கு முன்பே அவர்களுடைய பெயர்கள் ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுவிட்டன. 
230. தெரிந்து கொள்ளப்பட்ட அவர்கள் ஸ்தாபனங்களுக்குள் இருந்தனர். ஆனால் வெளிச்சம் அவர்கள் மேல் பிரகாசித்தவுடனே அவர்களைச் சுற்றிலும் இருந்த ஸ்தாபன சுவர்கள் இடிந்து விழுந்தன. அவர்கள் வெளியே வந்தனர். ''அவர்களை விட்டு வெளியே வாருங்கள்'' என்று இக்கடைசி நாட்களில் பரிசுத்தாவியானவர் அறை கூவினார். ''அசுத்தமானதைத் தொடாதிருங்கள். நான் உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள்.'' 
231. இஸ்ரவேல் ஜனங்கள் கவனித்துக் கொண்டே வந்தனர், தேவன் தீர்க்கதரிசிகளுடன் ஈடுபடுகின்றார் என்றும், வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்திற்கு வருகின்றது என்றும் அவர்கள் அறிந்திருந்தனர். ஒரு தீர்க்கதரிசியின் மூலம் அவர் கிரியை செய்வதையும் அவர்கள் கண்டனர். மனித ஞானத்தின் அடையாளத்தை நாம் இப்பொழுது காண்கிறோம். அவர்கள் தங்கள் ஸ்தாபன-ங்களின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள், இன்னும் ஸ்தாபனக் கோட்பாடுகளில் நிலை கொண்டுள்ளனர். 
232. பிலேயாமைப் போன்று.... இஸ்ரவேல் ஜனங்களைக் காண்பதற்காக அவன் ஒரு மலை மேல் ஏறுகின்றான். இஸ்ரவேலர் ஒரு தேசமாக இராமல் ஒரு ஜனக்கூட்டமாக அங்குமிங்கும் நகர்ந்து, மோவாபியரின் தேசத்தில் நுழையும் குற்றத்தைச் செய்தவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களுடைய சகோதரராகிய மோவாபியர் புத்தி சாதுரியமுள்ளவர்கள், நன்றாக தங்களை ஸ்தாபித்துக் கொண்டவர்கள் - அவர்களுடைய ராஜா பிலேயாம் என்னும் இப்பேராயருடன், அல்லது தீர்க்கதரிசியுடன், மலையின் உச்சியை அடைகிறான். அவர்கள் அங்கு ஒரு பலிபீடம் கட்டி, இஸ்ரவேலர் வழக்கமாக செலுத்தும் அதே பலிகளை செலுத்தினர். ஆனால் அவர்கள் இஸ்ரவேலரின் மத்தியிலிருந்த அக்கினி ஸ்தம்பத்தையும் அடிக்கப்பட்ட கன்மலையும் காணத்தவறினர்.
233. இன்றைக்கும் அவ்வாறே இருக்கிறது. மனித சிந்தை அங்கு நின்று கொண்டிருந்த புகழ்வாய்ந்தவனைக் கண்டு கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் அடிக்கப்பட்ட கன்மலையைக் காணத் தவறினர். பேராயரும் கூட பரிசுத்த ஆவியின் வல்லமையையும் பாளயத்திலுள்ள ராஜாவின் ஆரவாரத்தையும் காணத்தவறினான். 
234. இன்றைக்கு மறுபடியும் அதுவே சம்பவிக்கின்றது. தேவன் தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அழைக்கிறார். அவர்கள் இப்பொழுது தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். எதற்காக அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டனர்-? உயிர்த் தெழுதலுக்கென்று. எவ்வித அடையாளத்தை அவர்களுக்கு காண்பிக்கிறார்-? உயிர்த்தெழுதலின் அடையாளத்தை. அன்று எந்த அடையாளத்தை அவர் காண்பித்தார்-? விடுதலையின் அடையாளத்தை. அவர்களை அடிமைத்தனத்தி- னின்று அவர் விடுவித்தார். வானத்தை அடைக்கவும், ஆகாயத்தை கருமை ஆகவும் செய்யும் வல்லமையின் அடையாளம்.
இன்று அவருடைய குமாரனின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அவர் காண்பிக்கிறார். கல்லறையில் இருப்பவர்களை உயிரோடெழுப்புவதற்கென அந்த வல்லமை அவர்கள் மத்தியில் ஜீவிக்கின்றது - நாம் இருக்கும் கல்லறைத் தோட்டத்திலிருந்து, நமக்கு அவர் வாக்களித்துள்ள தேசத்திற்குச் செல்வதற்காக, இந்த உயிர்த்தெழுதலின் அடையாளம் ஆவிக்கு உரிய பாபிலோனில் இருந்தும் வெளியே வரும்படி அழைக்கின்றது. 
235. இதை நான் மெல்லிய குரலில் கூறுகின்றேன். நீங்கள் கிரகித்துக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். தொடக்கத்தில் அவர் என்ன செய்தாரோ, அதே முறையை இப்பொழுதும் அவர் கடைப்பிடிக்கிறார் - அவர் அவிசுவாசியின் கண்களைக் குருடாக்கி, விசுவாசியின் கண்களை திறக்கிறார். கவனியுங்கள், அரசியலும், ஸ்தாபனங்களும், தேசங்களும், மனித ஞானம் என்னும் பாகத்தில் ஒரு சாராராக இருக்கின்றன, எனவே ஆவிக்குரிய நோக்கம் என்னும் மற்றொரு பாகம் அவர்களுக்கு மறைவாயுள்ளது.
236. தேவன் வனாந்தரத்தில் ஒரு மனிதனைத் தெரிந்தெடுத்து, அவனுக்குப் பயிற்சியளித்து, அவனை வனாந்தரத்திலிருந்து கொண்டு வந்து, பொறுப் பேற்று, ஜனங்களை வெளியே கொணர்ந்தார். நான் கூறுவதன் அர்த்தம் உங்களுக்கு விளங்குகின்றதா-? அவர் தமது திட்டத்தை ஒரு போதும் மாற்றுவது கிடையாது. அவர் தேவனாயிருக்கிறார். அவர் ஒரு குழுவுடன் ஈடுபடவே மாட்டார். இதற்கு முன்பு அவர் அப்படிச் செய்ததேயில்லை. ஒரு தனிப்பட்ட நபருடன் மாத்திரமே அவர் தொடர்பு கொள்கிறார். அவர் அப்படி தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் இனிமேலும் அப்படியே தொடர்பு கொள்வார். மல்கியா 4-ல், அவர் அப்படிச் செய்யப் போவதாக வாக்களித்து உள்ளார். எனவே அவர் நிச்சயம் செய்வார். நான் கூறுவது உண்மை . 
237. அவர் எப்படி கிரியை செய்தாரென்றும், அவர் என்ன செய்யப் போகிறார் என்றும் வாக்களித்துள்ளதும் நமக்குத் தெரியும். நாம் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கவேண்டும்-! தமது வாக்குத்தத்தத்தினால் நமக்கு அடையாளத்தை அவர் தந்திருக்கிறார். அதை செய்யப் போவதாக அவர் வாக்களித்துள்ளார். மக்களுடைய விசுவாசத்தை அவர் திரும்பவும் அளிப்பார். மக்களுடைய இருதயங்களை மூல பெந்தெகொஸ்தெ பிதாக்களின் விசுவாசத்திற்கு அவர் திருப்புவார். அவர் தமது அடையாளத்தைக் காண்பித்து, அவ்விதம் செய்யப் போவதாக வாக்கு அளித்துள்ளார்.
238. 'சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்.' ஸ்தாபனங்கள் சோதோமில் எத்தகைய அடையாளத்தைக் கண்டன-? மனிதஞானம் கொண்ட சபை எதைக்கண்டது-? 2-போதகர்களை. தெரிந்து கொள்ளப்பட்ட ஆவிக்குரிய சபை - ஆபிரகாமும் அவனைச் சார்ந்தோரும். தேவன் மனித சரீரத்தில் வெளிப்பட்டு, ஆவியைப் பகுத்தறிந்து, அவருக்குப் பின்னால் இருந்த சாராள் இருதயத்தில் நினைத்ததை வெளிப்படுத்தினதைக் கண்டது.
239. "லோத்தின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்''. பரிசுத்த ஆவியானவர் அதே கிரியைகளை மனித சரீரத்தில் செய்து வருவதை நாம் காண்கிறோம். இதுவே நேரம். நாம் இங்கு வந்திருக்கிறோம். நண்பர்களே. அவ்வளவு தான் யாத்திரை தொடங்கிவிட்டது. 
240. கவனியுங்கள், எதைக்கொண்டு அவர் அப்பொழுது அதைச் செய்தார்-? உங்கள் ஆவிக்குரிய சிந்தையை அணிந்து கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் தாமே உங்கள் சிரத்தையற்ற தொப்பியை களைந்து விட்டு, நீங்கள் கூர்ந்து கவனிக்கும்படி செய்வாராக. தேவன் ஒரு காரியத்தை ஒரு பிரத்தியேக விதத்தில் செய்யவேண்டுமென்று தீர்மானித்து விட்டால், அதை அவர் மாற்றவே முடியாது. 
241. ஏதேன் தோட்டத்தில் மனிதனை மறுபடியுமாக அவர் ஐக்கியத்தில் கொண்டுவர விரும்பின போது, அவர் ஒரு தீர்மானம் செய்தார். அதுவே இரத்தம். அவர்கள் கல்வி முறையைக் கடைபிடித்து பார்த்தனர். ஸ்தாபனங்-களை முயற்சி செய்து பார்த்தனர். தேசியமயமாக்கப் பார்த்தனர். ஆனால் ஒன்றும் சரிபடவில்லை. 
242. தேவன் மனிதனை ஒரே ஒரு இடத்தில் தான் சந்திக்கமுடியும். அதுதான், ஏதேன் தோட்டத்தில் இருந்தது போன்று, சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ். அது மாறவேயில்லை. யோபுவின் காலத்திலும் பலி செலுத்தப்பட்ட ஆட்டுக் குட்டியின் இரத்தத்தின் கீழ்தான் அவர் மனிதனைச் சந்தித்தார். இஸ்ரவேல் ஜனங்களின் காலத்திலும், ஏதேன் தோட்டத்திலும் அவர் அவ்வாறே பலி செலுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் கீழ்தான் சந்தித்தார்.
இன்றைக்கும் அவர் சந்திக்கும் ஒரே இடம்- ஸ்தாபனங்களல்ல, ஸ்தாபன முறைகளல்ல, நுண்ணறிவல்ல; அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கின்றனர், அவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்- ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தின் கீழ்மாத்திரமே. ஒவ்வொரு விசுவாசியும் ஜீவன் உள்ள அந்த ஸ்தலத்தில் அவரைச் சந்தித்து, அவருடன் ஐக்கியங் கொள்ள முடியும்.
243. யாத்திரையின் சமயம் வந்த போது, தேவன் ஒரு கூட்டத்தை வெளியே அழைத்தார்... நீங்கள் ஒன்றை கவனிக்க விரும்புகிறேன். அந்த குழுவிலிருந்த 2-பேர் மாத்திரமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்தனர். அவர்களை வழி நடத்த அவர் எதை தெரிந்து கொண்டார்-? அரசியலையா-? அல்லது ஒரு ஸ்தாபனத்தையா-? அவர் ஒரு தீர்க்கதரிசியைத் தெரிந்து கொண்டு, ஜனங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது எனக் கருதி, இயற்கைக்கு மேம்பட்ட அக்கினி ஸ்தம்பத்தின் அடையாளத்தை அவனுக்குத் தந்தார். தீர்க்கதரிசி கூறினது மாத்திரமே சாத்தியமாக இருந்தது. தேவன் அக்கினி ஸ்தம்பத்தில் இறங்கி வந்து, அற்புதங்களாலும் அடையாளங்களாலும் அவனை நிரூபித்து, அவருடைய வார்த்தையை எடுத்துக் கூறினார். அது சரியா-?
244. அது தான் அவர் தொடங்கின முதலாம் யாத்திரை. அவருடைய 2-ம் யாத்திரை... தேவன் எப்பொழுதும் '3' என்னும் எண்ணிக்கையில் செல்கிறவர். அவர் '3' என்பதில் பரிபூரணமடைகின்றார். அது எப்பொழுதும் மூன்றுகளா-கவும் ஏழுகளாகவும் இருக்கின்றன என்று நான் பிரசங்கித்ததை நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள். ஏழு' பூரணமான (complete) எண். 'மூன்று' பிழையற்ற பரிபூரணமான (Perfection) எண். முதலாம், இரண்டாம், மூன்றாம் இழுப்புகள் போன்றவை நீதிமானாக்கப்படுதல். பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி போன்றவை. 
245. கவனியுங்கள், முதலாம் யாத்திரையின் போது, அவர் என்ன செய்தார்-? அவர் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி, அவனை அக்கினி ஸ்தம்பத்தினால் அபிஷேகம் செய்து, அவருடைய ஜனங்களை வெளியே அழைத்து வந்தார். அதுவே அவர் தொடங்கின முதலாம் யாத்திரை. இஸ்ரவேலருடைய காலம் வந்த போது, அவர் மறுபடியுமாக தேவன், தீர்க்கதரிசியை அக்கினி ஸ்தம்பத்-துடன் அனுப்பினார். அது பரலோகத்திலிருந்து புறாவைப் போல் இறங்கி வருவதை யோவான் ஸ்நானன் கண்டான். அவர், ''நான் பிதாவினிடத்தில் இருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் பிதாவினிடத்திற்குப் போகிறேன்'' என்றார்.
அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் இவைகளுக்குப் பின்பு, தர்சு பட்டினத்தானாகிய சவுல் தமஸ்குவுக்குப் போகும் வழியில், அதே அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டான். அவன் ஒரு எபிரெயன்; அவன் தேவனுடைய வார்த்தையை நன்கு அறிந்திருந்த காரணத்தால், “ஆண்டவரே, நீர் யார்-?” என்றான். 
246. அந்த அக்கினி ஸ்தம்பம் தான் ஆண்டவர் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் ஒரு எபிரெயன், அவன், “நீர் யார்-?" என்று கேட்டான்.
அவர், ''இயேசு நானே,'' என்றார். 
247. 2-ம் யாத்திரை. அவர் ஒரு தீர்க்கதரிசியை அபிஷேகத்துடன் அனுப்பினார். அது அவருடைய குமாரன். தேவன்- தீர்க்கதரிசி. அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பாரென்று மோசே உரைத்தான். அவரிடம் அக்கினி ஸ்தம்பம் இருந்தது. அவர் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார். அந்த தீர்க்கதரிசி தான், ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத்தானும் செய்வான்'' என்று கூறினார். 
248. இந்த கடைசி நாட்களில் நிகழவிருக்கும் யாத்திரைக்கும் அவர் அதையே வாக்குத்தத்தம் செய்து உள்ளார். அவர் மாறவே முடியாது. விஞ்ஞானம் நிரூபித்ததன் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவர் உரைத்த சாட்சியினாலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளினாலும், அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பம் நமது மத்தியில் அசைவதை நாம் இன்று கண்டு கொண்டு வருகிறோம். உயிர்த்து எழுந்த இயேசுகிறிஸ்துவின் அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களை ஸ்தாபனங்களினின்று வெளியே அழைத்து கிறிஸ்துவின் சமுகத்தில் அவர்களைக் கொண்டு வந்து - ஒரு தேசத்திற்குச் செல்ல அவர்களை ஆயத்தப்படுத்துகின்றன. 
249. இதில் எவ்வித பிழையும் இல்லை, நண்பர்களே. இது நான் கூறுவதல்ல. நான் உங்கள் சகோதரன். தேவன், இதை உங்களுக்கு நிரூபித்து வருகிறார். எனவே தான் அது சத்தியமாயிருக்கின்றது. மற்ற இரண்டு யாத்திரைகளுக்கும் அவர் உபயோகித்த அதே அக்கினி ஸ்தம்பம்; அவர் இக்காலத்தில் அதை உங்கள் மத்தியில் கொண்டு வந்து, விஞ்ஞானத்தின் மூலம் அதை நிரூபித்து இருக்கிறார்.
250. கடந்த மாதத்தில் ஃலைப் பத்திரிக்கை அதை வெளியிட்டது. அது நிகழும் என்று நான் முன்கூட்டியே கூறினதை உங்களில் எத்தனை பேர் கேட்டீர்கள்-? சபையிலுள்ள ஏறக்குறைய எல்லோரும் என்று நினைக்கிறேன். ஆனால் மற்றவர்க்கோ அது என்னவென்று புரியவில்லை. விஞ்ஞானிகள், ''அதை அறிந்தவர்கள் எங்களைச் சந்தியுங்கள்,'' என்கின்றனர். அது கூர்நுனிக் கோபுர வடிவில் 26 மைல் உயரத்தில் தோன்றினது. அதிலிருந்த ஏழு தேவதூதர்கள் உங்களுக்கு தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வந்தனர். அதிலிருந்து, நீங்கள் வாழும் இந்த மணி நேரங்கள் என்னவென்பதை அறிந்து கொள்ளலாம். ஆவிக்குரிய சிந்தை உடனே கிரகித்துக் கொள்ளும். அது ஒரு யாத்திரை-! இந்நாட்களில் ஒன்றில் நாம் இவ்விடம் விட்டுச் செல்வோம். நான் விரைவில் முடித்து விடுகிறேன். எனக்கு இன்னும் பத்து நிமிடங்கள் அவகாசம் உண்டு.
251. கவனியுங்கள். அவர்களை வெளியே அழைத்த அக்கினி ஸ்தம்பம், அபிஷேகம் பெற்றிருந்த ஒரு தீர்க்கதரிசியின் மூலம் அவர்களை வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழி நடத்தினது. அவர்கள் கண்ட அந்த அக்கினி-ஸ்தம்பம், அபிஷேகம் பெற்றிருந்த ஒரு தீர்க்கதரிசியின் தலைமை- யின் கீழ் அவர்களை வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு வழி நடத்தினது. ஆனால் அவர்களோ அந்த தீர்க்கதரிசியை அடிக்கடி புறக்கணித்தனர். அது சரியா-? ஆம்.
நீங்கள் ஞானஸ்நான ஆராதனையை வைத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் குறிப்பு எழுதி வைத்துள்ள ஆறு பக்கங்கள் இன்னமும் உள்ளன. ஆனால் நான் இன்னமும் சில நிமிடங்களில் நிறுத்தி விடுகிறேன்.
கவனியுங்கள், நாம் வெளியே அழைக்கப்படும் கட்டத்தில் இருக்கிறோம். "என் ஜனங்களே, நீங்கள் பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்'' என்று அழைத்தது தூதனுடைய சத்தம். “எதை விட்டு வெளி வருவது-?'' குழப்பத்தை விட்டு,..
252. மெதோடிஸ்டு சபை சரியா-? அல்லது பாப்டிஸ்டு சடை சரியா-? கத்தோலிக்க சபை சரியா-? அவைகளை விட்டு வெளியே வாருங்கள். தேவன் ஒருவரே சரி. உனக்கு எப்படித் தெரியும் “எந்த மனுஷனும் பொய்யன்: நானே சத்தியபரர்.” அவைகளை விட்டு வெளியே வாருங்கள். ''உங்களுக்கு என்ன தெரியும்-?'' அதே அக்கினி ஸ்தம்பம், அதே அபிஷேகத்தின் ஆவி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழி நடத்திச் செல்கின்றது, 
253. கவனியுங்கள். இஸ்ரவேலரை அது வெளியே கொண்டு வந்து, வாக்கு அளிக்கப்பட்ட தேசத்திற்கு அவர்களை வழி நடத்தினது. அதே தேவன் அதே அக்கினி ஸ்தம்பம்... புகைப்படம் எடுக்கும் அந்தக் கருவி... நீங்கள் ஜார்ஜ் ஜே. லேசி என்பவருடைய அறிக்கையை - என்னுடையதல்ல - ஜார்ஜ் ஜே. லேசி என்பவர் அந்தப் புகைப்படத்தை ஆராய்ந்து பார்த்து விட்டு (அவர் புலன் விசாரிக்கும் FBI என்னும் ஸ்தாபனத்தில் கைரேகை தஸ்தாவேஜுகளை ஆராயும் நிபுணர்) அறிக்கை ஒன்றை விடுத்தார். சிலர், 'அது இரு முறை படம் பிடித்து எடுக்கப்பட்ட புகைப்படம்'' என்கின்றனர்.
254. ஆயிரக்கணக்கானவர் அதை காண முயன்றும் அவர்களால் முடியவில்லை. நீங்களும் அதை காண முயன்றீர்கள். ஆனால் அது அங்கு இல்லை. அது 'கண்கள்காணும் ஒரு பொய்த்தோற்றம்' (Optical illusion) என்றனர். ஆனால் திரு.லேசி என்ன கூறினார்-? ''காமிராவின் இயந்திரக் கண் மனோ தத்துவத்தை புகை பிடிக்காது” என்றார் அவர்.
அது கண்கள் காணும் பொய்த்தோற்றம் அல்ல. அது அதே அக்கினி ஸ்தம்பம். டூசானில் காணப்பட்ட அந்த மேகம், அது நிகழ்வதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே, பரிசுத்த ஆவியின் ஏவுதலினால், நான் அதற்காக அங்கு செல்வேன் என்று கூறினேன். ஏனெனில் கூர் நுனிக்கோபுரத்தில் எழுதப்பட்டவை வெளிப் புறத்திலிருந்தன... அந்த சகோதரன் அதைக்குறித்து சொப்பனம் கண்டார். அந்த சொப்பனத்தின் அர்த்தத்தை நான் விளக்கிக் கொடுத்தேன். அதுவே முழுமையான விளக்கம்.
255. நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்தாவியின் அபிஷேகம் இவைகளைக்குறித்த இரகசியங்கள் அனைத்தும் விளக்கப்பட்டு முடிந்து விட்டன. இப்பொழுது 7-முத்திரைகளில் மறைந்துள்ள தளர்ந்த முனைகளை கையிலெடுத்து, 7-சபை காலங்களல்ல, ஏழு முத்திரைகள். அந்த 7 முத்திரைகள் இரகசியங்களை வெளிப்படுத்திவிட்டன. அவர் அந்தக் கூர்நுனிக் கோபுரத்தின் மேல் பாகத்தைத் திறக்கிறார். அதற்குள் வெண்பாறை காணப் பட்டது. ஆனால் அதில் ஒன்றும் எழுதப்படவில்லை - அது இரகசியம். 
256. ''டூசானுக்குப் போ-அது நிகழ்வதற்கு முன்பு அதை முன்னறிவி. டூசானுக்கு வடக்கே நில்'' (அதற்கு சாட்சிகள் நம்மிடையே இருக்கின்றனர்). அப்பொழுது ஒரு வெடிசத்தம் உண்டாகி, மலையை பூமியிலிருந்து பெயர்க்கும் அளவுக்கு அதை குலுக்கினது. அதே சமயத்தில் ஒரு ஒளி வட்டம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. விஞ்ஞானிகள் அதை புகைப்படம் எடுத்தனர். அது 26 மைல் உயரத்தில் காணப்பட்டது. பனி உண்டாகும் உயரத்தை விட ஐந்து மடங்கு உயரத்தில் அது தோன்றினது. அது எதனால் தோன்றியது என்னும் உண்மையை அவர்களால் அறிந்து கொள்ள இயலவில்லை.
சாயங்கால நேரத்தில் வெளிச்சம் தோன்றும் மகிமைக்குரிய பாதையை நீ நிச்சயம் கண்டு கொள்வாய்,
257. நீ தெரிந்து கொள்ளப்பட்டவனாயிருந்தால் வழியருகே அல்லது கற் பாறைகளின் மத்தியில் விழுந்த விதையினால் பலன் ஏதுமில்லை. கல் போன்ற கடின இருதயம் அலட்சியப்படுத்த விரும்புகின்றது. ஆனால் விசுவாசம் என்னும் மிருதுவான நிலத்தில் அது விழும் போது, அது ஆவியின் கனிகளைக் கொடுக்கும் கிறிஸ்தவனைத் தோன்றச் செய்கின்றது.
258. கவனியுங்கள், கர்த்தர் அதை எப்படிச் செய்தார் என்பதை. அவர் உறுதிப்படுத்தப்பட்ட அதே அக்கினி-ஸ்தம்பத்தையே இப்பொழுதும் கொண்டு இருக்கிறார். ஒருவர், ''அதை ஏன் நீங்கள் விஞ்ஞானிகளிடம் கூறக்கூடாது-?'' என்று கேட்டார். அதை அவர்கள் நம்புவார்கள் என்று நினைக்கின்றீர்களா-? ''முத்துக்களை பன்றிகளுக்கு முன்னால் போடவேண்டாம்.' இயேசு அவ்விதம் கூறியுள்ளார். விஞ்ஞானிகளிடம் இதைப் பற்றிக் கூறவேண்டும் எனும் ஏவுதல் எனக்கில்லை. நான் வாழும் அதே பட்டினத்தில் தான் அவர்களும் வாழ்கின்றனர். அதைக் குறித்து அறிந்திருப்பவர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். நான் போகலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர், 'நீ போகவேண்டாம், அது அவர்களுக்காக அல்ல. நீ சென்று, அதை கூடாரத்திலுள்ளவர்களுக்கு அறிவிப்பாயாக" என்றார்.
சரி, ''அவர்கள் கூறுவது நிறைவேறினால், நானே அதைச் சொன்னேன்'' என்று கர்த்தர் கூறியுள்ளார். அது நிகழ்வதற்கு முன்பே அது முன்னறிவிக்கப்பட்டது. வேதம் கூறுவதற்கு செவி கொடுங்கள். இந்த நாளில் உங்களை அழைக்கும் தேவனுடைய சத்தமாக அது இருக்கிறது. 
259. நீங்கள் இதை கவனிக்க விரும்புகிறேன். அதே அக்கினி ஸ்தம்பம் மறுபடியுமாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு- ஆயிரம் வருட அரசாட்சிக்கு- மக்களை வழி நடத்துகின்றது. ஆயிரம் வருட அரசாட்சிக்காக பூமியானது சுத்திகரிக்கப்பட வேண்டுமென்று நாம் ஆறாம் முத்திரையின் கீழ், பரிசுத்தாவியின் ஏவுதலினால், பார்த்தோம். அதற்கு முன்பு அம்முத்திரையைக் குறித்து அவ்விதம் பிரசங்கிக்கப்படவில்லை. அக்கினி-ஸ்தம்பம் அவர்களை ஆயிரம் வருட அரசாட்சிக்கு வழி நடத்துகின்றது. 
260. கவனியுங்கள், இஸ்ரவேல் ஜனங்களை அடிமைத்தனத்தினின்று வெளியே கொண்டு வந்து, தேவனுடைய தலைமையின் கீழ் வழி நடத்தின அந்த அக்கினி ஸ்தம்பம்; தேவன் தான் அந்த அக்கினி. அந்த அக்கினி ஸ்தம்பம் தான் தீர்க்கதரிசியை அபிஷேகம் செய்தது. மோசே இவ்வூழியத்திற்கென்று பிரித்தெடுக்கப்பட்டான் என்பதற்கு அந்த அக்கினி ஸ்தம்பம் பரலோகத்தின் சாட்சியாக இருந்தது. 
261. தாத்தானும் மற்றோரும், "நாம் ஒரு ஸ்தாபனம் தொடங்க வேண்டும். மோசே மிஞ்சின பொறுப்பை தன் மேல் போட்டுக் கொள்கிறான். மோசேயே, எங்களிடையே நீ ஒருவன் மாத்திரம் பரிசுத்தவான் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றாய். தேவனுடைய சபையோர் எல்லாரும் பரிசுத்தவான்கள். அப்படி இருக்க இந்தப் பொறுப்பை நீ மாத்திரம் எங்ஙனம் ஏற்றுக் கொள்ளலாம்-?" என்று கூறினது உங்களுக்கு நினைவிருக்கலாம். 
262. மோசே முகங்குப்புற விழுந்து கதறினான். கர்த்தர், ''அவர்களை விட்டுப் பிரிந்து போ. நான் பூமியைப் பிளந்து அவர்களை விழுங்கப் போகின்றேன்'' என்றார் - முன்னடையாளம். தேவன் கூறியதை மாத்திரம் தான் எடுத்துக் கூறினதாக மோசே ஜனங்களிடம் உரைத்தான். கர்த்தரும் அது உண்மை என்று நிரூபித்தார்.
263. தீர்க்கதரிசினியாகிய மிரியாமும் கூட ஆரோனும் கூட மோசே எத்தியோப்பிய பெண் ஒருத்தியை விவாகம் செய்ததற்காக அவனைப் பரிகாசம் செய்தார்கள். தம்முடைய தாசனுக்கு விரோதமாய் பேசினதற்காக கர்த்தர் கோபம் கொண்டார். அவர் என்ன செய்தார்-? அவர்களை கூடாரத்தின் வாசலுக்கு அழைத்து... மிரியாம் ஒரு தீர்க்கதரிசினியாயிருந்த போதிலும் ஆனால் மோசேயோ, தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேன்மையுள்ளவன். தீர்க்க தரிசியைக் காட்டிலும் மேன்மையுள்ளவன்.
அவர், "நீங்கள் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா-? உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல. உங்களுக்கு தேவன் இடத்தில் பயமில்லையா-?'' என்று கேட்டார். அவள் அந்த நிமிடமே குஷ்டரோகியாகி, அரை மரணம் எய்தினாள். அது உங்களுக்குத் தெரியும். 
264. யோவான் ஸ்நானனைக் குறித்தும் அவர் அப்படிக் கூறவில்லையா-? ''எதைப் பார்க்கப் போனீர்கள்-? தீர்க்கதரிசியையோ ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே.' அவன் ஏன் தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேன்மையுள்ளவனாகக் கருதப்பட்டான்-? அவன் உடன் படிக்கையின் தூதன் - அவன் இரு யுகங்களையும் ஒருங்கே இணைத்த உடன்படிக்கைப்பெட்டி.
இன்றைக்கு நமது மத்தியிலுள்ள மகத்தான பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவர். தேவன் தமது வார்த்தையை நிரூபிக்க, வார்த்தையுடன் நமது மத்தியில் பிரத்தியட்சமாயிருக்கிறார். அவர் தீர்க்கதரிசிகளைப் பார்க்கிலும் ஆயிரம் மடங்கு மேலான கிரியைகளைச் செய்து கொண்டு வருகிறார்.
265. மகத்தான தீர்க்கதரிசிகளில் ஒருவனாக, அவன் காலத்தில் விளங்கிய எலியா, அவனது வாழ் நாளில் - சுமார் 80- ஆண்டு காலத்தில் - இயற்கைக்கு மேம்பட்ட 4 கிரியைகள் மாத்திரமே செய்தான். இரட்டிப்பான ஆவியைப் பெற்றிருந்த எலிசா, 8 கிரியைகளைச் செய்தான். ஆனால் நாமோ ஆயிரக் கணக்கான கிரியைகள் நமக்கு முன் நிகழ்வதைக் கண்கூடாகக் கண்டு இருக்கிறோம். அக்கினி ஸ்தம்பத்திலுள்ள கர்த்தருடைய தாதனைப் பாருங்கள். விஞ்ஞான ஆராய்ச்சி அதை உலகெங்கும் கொண்டு சென்று உள்ளது. அதன் மூலமாகவே அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
266. அந்த ஆட்டுக்குட்டியானவர் என்ன செய்தார்-? அந்த கர்த்தருடைய தூதனாவர்-? - அவர் தான் கிறிஸ்து. அதை நீங்கள் நம்புகின்றீர்கள். யோவான். 6-ல், அவர்களெல்லாரும் இந்த தண்ணீரைக் குடித்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். அப்பொழுது அவர், ''நானே வானத்திலிருந்திறங்கிய ஜீவ அப்பம். நானே வனாந்தரத்திலிருந்த கன்மலை'' என்றார்.
அவர்களோ, “நீ பைத்தியக்காரன் என்று இப்பொழுது அறிந்து கொண்டோம், உனக்கு பிசாசு பிடித்திருக்கிறது'' என்றனர். சில சமயங்களில் ஒருவிதமான ஆவி ஜனங்களை ஆட்கொள்ளும் போது, அவர்கள் அதிக பக்தியுள்ளவர்கள் போல் காணப்படுகின்றனர்.
அவர்கள், “நீ ஒரு பிசாசு; உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது. நீ ஒரு சமாரியன்; உனக்குள் பிசாசு குடிகொண்டிருக்கிறது'' என்றனர். மேலும் அவர்கள், ''
உனக்கு இன்னும் 50- வயது கூட ஆகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டதாகக் கூறுகின்றாயே-!'' என்றனர்.
(அவர் இரண்டு அடி பின்னால் வைப்பதை என்னால் காணமுடிகின்றது.) அவர் ''நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்'' என்றார். ''ஆபிரகாம் உண்டாகிற தற்கு முன்னமே நான் இருக்கிறேன்.'' 
267. அவர் தான் முட்செடியில் காணப்பட்ட எரியும் அக்கினி - அக்கினி ஸ்தம்பம். அவர் மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடெழுந்த பின்பு, பவுல்; அவரைத் தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் சந்தித்த போது, அவர் அப்பொழுது அக்கினி ஸ்தம்பத்திற்குத் திரும்பி விட்டார். “நான் பிதாவின் இடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் பிதாவினிடத்திற்குப் போகிறேன்'' என்றார் அவர். பேதுரு சிறைச்சாலையில் இருந்த போது, அக்கின ஸ்தம்பம் அதனுள் பிரவேசித்து, கதவுகளைத் திறந்து அவனை வெளியே கொண்டு வந்தது. அது உண்மை.
268. அந்த அக்கினி ஸ்தம்பம் அவர்களை எங்கு வழி நடத்தினது-! மோசே அந்த அக்கினி ஸ்தம்பம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் அந்த அக்கினி ஸ்தம்பத்தின் கீழ் அபிஷேகம் பெற்ற தலைவனாயிருந்தான். அவனுடைய செய்தியை அக்கினி ஸ்தம்பம், அற்புதங்களாலும் அடையாளங்-களாலும் உறுதிப்படுத்தினது. அந்த அக்கினி ஸ்தம்பம் தேவன் வாக்குத்தத்தம் செய்த தேசத்திற்கு ஒரு நாள் அவரே மாம்சத்தில் தோன்ற இருக்கும் ஸ்தலத்திற்கு- அவர்களை வழி நடத்தினது. அது சரியா அவர்கள் என்ன செய்தார்கள்-? அவர்கள் முறுமுறுத்து, ஒரு சாதாரண ஆட்டுக் குட்டியின் இரத்தத்தின் கீழ் மாத்திரம் இருப்பதை அவர்கள் நிரூபித்தார்கள். 
269. ஆனால் இந்த சமயத்தில் - கர்த்தருக்கு மகிமை - நமது மத்தியில் நாம் கண்டு கொண்டிருக்கும் இந்த அக்கினி ஸ்தம்பம் நம்மை ஆயிரம் வருட அரசாட்சிக்கு வழி நடத்தும், இந்த யாத்திரைக்குப் பிறகு, அந்த மகத்தான ஆயிரம் வருட அரசாட்சிக்காக அவர் தமது ஜனங்களிடம் திரும்ப வருவார். அங்கு நாம் அவருடன் நித்திய காலமாய் வாழ்வோம். அவர் எப்பொழுதும் ‘பிதாவின் வார்த்தையை' கொண்டிருக்கிறார். அது சரியென்று அவர் எக்காலத்தும் நிரூபித்து வருகின்றார். 
270. நாம் ஒரு யாத்திரையில் பிரவேசித்திருக்கின்றோம். இன்னும் சிறிது நேரத்தில், ஒலி நாடாக்கள் பதிவு செய்வதை நாம் நிறுத்திவிடப் போகின்றாம். என் நண்பர்களே, என் சகோதரரே இங்கு வந்திருப்பவர்களே, இந்த ஒலி நாடாவைக் கேட்பவர்களே உங்களுடைய சகோதரன் என்ற முறையிலும், தேவனுடைய ராஜ்யத்தின் குடிமகன் என்ற முறையிலும் இந்த யாத்திரைக்-காக வெளியே வாருங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இதில் கைவிடப்பட்டவர் அனைவரும் மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்வார்கள். பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்; இந்த குழப்பத்தை விட்டு வெளியே வாருங்கள்; ஸ்தாபனங்களை விட்டு வெளியே வந்து, ஜீவனுள்ள தேவனை ஆராதியுங்கள். உடன்படிக்கையின் தூதனான இயேசு கிறிஸ்து, தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணவில்லை. அவர் முதலாம் யாத்திரையின் போதும், இரண்டாம் யாத்திரையின் போதும் அக்கினி ஸ்தம்பமாக இருந்து அவைகளை வாய்க்கச் செய்தார். இப்பொழுதும் அவர் அதே அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் இருந்து கொண்டு, மூன்றாம் யாத்திரையில் பங்கு கொள்கிறார். 
271. முதலாம் யாத்திரையின் போது அவர் என்ன செய்தார்-? ஒரு இயற்கை தேசத்தை விட்டு அவர்களை வெளியே கொணர்ந்து, மற்றொரு இயற்கை தேசத்துக்குள் வழி நடத்தினார். 2-ம் யாத்திரையின் போது, அவர் ஒரு வகை ஆவிக்குரிய நிலையிலிருந்து அவர்களை வெளியே கொணர்ந்து, பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்குள் வழி நடத்தினார். இப்பொழுது அவர் பரிசுத்தாவியின் அபிஷேகத்தில் இருந்து நித்திய தேசத்துக்குள் வழி நடத்துகின்றார். அங்கு ஆயிரம் வருட அரசாட்சி நடைபெற்று. அது நித்தியமாக இருக்கும். அதே அக்கினி ஸ்தம்பம், அதே அபிஷேகத்தின் முறையைக் கைக்கொண்டு, அதே தேவன் அதே கிரியைகளைச் செய்கிறார். முதலாம் யாத்திரையைக் குறித்தும், இரண்டாம் யாத்திரையைக் குறித்தும் அதே தேவனுடைய வார்த்தை தான் உரைத்துள்ளது. அதே தேவனுடைய வார்த்தை தான் 3-ம் யாத்திரையைப் பற்றியும் கூறுகின்றது. அதை நாம் இப்பொழுது காண்கிறோம்.
272. வெளியே வாருங்கள். ஓ, அந்த குழப்பத்தை விட்டு வெளியே வாருங்கள். ஜீவனுள்ள தேவனிடத்திற்கு வாருங்கள். தேவனுடைய வார்த்தைக்கு வாருங்கள். ''வார்த்தை மாம்சமாகி.... நமக்குள்ளே வாசம் பண்ணினார்." இப்பொழுது அவர் நமது சரீரத்திற்குள் (வார்த்தையாக) இருந்து கொண்டு, நமது மத்தியில் வாசம் செய்கிறார். வெளியே வந்து, ஜீவனுள்ள தேவனை ஆராதியுங்கள். நாம் தலை வணங்குவோம்.
(சபையிலுள்ள ஒருவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார் - ஆசிரியர்). 
273. நாம் தலைகளை வணங்கினவாறு.... உங்கள் ஆத்துமாவின் ஆழத்தில் இருந்து, உங்களுக்குள்ள எல்லாவற்றின் ஆழத்திலும் இருந்து... உலகின் காரியங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டு, தேவனுக்காக வாழுவேன் என்று பிரதிக்ஞை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு அந்த எண்ணம் இல்லை என்றால், பெயரளவில் அவ்வித பிரதிக்ஞை செய்ய வேண்டாம். ஆனால் நீங்கள் இருதயப் பூர்வமாக அத்தகைய எண்ணம் கொண்டிருந்தால், நீங்கள் திடமாக நம்பினால் .... இயேசு தமது ஊழியத்தின் முடிவில், "நீங்கள் இப்பொழுதாவது நம்புகின்றீர்களா-?'' என்று கேட்டது போல், 
274. இவையாவும் உண்மையென்று நம்புகின்றீர்களா-? இவை தேவனால் அற்புதங்களாலும் அடையாளங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டவை. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். நீங்கள் உண்மையாகவே கிறிஸ்துவினிடம் வர விரும்பினால், அலட்சியமாயுள்ள ஸ்தாபனங்களிலிருந்தும், உலகத்தின் கருத்துக்களினின்றும் வெளியே வந்து, உங்களை முழுவதுமாக அவரிடம் சமர்ப்பித்து, ஆசீர்வதிக்கப்பட்ட தேசத்தையடைய யாத்திரையில் செல்ல விரும்பினால் - நாங்கள் ஜெபம் செய்யும் போது, உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா-? நீங்கள் ஒவ்வொருவரும் உண்மையாகவே வெளியே வர வேண்டுமென்று விரும்புகின்றீர்களா-? 
275. பரமபிதாவே, கரங்களை உயர்த்தியிருப்பவர்கள் வெளியே வரட்டும். பரிசுத்தாவியானவர் தாமே, தேவனுடைய வார்த்தையின் வாக்குத் தத்தத்தின் பேரில், அவர்களுடைய இருதயங்களில் அசைவாடுவாராக. சபையாரின் மத்தியிலிருந்து ஏறக்குறைய இருபது கரங்கள் உயர்த்தப்பட்டன என்று நினைக்கிறேன். பிதாவே, இது உண்மையென்று அவர்கள் அறிந்து திருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் வெளியே வர விரும்புகின்றனர்.
276. வெளியே வந்த இஸ்ரவேல் ஜனங்கள் 25 லட்சம் பேர்களில் இரண்டு பேர் மாத்திரமே தேசத்திற்குள் பிரவேசித்தனர். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் 120 பேர் சென்றனர். இப்பொழுது உலகம் முடியவிருக்கும் இக்காலத்தில்... "ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும் வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்'' என்று நீர் வேதத்தில் சொல்லியிருக்கிறீர். இந்த வார்த்தை ஒரு போதும் தவற முடியாது. அவை உம்முடைய வைகள்.
ஆண்டவரே, இப்பொழுது நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். இந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் தாமே அவர்களுடைய இருதயங்களை விருத்தசேதனம் செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அவருடைய வார்த்தையின் மூலமாயும், இந்நாட்களின் வெளிச்சத்தின் மூலமாயும், அழைக்கும் தேவன் உடைய சத்தத்தைத் தெளிவாகக் கேட்க அவர்களுடைய செவிகளை விருத்தசேதனம் செய்தருளும். 
277. ஆண்டவரே, இந்த முடியும் தருணத்திலுள்ள தேவனுடைய மகிமையை அவர்கள் காணத்தக்கதாக அவர்கள் கண்களைத் திறந்தருளும். "என் பிதா-வானவர் எனக்குக் கொடுத்த யாவும் என்னிடத்தில் வரும், அவர்களைக் கடைசி நாளில் எழுப்புவேன்'' என்று நீர் கூறியிருக்கிறீர். 
278. ஆண்டவரே, இதைப் புரிந்து கொள்ளக் கூடாத அனேகர் இங்கு இருக்கலாம், அவர்களுடன் நீர் ஈடுபட்டு, புரிந்து கொள்ள அவர்களுக்கு வேறொரு தருணம் அளிக்க வேண்டுமென்று மன்றாடுகிறேன். நீர் உமது வார்த்தையின் மூலம் பேசி, உம்மை நிரூபித்துக் காண்பித்து, இயற்கைக்கு மேம்பட்ட சத்தத்தினால், பிறகு ஒரு வியாக்கியானத்துடன் எங்களுடன் பேசி, உமது கிரியைகள் வேதப்பிரகாரம் உண்மையென்பதை நிரூபித்து வருகிற-தையும் அவர்கள் செவிகள் கேட்கின்றன. 
279. தேவனே, எங்கள் பாவங்களை மன்னிக்க வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்கிறோம். ஆண்டவரே, ஒரு வாரத்துக்கு முன்பு நான் தரையில் கிடத்தியிருந்த, மரித்துப் போயிருந்த மனிதனின் மீது படுத்த போது, பரிசுத்த ஆவியானவர் அவனை உயிரோடெழுப்பினதைக் கண்டேன். அவனுடைய கண்கள் தலைக்குப் பின்பாகத்தில் போயிருந்தன. அவன் மரித்து கிடந்தான். ஒரு சில வார்த்தைகளினால் உமது நாமத்தைக் கூப்பிட்ட மாத்திரத்தில் அவன் உயிர் பெற்றான். இன்றும் அவன் உயிரோடிருக்கிறான்.
பவுல் நீண்ட நேரம் பிரசங்கம் செய்த போது, அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு வாலிபன் ஜன்னல் வழியாய் கீழே விழுந்து மாண்டு போனான். பவுல் அவன் மீது குப்புறப்படுத்த போது, அவன் உயிர் அவனுக்குள் திரும்ப வந்தது. அன்று உயிரை மீண்டும் அளிக்கக்கூடிய அதே தேவன் இன்றும் எங்கள் மத்தியில் இருக்கிறீர். 
280. பிதாவே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவிசுவாசி ஒருக்கால் விசுவாசியாமல் இருக்கலாம். ஆனால் ஆண்டவரே, நாங்கள் விசுவாசிக் கிறோம். உம்மை நீர் எங்களுக்கு நிரூபித்துக் காண்பித்திருக்கிறீர்.
இப்பொழுது என் இருதயத்தின் தியானமும், என் மனதின் சிந்தனைகளும், என் பெலனும், மற்றெல்லாமே தேவனுடைய வார்த்தையில் உருகி ஒன்று படட்டும். ஆண்டவரே, நானும் தேவனுடைய வார்த்தையும் ஒருமித்து, மக்களுடன் தேவனுடைய ராஜ்யத்திற்கு அணிவகுத்து செல்லட்டும். ஆண்டவரே, இதை எங்களுக்குத் தந்தருளும். எங்கள் பாவங்களை மன்னியும், எங்கள் வியாதிகளைச் சுகமாக்கும், உமது ராஜ்யத்தின் பிரஜைகளாக எங்களை ஆக்கும். 
281. ஆண்டவரே, ஞானஸ்நான குளம் திறக்கப்பட்டு, தண்ணீர் ஆயத்தமாய் உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில், ஞானஸ்நானம் கொடுக்கப்படும். இதே சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டபோது, ''விசுவாசித்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்'' என்று வேதம் உரைக்கின்றது.
ஆண்டவரே, உறுமால்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. வியாதியஸ்தர் சுகம் பெற இயேசுவின் நாமத்தினால் இவைகளை ஆசீர்வதிக்கிறேன். 
282. எங்கள் ஆராதனைகள் நீண்டு போவதால், நேரம் அதிகமாகி விடுகிறது. விதைப்பதற்கு நிலம் இருக்கும் போதே, நாம் தேவனுடைய வார்த்தையை விதைக்க வேண்டும். ஏனெனில் குளிர் காலம் வரப் போகின்றது. அதை எங்களால் காண முடிகின்றது. இலைகள் உதிர்கின்றன. எனவே குளிர்காலம் அருகாமையிலுள்ளது என்று நாங்கள் அறிந்து கொள்கிறோம். நாங்கள் தரை மட்டத்தை உழுது, விதை விதைக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.
283. எனவே, பரம பிதாவே, ஒவ்வொரு இருதயத்தோடும் நீர் பேச வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். ''விசுவாசித்தவர்கள் ஞான ஸ்நானம் பெற்றார்கள்" என்று வேதம் உரைக்கின்றது. ஆண்டவரே, விசுவாசித்தும், உமது அருமை குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறாத அனேகர் இங்குள்ளனர். அவர்கள் இனிமையாகவும், தாழ்மையுடனும் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு, ஞான ஸ்நானத்திற்கென இக்காலையில் முன் வந்து, உலகத்தின் காரியங்களுக்கு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, இயேசுகிறிஸ்துவின் நாமத்தை தரித்துக் கொண்டவர்களாய், பரிசுத்த ஆவியின் ஒத்தாசை கொண்டு, தேவபக்தியுடன் இனி எப்பொழுதும் வாழ கிருபை அருளும்.
ஆண்டவரே, இதற்கென்று அவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 
284. இப்பொழுது நாம் ஆராதனையை சகோ. நெவிலிடம் ஒப்படைக்கின்றோம். நாம் ஞானஸ்நான ஆராதனைக்கு ஆயத்தமாகும் போது, அவர் கூற வேண்டியது ஏதாகிலும் இருந்தால் கூறுவார். கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு 7-30 மணிக்கு மற்ற செய்தியை ஒலிப்பதிவு செய்ய விரும்புகிறேன்.
அது வரைக்கும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக-!